A POEM BY
ATHMAJIV
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
arranged in my bookshelf.
Journey would continue in dark region
I bury all that is holy.
Leaning on the curved moon
I attempt writing the seven hues.
Within my reach
the dream-clusters of mine.
Before flying they are debating on the theme
Butterfly.
Some stars laugh amongst themselves.
Should alight before it grows
Moon’s mercy radiates.
At a distance
At the point of one quarter
Two sculptures entwined
Bearing the leftovers of all too heavy life
In search of lost paradise
And another
Stretching its hand in the wind
goes on throwing away dreams
The soul that goes on wandering
floats in the lawn
Let I remain unknown
In the night
In survival
In death
In dreamy love
In beloved’s heart
and
in the soul of the
Sun aflame.
ஆத்மாஜீவ்
வரவேற்புரை
(அலைந்து திரியும் ஆன்மா)
இவர்களையெல்லாம் நினைவு கூர்கிறேன்
என் அலமாரியில் அடுக்கப்பட்டவர்கள்
இருண்ட பிரதேசத்தில் தொடரும் யாத்திரை
புனிதங்கள் அனைத்தையும் புதைக்கிறேன்
வளைந்த நிலவில் சாய்ந்தபடி
ஏழு வர்ணங்களை எழுதி பார்க்கிறேன்
கைநீளும் தூரத்தில்
என் கனவுக் கூட்டங்கள்
பறப்பதற்குமுன் பட்டாம்பூச்சி தலைப்பில்
விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்
சில நட்சத்திரங்கள் சிரித்துக் கொள்கின்றன
வளர்வதற்குமுன் இறங்கிவிட வேண்டும்
நிலவின் கருணை பிரகாசிக்கிறது
தூரத்தில்
நான்கிலொரு பாகத்தின் புள்ளியில்
இரண்டு சிற்பங்கள் ஒன்றினுள் ஒன்றாக
கனத்த வாழ்வின் எச்சங்களை சுமந்தபடி
இழந்த சொர்க்கத்தை நோக்கி
மற்றும் ஒன்று
காற்றில் கைநீட்டி
கனவுகளை வீசிச் செல்கிறது
அலைந்து திரியும் ஆன்மா
புல்வெளியில் மிதக்கிறது
நான் அறியப்படாமல் போகட்டும்
இரவில்
இருப்பில்
இறப்பில்
கனவுக் காதலில்
காதலியின் இதயத்தில்
மற்றும்
பற்றி எரியும் சூரியனின்
ஆன்மாவில்.
- ஆத்மாஜீவ்
No comments:
Post a Comment