A POEM BY
MOUNAN YATHRIGA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Oh, how many kinds of wind wander in the wood,
You know
While crossing the trees, one kind
While crossing the lawn, another
While crossing the ‘karisal’ land, yet another
While crossing the palm-tree field, yet another
While crossing the rocks, yet another
This wind here, in the hot sunny space
where the bones of the shrubs lie scattered, clinging on our skin
and leaping on our flesh
pervading the blood
and scorching the bones
is different from all others
Oh buddy
Enduring environment ill-suited
animals know not.
For them stomach is supreme
What the intestines say
the hoofs pay attention to.
Listen to what our guts convey
The way it is revealed in our leg.
It goes on
chanting the name of the prey
lying somewhere.
மௌனன் யாத்ரீகா
வேட்டுவம் நூறு
71.
காட்டில் எத்தனை வகையான
காற்று அலைகிறது காண் !
மரங்களை கடக்கும்போது ஒருவிதம்
புல்வெளியைக் கடக்கும்போது ஒருவிதம்
கரிசலைக் கடக்கும்போது ஒருவிதம்
மணல்வெளியைக் கடக்கும்போது ஒருவிதம்
பனங்காட்டைக் கடக்கும்போது ஒருவிதம்
பாறைகளைக் கடக்கும்போது ஒருவிதம்
இதோ, புதர் தாவரங்களின் எலும்புகள்
உதிர்ந்து கிடக்கும் வேனல் வெளியில்
நம் தோலில் தொற்றி கறியில் தாவி
குருதியில் பரவி எலும்பைப் பொசுக்கும்
இந்தக் காற்று அனைத்திலும் வேறுவிதம்
ஏலே பங்காளி
பொருந்தா சூழலைப் பொறுத்தருள்தல்
விலங்குகள் அறியாது
அவற்றுக்கு வயிறே முதன்மை
குடல்கள் சொல்வதை குளம்படிகள் கேட்கும்
நம்முடைய குடலின் மொழி
காலில் வெளிப்படுவதைக் கேள்
எங்கோ இருக்கும் இரையின் பெயரை
அது சொல்லிக்கொண்டே போகிறது.
No comments:
Post a Comment