INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, October 5, 2020

ABDUL HAQ LAREENA'S POEM

 A POEM BY

ABDUL HAQ LAREENA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

I, THE WORD
Words are my tongue
You ask to contain it
Abstain from relishing anything
Words are my hands
You ask to break them;
Punish them for embracing any and all.
Words are my legs
You ask them to be maimed
Chain them so preventing them from
Going anywhere.
Words are my torso
You say that it should be imprisoned always
and made to lie as a corpse.
Words are my very blood
You tell me to turn them frozen.
You always insist on blocking menstruation.
Words are my craving
Words are my angst
Words are my safety
Words are my embrace
Words have become one with me.
By the mercy of words
I escape from this cruel world.
Dropping into your ears
As a tiny thunder
I yell.
As ever sprouting saliva
I keep speaking in your tongues.
My sorrows
My regrets
My sins _
the words within me
keep sucking them secretly
as the Hajar al-Aswad stone.
........................................................................................................................................
Note 😘 Hajar al-Aswad - The Black Stone is a rock set into the eastern corner of the Kaaba, the ancient building in the center of the Grand Mosque in Mecca, Saudi Arabia. (in Kafathullah, Mecca). During Haj, Umra rituals devotees would kiss it.
.........................................................................................................................................
நான் என்பது சொல்
================
சொற்கள் எனது நாக்கு
நீ அதை அடக்கச் சொல்கிறாய்
எதையும் ருசிக்காமல் தடுக்கச் சொல்கிறாய்
சொற்கள் எனது கைகள்
நீ அதை முறிக்கச் சொல்கிறாய்
எதையும் தழுவுவதைத் தண்டிக்கச் சொல்கிறாய்
சொற்கள் எனது கால்கள்
நீ அதை உடைத்துப்போடச் சொல்கிறாய்
எங்கும் நடக்காமல் சங்கிலியிடச் சொல்கிறாய்
சொற்கள் எனது உடல்
நீ அதை சிறையிலடைக்கச் சொல்கிறாய்
எப்போதும் சவத்தைப்போல் கிடத்தச் சொல்கிறாய்
சொற்கள் எனது இரத்தம்
நீ அதை உறையவைக்கச் சொல்கிறாய்
எப்போதும் மாதவிடாயைத் தடைசெய்யச் சொல்கிறாய்
சொற்கள் எனது ஏக்கம்
சொற்கள் எனது தவிப்பு
சொற்கள் எனது பாதுகாப்பு
சொற்கள் எனது அரவணைப்பு
சொற்கள் என்னில் கலந்துவிட்டன.
சொற்களின் கிருபையால்
குரூரமான இந்த உலகிலிருந்து தப்பிச் செல்கிறேன்
உங்கள் காதுகளில்
சிறியதொரு இடியைப்போல் விழுந்து
நான் இரைகிறேன்.
வற்றாது ஊறும் எச்சிலைப்போல்
உங்கள் நாவுகளில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
எனது துயரங்களை,
எனது ஆற்றாமைகளை,
எனது பாவங்களை,
ரகசியமாக, ஹஜ்ருல் அஸ்வத் கல்லைப்போன்று
எனக்குள்ளிருக்கும் சொற்கள்
உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன.

குறிப்பு: ஹஜருல் அஸ்வத் கல் = மக்காவிலே கஃபத்துல்லாஹ்வில் பொருத்தப்பட்டு இருக்கும் ஒரு கல். ஹஜ், உம்ரா கிரியைகளின் போது அதை முத்தமிடுவது வழக்கம்.


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET