INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, October 5, 2020

BOOMA ESWARAMOORTHY'S POEM

 A POEM BY

BOOMA ESWARAMOORTHY


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

While climbing the stairs
a person extended his supportive hand:
‘In the name of sprinkling
they have splashed water everywhere
so slippery –take care’
I thanked him.
Without asking
a person placed by my side
a cup of coffee and two milk candies.
I thanked him.
‘You always wear banians, don’t you -
In the shirt you’re wearing today
stars innumerable
_ Another boy observed.
I thanked him.
Alighting when I went past
the flower vendor
Asking
‘Why aren’t you these days to buy flowers?
asked he and said:
‘Today I have bought ‘Sevvarali’ from market
and have made a garland.
Come in the evening and get it.’
I thanked him.
Two persons who came facing me, said:
The newspaper man is looking for you
Hurry.’
I thanked them.
‘Your son only who comes daily
I would enquire after your welfare’
said the newspaper man.
I thanked him.
Turning, when I got into the street
an auto coming close
halted for some commuters to alight.
The driver smiled.
I thanked him.
A crow perching atop another auto
eyed me, seeking me for long.
I thanked it.
Today I am meeting many persons as such.
Thanks very much.

படியேறும் போது ஒருவர் கரம் நீட்டி கை கொடுத்தார்.
தெளிக்கிறேன் என்று தண்ணீரை
கொட்டி வைத்திருக்கிறார்கள்.பார்த்து வாருங்கள்
வழிக்கி விடப் போகிறது
நன்றி சொன்னேன்.
காஃபியும் இரண்டு பால் தித்திப்புகளையும்
ஒருவர் கேட்காமலே என் பக்கம் வைத்தார்.
நன்றி சொன்னேன்.
இன்னுமொரு சிறுவன்
நீங்கள் எப்போதும் பனியன்தான் அணிவீர்கள்.
இன்று நீங்கள் அணிந்திருக்கும் சட்டையில்
நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கிறது என்றான்
நன்றி சொன்னேன்.
கீழே இறங்கி பூ விற்பவனை கடந்த போது
அவன் சொன்னான். பூக்கள் வாங்கவருவதில்லையே.
இன்று சந்தைக்குச் செல்லும் போது
செவ்வரளிகள் வாங்கி மாலையாக்கி வைத்திருக்கிறேன்
மாலை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றான்.
உன் விருப்பம், நன்றி என்றேன்.
எதிரே வந்த இருவர் சீக்கிரம் செல்லுங்கள்
நாளிதழ் விற்பவன்
உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறான்.
நன்றி சொன்னேன்.
உங்கள் மகன்தான் தினமும் வருகிறார்.
உங்களை கேட்டுக் கொள்வேன் என்றான்,
நாளிதழ் விற்பவன். நன்றி சொன்னேன்.
திரும்பி வீதிக்கு இறங்கும் போது
ஆட்டோ ஒன்று பக்கம் நெருக்கி வந்து
பயணிகளை இறக்கி விட்டது
ஒட்டுநர் புன்னகைத்தார்.நன்றி சொன்னேன்.
மற்றுமொரு ஆட்டோ மீதிருந்த காகம்
நீண்ட நாள்தேடுதலுடன் பார்த்தது.
நன்றி சொன்னேன்.
இன்று நிறைய பேர்களை சந்திக்கிறேன்.
நன்றிகள்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024