A POEM BY
P. THANANJEYAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
The roadside songs
that come dragging along the yesterday
in pain
sound hopefully in the city streets till date.
The woeful drumbeats
Stretching arms for alms
_ walking on a lone wire
hitting oneself with the whip
Munching old bulbs
The wagons coolly go past.
Those who dwell on the roads
All through their lives
Go begging near the temple
Stand at the entrance of hotels
Wander in the beach
Even now.
Though the city has flourished so much
It has nurtured just a handful of
merciful hearts.
There lies the query pertaining to their hunger.
That there are a few
hopefully going in the last rickshaw
lends beauty to the city.
The glance that so coolly goes past the poor
remains the same forever.
Please don’t say that one word
again and again.
If you do just that _
voicing that word and move past
That word is nothing but
You and I.
ப.தனஞ்ஜெயன்
நேற்றைய நாளை
துன்பத்தோடு நகர்த்திவரும்
தெருவோர பாடல்கள்
நகரத் தெருக்களில் இன்றுவரை
நம்பிக்கையோடு ஒலிக்கிறது
ஒற்றைக்கம்பியில் நடந்தும்
சாட்டையால் அடித்துக்கொண்டும்
பழைய பல்புகளை மென்று
கையேந்தும்
மேள இசையின் துன்பங்களை
கடந்து செல்கிறது வாகனங்கள்
பிளாட்பாரங்களில் தன் வாழ்நாளை அமைத்துக்கொண்டவர்கள்
யாசகத்திற்காகக் கோவிலையும்
ஓட்டல் வாயிற்படிகளையும்
கடற்கரையிலும் உணவின் தேவையைத் தேடி இன்றளவும் திரும்புகின்றனர்
நகரம் இத்தனை வளர்ச்சியடைந்தும்
ஒரு சில கருணைப்பார்வைகளையே வளர்த்திருக்கிறது
அதில் அவர்கள் வயிற்றுப் பசிக்கான
கேள்வி இருக்கிறது
கடைசி ரிக்க்ஷாவில்
நம்பிக்கையோடு பயணிக்கும்
ஒரு சிலர் இருப்பது
நகரத்திற்கு அழகு சேர்க்கிறது
சாமானியர்களைச் சாதாரணமாக
கடந்துவிடும் பார்வை
எக்காலத்திலும்
மாறாமலிருக்கிறது
ஒரு வார்த்தையை மட்டும்
மீண்டும் மீண்டும்
சொல்லி விடாதீர்கள்
அப்படி மீண்டும் அந்த வார்த்தையை
சொல்லி நகர்வீர்கள் என்றால்
நீங்களும்
நானும்தான் அந்த வார்த்தை.
ப.தனஞ்ஜெயன்.
The woeful drumbeats
Stretching arms for alms
_ walking on a lone wire
hitting oneself with the whip
Munching old bulbs
The wagons coolly go past.
Those who dwell on the roads
All through their lives
Go begging near the temple
Stand at the entrance of hotels
Wander in the beach
Even now.
Though the city has flourished so much
It has nurtured just a handful of
merciful hearts.
There lies the query pertaining to their hunger.
That there are a few
hopefully going in the last rickshaw
lends beauty to the city.
The glance that so coolly goes past the poor
remains the same forever.
again and again.
If you do just that _
voicing that word and move past
That word is nothing but
You and I.
ப.தனஞ்ஜெயன்
நேற்றைய நாளை
துன்பத்தோடு நகர்த்திவரும்
தெருவோர பாடல்கள்
நகரத் தெருக்களில் இன்றுவரை
நம்பிக்கையோடு ஒலிக்கிறது
ஒற்றைக்கம்பியில் நடந்தும்
சாட்டையால் அடித்துக்கொண்டும்
பழைய பல்புகளை மென்று
கையேந்தும்
மேள இசையின் துன்பங்களை
கடந்து செல்கிறது வாகனங்கள்
பிளாட்பாரங்களில் தன் வாழ்நாளை அமைத்துக்கொண்டவர்கள்
யாசகத்திற்காகக் கோவிலையும்
ஓட்டல் வாயிற்படிகளையும்
கடற்கரையிலும் உணவின் தேவையைத் தேடி இன்றளவும் திரும்புகின்றனர்
நகரம் இத்தனை வளர்ச்சியடைந்தும்
ஒரு சில கருணைப்பார்வைகளையே வளர்த்திருக்கிறது
அதில் அவர்கள் வயிற்றுப் பசிக்கான
கேள்வி இருக்கிறது
கடைசி ரிக்க்ஷாவில்
நம்பிக்கையோடு பயணிக்கும்
ஒரு சிலர் இருப்பது
நகரத்திற்கு அழகு சேர்க்கிறது
சாமானியர்களைச் சாதாரணமாக
கடந்துவிடும் பார்வை
எக்காலத்திலும்
மாறாமலிருக்கிறது
ஒரு வார்த்தையை மட்டும்
மீண்டும் மீண்டும்
சொல்லி விடாதீர்கள்
அப்படி மீண்டும் அந்த வார்த்தையை
சொல்லி நகர்வீர்கள் என்றால்
நீங்களும்
நானும்தான் அந்த வார்த்தை.
ப.தனஞ்ஜெயன்.
No comments:
Post a Comment