A POEM BY
U.NIZAR
in the sky
the desire to fly alongside
keeps growing inside
To feel the fireflies and rejoice.
To converse with the stars
To wade through the clouds
_ so on and so forth
wishes galore those days.
With my fantasies
sprouting into wings within me
I go flying afar.
Beneath me
surging seas
dense jungles in deep silence.
The mountains would stand tall and erect.
Heeding to the wind
the trees would swing their heads
The groves would stand in delicate splendour
The tenacious Wind
Rivers that flow breaking barricades
Despite falling the waterfalls would
rise up and flow
Many a rise and fall
inherent in Nature
merging in humans too
resulting in empathetic understanding
making it possible for the world to go on.
பறவையொன்று
வானிலே பறந்து போகும் போது
அதனுடன் சேர்ந்து பறக்க
எனக்குள்ளும்
ஆசை வளர்கிறது
மின்மினிகளைத் தொட்டு மகிழ
நட்சத்திரங்களுடன் உரையாட
மேகங்களிடையே புகுந்து செல்ல
இன்னுமின்னும்
எத்தனையோ ஆசைகள்
அப்போதெல்லாம்...
எனது கற்பனைகள்
ஒவ்வொரு சிறகாக
எனக்குள் முளைக்க
நான் பறந்து போகிறேன்
எனக்குக் கீழே
பொங்கும் கடலலைகள்
அமைதி காக்கும் அடர்ந்த வனங்கள்
நிமிர்ந்து நிற்கும் மலைகள்
காற்றுக்கு இணங்கி ...
தலையசைக்கும் மரங்கள்
ஒய்யாரமாய் நிற்கும் சோலைகள்
அடம் பிடிக்கும் காற்று
தடைகளை ...
உடைத்துப் பாயும் நதிகள்
வீழ்ந்தாலும்...
எழுந்தோடும் அருவிகள்
இயற்கைக்குள் இருக்கும்
எழுச்சியும் வீழ்ச்சியும்
காலமெல்லாம்
மனிதர்களுக்குள்ளும் இரண்டறக் கலக்க
ஏற்பட்ட புரிந்துணர்வால்தான்
வெகு காலம் பயணம் செய்கிறது
இந்த உலகம்
உ . நிசார்
26 . 08 . 2020
No comments:
Post a Comment