INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, March 19, 2021

ARSHAD AD

 A POEM BY

ARSHAD AD

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

In deep sleep
A dream so tremendous
In that
In a great grand space
I was walking along
There
under a tree
Buddha was meditating
In a spot
Some were nailing Jesus on the Cross
Some more
were praying inside the ‘Masjid’
Several others
were keeping God inside the shrine
and locking it.
My legs take
a different direction
There too deep a pit
Slowly I peep into it
Millions of humans
Are murdering one another
My legs too slipped somewhat
Taken aback I woke up fast.

Arshad AD

ஆழ்ந்த உறக்கத்தில்
ஒரு அதிசயக் கனவு
அதில்,
ஒரு பெருவெளியில் நான்
நடைபழகிக் கொண்டிருக்கிறேன்
அங்கே,
ஓர் மரத்தினடியில்
புத்தர் தவமிருந்து கொண்டிருந்தார்
ஓர் இடத்தில் சிலர்
இயேசுவை சிலுவையில்
அறைந்து கொண்டிருந்தார்கள்
இன்னும் சிலர்
மஸ்ஜிதுக்குள் தொழுது கொண்டிருந்தார்கள்
வேறு சிலர்
கோவிலுக்குள் கடவுளை வைத்து
பூட்டி க்கொண்டிருந்தார்கள்
என் கால்களோ
வேறு திசையில் செல்கிறது
அங்கே,
ஒரு பெரும் பள்ளம்
மெதுவாக எட்டிப் பார்க்கிறேன்
பல கோடி மனிதர்கள்,
ஒருவரை ஒருவர்
கொலை செய்து கொண்டிருந்தார்கள்
என் கால்களும் சற்றுச் சறுக்கியது
பதறிப்போய் கண்விழித்து விட்டேன்.

-அர்ஷத்

MA.KALIDAS

 A POEM BY

MA.KALIDAS


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



The river flowing towards my dunes must be you
In the alchemy of many a day’s absence
You would easily dissolve it
Erase the trails
Till it gets into a different shape
You would keep rolling it on and on
The hurdles confronting
you would dump ashore desiccated
Mocking at the leaping baby fishes
You would show them to the stork’s beak
my image bending down and drinking
you would inhale and turn into nothing
with my sand mound float and wander
like a withered leaf
your escapades casting a spell on me
I lie inert
not throwing open the floodgates
of your fountainhead.
என் மணல்மேட்டை நோக்கி
ஓடிவரும் நதி
நீயாகத் தான் இருக்க வேண்டும்.
நாள் கணக்கில்
காணாமல் போயிருந்த ரசவாதத்தில்
எளிதில் கரைத்து விடுவாய்
சுவடுகளை அழித்து விடுவாய்.
வேறொரு உருக் கொள்ளும் வரை
உருட்டிக் கொண்டே செல்வாய்.
எதிர்படும் தடைகளை
ஈரமே இல்லாமல் கரையொதுக்குவாய்.
துள்ளும் மீன் குஞ்சுகளைப் பரிகசித்து
நாரையின் அலகுக்குக் காட்டிப் கொடுப்பாய்.
குனிந்து பருகும் என் பிம்பத்தை
உள்ளிழுத்து ஒன்றுமில்லாமல் செய்வாய்.
சருகைப் போல
என் மணல்மேடு மிதந்து திரிய
நீ செய்யும் சாகசத்தில் மயங்கி
உன் ஊற்றுக்கண்ணைத் திறக்க
உணர்வற்றுக் கிடக்கிறேன் நானும்.



IYARKKAI(2)

 TWO POEMS BY

IYARKKAI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1.AUTUMNAL CHILD

The pond lay there
childlike
fast asleep
As a withered leaf swaying in the wind
falls down
the child chuckles in sleep.

இலையுதிர்க் கால குழந்தை
****************************

- இயற்கை

குழந்தை போல
அசந்துத் தூங்கிக்கொண்டிருந்தது
குளம்
சருகொன்று காற்றிலாடி விழ
தூக்கத்தில் சிரிக்கிறது
குழந்தை.


(2)A SMALL 'LOVE YOU’
When friends shoulders hug you
While parting with a handshake
Before disconnecting a call so
These days I utter all too easily
Love You
Before Love You
Wherefrom has come this courage
That too, for me…
Terribly surprised
when there are no friends nor calls
I try telling ‘Love You’ to my own self
once in a while.
That I tell ‘Love you’
In different ways to different friends
they know not.
Even if they know
What at all is there in those Love Yous
Except ‘Love You’
But
for me they are
the words of remembrance of
an ancient thirst.
As an acerbic hunting animal
without killing its prey
biting it teasingly
I say “I Love You”.
Going around like this uttering ‘Love You’
proved joyous indeed
till the day I chanced to see
as the shadow of sunny midday
under each Love You
a small
‘Love You’.

இயற்கை

ஒரு சின்ன லவ் யூ
********************
நண்பர்களின் தோள்கள் அணைக்கும் போது
கை குலுக்கி விடைபெறும் போது
அழைப்பைத் துண்டிக்கும் முன் என
இப்போதெல்லாம்
சரளமாக வருகிறது லவ் யூ
லவ் யூவுக்கு முன்னால்
எங்கிருந்து வந்ததோ இந்தத் துணிச்சல்
அதுவும் எனக்குப் போய்
ஆச்சர்யம் மிகுந்து போக
நண்பர்களும் அழைப்புகளுமற்ற வேளைகளில்
எனக்கே கூட அவ்வப்போது
லவ் யூ சொல்லிப் பார்க்கிறேன்
ஒவ்வொரு நண்பரிடமும்
வித்தியாசம் வித்தியாசமாய்
லவ் யூ சொல்வது
அவர்களுக்குத் தெரியாது
தெரிந்தாலும்
அந்த லவ் யூக்களில்
லவ் யூ தவிர என்ன இருக்கிறது
ஆனால்
எனக்கு அவை
ஒரு பழந்தாகத்தின் நினைவுச் சொற்கள்
புளிப்பேறிய ஒரு வேட்டை மிருகம்
இரையைக் கொல்லாமல்
கடித்து விளையாடுவதுபோல்
லவ் யூ சொல்கிறேன்
இப்படி
லவ் யூ சொல்லிக்கொண்டுத் திரிவது
குதூகலமாகவே இருந்து வந்தது
ஒரு நாள்
உச்சிவேளை நிழல் போல
ஒவ்வொரு லவ் யூவின் அடியிலும்
ஒரு சின்ன
லவ் யூவைப் பார்க்கும் வரை.

VIJENDRA

 A POEM BY

VIJENDRA

Translated into English by Latha Ramakrishnan

With fire and water rolling in amalgamation
Revolving to the power of many million times
Ashes of the world above
tumble down at terrible speed….
In the dense shroud of crimson dust
just two go searching for the cruelties of war
holding lantern.
Between one star and another
through the black hole
in front of a threshold
where no human had ever set foot….
Please don’t declare
that the lifeline that stretches beyond sensation
is ghost, Daughter Dear!
Dad’s puff of air _ Dictionary’s pages obscure.
In this space where
even at the distance of ten million light-year
species can live nowhere,
I am not able to free myself from you,
Daughter Dear.

தீயும் நீரும் இணைந்தே உருளும்
பலநூறு ஆயிரம் மடங்கு சுழற்சியில் விண்ணகச் சாம்பல்
கீழே சரிகின்றன வேகமாய் ...
யுத்தத்தில் அடர்ந்த செம்புழுதிப் படலத்தில் இருவரே
யுத்தத்தின் கொடுமைகளை விளக்குடன்
தேடித் திரிகிறார்கள்
விண்மீனிலிருந்து இன்னொரு விண்மீனுகிடையில்
கருந்துளை வழியே மனிதரால் மிதிக்கப்படாத வாயில்
முன் ...
புலனுக்கு அப்பால் நகரும் விரல்ரேகை பேய் என்று
சொல்லிவிடாதே மகளே !
தந்தை யின் காற்று அகராதியின் அரூபப்
பக்கங்கள்
ஓரு கோடி ஒளிவருடங்கள் தொலைவில் கூட
உயிர்கள் வாழ தகுதியற்ற இவ் வெளியில் மகளே உன்னைவிட்டு
விடுபட முடியவில்லை.

BOOMA ESWARAMOORTHY

 A POEM BY

BOOMA ESWARAMOORTHY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


In a land that is neither yours nor mine
I stroll
From the sole of feet to the
crest of head
I am filled with Grass, Plant
Creeper Flowers
Trees
As wind you come and go
to and fro
My leaves due to you
quiver merrily
Butterflies, one and all
float in you
In a moment I would reach my last breath
In a moment
blood would freeze.
In a moment the body would become heavy
as a wooden block
Before that
I should utter that one word
THANKS.

Booma Eswaramoorthy

என்னுடையதல்லாத உங்களுடையதல்லாத
நிலத்தில் உலாவுகிறேன்
உள்ளங்கால்களிருந்து உச்சம்தலைவரை
புற்கள் செடி கொடி பூக்கள்
மரங்களால் நான் நிறைந்தவன்
காற்று போல நீங்கள் வருவதும் போவதும்
போவதும் வருவதுமாக இருக்கிறீர்கள்
எனது இலைகள் உங்களால் மகிழ்வோடு
அலைவுறுகிறது
வண்ணத்துப் பூச்சி
ஒவ்வொன்றும் உங்களில் மிதக்கிறது
ஒரு கணத்தில் இறுதி மூச்சை தொடுவேன்
ஒரு கணத்தில் இரத்தம் உறைந்து போகும்
ஒரு கணத்தில் உடல் மரக்கட்டை போல
கனத்துப் போகும்
அதற்குமுன் அந்த ஒரு வார்த்தையை
நான் சொல்லி விட வேண்டும்
நன்றி.

பூமா ஈஸ்வரமூர்த்தி

ATHMAJIV

 A POEM BY

ATHMAJIV

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

I flow on calm and composed
I can see
that either very near or a little distance away
my stream of fresh water
would dissolve in salt
being not of any use for farming
and drinking
I have to slow down
From the drops that sprout
in my eyes looking back
the grand wish to leave behind
seeds a few
Mark my words
In all yields my name would have sprouted
as yet another seed.
ஆத்மாஜீவ்
நிதானமாக பாய்ந்து கொண்டிருக்கிறேன்
எனக்குத் தெரிகிறது
மிக அருகிலோ சற்று தொலைவிலோ
என் நன்னீரோட்டம்
உப்பில் கரைந்து விடும்
விளைச்சலுக்கும் குடிப்பதற்கும்
உபயோகமற்று
சற்று நிதானிக்க வேண்டியிருக்கிறது
திரும்பிப் பார்க்கும் என் கண்களில்
அரும்பும் துளிகளிலிருந்து
விதைகள் சிலவற்றை
விட்டுச் செல்லும் பேராவல்
குறிப்பெடுத்துக் கொள்
விளைவுகளிலெல்லாம் என் பெயர்
முளைத்திருக்கும்
இன்னுமொரு விதையாக.

MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY

MARIMUTHU SIVAKUMAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


ENTERING INTO THE
LEADER’S SHELL
He deserves to be
reverentially saluted
Advising umpteen number of times
to stay away
from reminding and recalling
they injected the syringe into the brains
and left
Many friends
made seeds from the place
where he had gone
deep down
Those seeds had sprouted
nourished by drinking his blood.
Indeed I came into being
as one of those seeds myriad.
Scorching sun
Rain
Wind
Water – all absorbed
in my growth
Once the wind blew from somewhere
hauled me lock stock and barrel
and slapped me black and blue
on the cheek.
Shell-shocked I stood still
panting
asking why
That many a poisonous injection
had been inserted into my germ
they themselves admit and confirm
Due to that losing my self
I am thrown away by this wind
Now I am not I am
I enter inside the shell
of my embryo.
There HE was waiting to hone me.


தலைவனின் கூட்டில் நுழைதல்.
அவர் வீரவணக்கத்துக்குரியவர்,
அவரை
ஞாபகப்படுத்ததிலிலிருந்து விலகி நிற்கும்படி பலமுறை
மண்டைகளுக்கு ஊசி ஏற்றிச்சென்றனர்.
பல நண்பர்கள்
அவர் புதைந்த வெளியிலிருந்து விதைகளாக்கப்பட்டனர்.
அவ்விதைகள் அவரது உதிரம் குடித்தே முளைவிட்டிருந்தன..
நான் அவ்விதைகளில் ஒருவனாய்
பிறப்பெடுத்தேன்..
கடும் வெயில்
மழை
காற்று
நீர் என்பன
என் வளர்ச்சியின் பால் ஈர்த்து நின்றது.
ஒரு முறை எங்கிருந்தோ வீசிய காற்று
என்னை அப்படியே அள்ளிச்சென்று
சரமாரியாக கன்னத்தில் அறைந்தது.
திகைத்து நின்று
பெருமூச்சிறைத்து
வினவி நின்றேன்.
என் விதையுள்
பல விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக
அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
அதனால் நான்என் சுயத்தை இழந்து இக்காற்றால் எறியப்பட்டுள்ளேன்.
இப்போது
நான் நானாக இல்லை.
என் கருவின் கூட்டிற்குள் நுழைகிறேன்.
அங்கே என்னை பட்டைத்தீட்ட அவர் காத்திருந்தார்.

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS