A POEM BY
NESA MITRAN
We buy dolls and give
Don’t we know the life-time of
plucked flower
let it spread its scent
till that moment.
Is it not for that short-lived joy
we climb thousand steps –
and see a face there
Is it not for that transient heaven
we die a thousand deaths
and resurrect ourselves
Is it not for that minuscule momentary
Kiss
that we live on
Not swallowing the poison
in the larynx?
And also, My Friend
Is it not with the demons
offering us crescent moments
that would force us to say
‘It would be sheer bliss to die now’
that we have pledged our lifelines -
And how?!
உடையத்தான் போகிறது என்பதை
தெரிந்தேதான் வாங்கிக்
கொடுக்கிறோம்
பொம்மைகளை
கிள்ளப்பட்ட மலரின்
ஆயுள் தெரியாதா
அதுவரை மணக்கட்டுமே
அந்த கொஞ்சநேர சந்தோஷத்திற்குதானே
ஆயிரம் படியேறி ஆங்கோர்
முகம் பார்க்கிறோம்
அந்த கொஞ்சநேர சொர்க்கத்திற்குதானே
செத்துச் செத்து பிழைக்கிறோம்
அந்த குறுநொடி முத்தத்திற்குத்தானே
தொண்டைக்குழி நஞ்சை விழுங்காமல் வாழ்கிறோம்
மேலும் இக்கணமே சாகலாம் போல
என்று சொல்லத்தூண்டும் பிறைநொடிகள் தரும்
பிசாசுகளிடம்தானே
ஆயுள்ரேகைகளை அடமானம்
வைத்திருக்கிறோம் சகா
நேசமித்ரன்





No comments:
Post a Comment