A POEM BY
MAGUDESWARAN
It is not just the love of an elephant
From the whirl and swirl of the trunk
Starting from the wink of the tiny eye
Surging through the fanning of the
mammoth earlobe
With the shrink of the central back
Till the left-right swing of the tail
With its entire being
Tumult-ridden
swelling giant wave it is.
Magudeswaran Govindarajan
•
யானைக்கு
உன்னைப் பிடித்துவிட்டால்
அது வெறுமனே
யானையன்பு மட்டுமன்று.
தும்பிக்கைச் சுழற்சி
முதல்
சிறுகண் சிமிட்டல்
தொடங்கி
பெருங்காதுமடல் விசிறல்
வழி
நடுமுதுகுச்
சுருக்கத்தொடு
வாலின்
இடவல ஆட்டம்வரை
உருவெங்கும்
பெருந்தவிப்பாய்த்
திரளும் பேரலை
அது.
No comments:
Post a Comment