INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 30, 2023

RAMESH PREDAN

 A POEM BY

RAMESH PREDAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

MOONDAUGHTER


The little girl who without fail
peeps out of the Full Moon and waves at me
every month has your face
Yes, she too looks like our own daughter dear.
Getting immersed in you on the full moon day
I begot a girl child on the full moon day
_ She who was born with two bodies
One is fast asleep in the adjacent room
The other
through the dream seen by this one
goes to the moon and returns.
I became pregnant with weirdness
and have delivered wonder
What else have you given
your darling daughter
except face
I have given her life
I have given her clan
I have given her language
Above all
I have given you.
In migration
the land and language may alter
But, can one’s mores falter
Will those sprouting from the soil
as bodies
be gone with their roots slain.
Procreation is the natural process
In moon we have planted our seeds.
There when seasonal rain commences on a day
For our clan
there would be another girl child sprouting
Each time when I merge in thee
the seed-coat is torn in the earth
and the shoot stirs erect
In this night
our child
is playing hide-and-seek with her double.
Let’s go to the terrace,
Get up and come, won’t you?
Ramesh Predan
நிலாமகள்

ஒவ்வொரு திங்கள்தோறும் தவறாமல்
முழுநிலாவிலிருந்து என்னை எட்டிப்பார்த்துக் கையசைக்கும் சிறுமிக்கு உனது முகம்
ஆம், அவள் நம்
மகளைப்போலவே இருக்கிறாள்
முழுநிலா இரவில் உன்னைக் கலந்து
முழுநிலா இரவில் மகளை ஈன்றேன்
இரட்டை உடம்போடு பிறந்தவள்
ஒருத்தி அடுத்த அறையில்
அயர்ந்து உறங்குகிறாள்
இன்னொருத்தி
இவள் காணும் கனவின்வழி நிலாவுக்குச் சென்றுவருகிறாள்
நான் விநோதத்தைக் கருத்தரித்து
மாயத்தை ஈன்றிருக்கிறேன்
உன் மகளுக்கு முகத்தைத்தவிர
வேறு எதைக் கொடுத்தாய்?
நான் உயிர்க் கொடுத்தேன்
இனம் கொடுத்தேன்
மொழிக் கொடுத்தேன்
அனைத்திற்கும் மேலாக
உன்னைக் கொடுத்தேன்
புலப்பெயர்வில்
நிலமும் மொழியும் மாறலாம்
இனம் மாறுமோ?
மண்ணிலிருந்து உடம்புகளாக முளைத்தவை
அடிவேர் அறுபட தலைச் சாயுமோ?
இனப்பெருக்கமே இயற்கைத் தகவமைப்பு
நிலாவில் நமக்கான விதையை ஊன்றிவிட்டோம்
அங்குக் காலத்தில் ஒருநாள்
மழைப் பொழியத் தொடங்கும்போது
நமது இனத்துக்கு
இன்னொரு மகள் முளைப்பாள்
நான் உன்னோடு கலக்கும்
ஒவ்வொரு முறையும்
நிலத்தில் விதையுறைக் கிழித்து
நாற்று நிமிர்கிறது
இந்த இரவில்
மொட்டைமாடி முழுநிலாவில்
நம் குழந்தை
தனது இரட்டையோடு
கண்ணாமூச்சி விளையாடுகிறாள்
மாடிக்குப் போகலாம் எழுந்து வா.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE