TWO POEMS BY
MARIMUTHU SIVAKUMAR
She squeezes in her daughter’s feet.
As they had all too often been mended
their original shape had become disfigured
ugly and repulsive.
These are shoes chosen
years ago
from the heap of junks thrown
by the roadside teashop.
Her heart loaded with
daughter’s tearful appeals
repeated over the months
and her belly burdened with
her husband’s liquor-shop balance
to be paid…
she looks at her salary-paper
filled with deductions.
This month also without fail
her hands searched and found the
bag-stitching big needle.
கிழிந்த சப்பாத்து.
இனியும் தைத்திட முடியாத
கிழிந்த சப்பாத்துகளை தன்
மகளின் பாதங்களில்
திணிக்கிறாள்.
அடிக்கடி
செப்பனிடப்பட்டதால்
ஆரம்ப வடிவம்
சிதைந்து
அருவருப்பாய் மாறியிருந்தது அது.
தெருக்கடையின்
ஒதுக்கப்பட்ட குவியலிலிருந்து
பல ஆண்டுகளுக்கு முன்
தெரிந்தெடுக்கப்பட்ட சப்பாத்துகள்.
பல மாத
மகளின் கண்ணீர் கோரிக்கையை மனதிலும் கணவனின் கள்ளுக்கடை
பாக்கியை அடி வயிற்றிலும்
சுமந்தவாறு...
கழிப்புகள் நிறைந்து கிடந்த
சம்பளப் பட்டியலை
மீண்டும் ஒருமுறை பார்க்கிறாள்.
கைகள் இந்தமாதமும்
கோணி ஊசியை
தேடி எடுத்தன..
~~
மாரிமுத்து சிவகுமார்
On all four sides
containers big and small are kept
To collect water
In one corner my grandma remained huddled
Accustomed to the leakage down the years.
Grandma would tell stories aplenty
Real and imaginary
To be relished by me.
In order to make me sleep
Grandma would stroke my head and
Weave a story made of many an incident
And stage them on the bed.
grandma’s tales were filled with
the song of liberation.
Grandma’s skill and expertise as a story-teller
had the essence of all the tricks of leaders
Poor Grandma
With no mike at hand she began narrating
the story of leaking huts ever so many
Wailing and lamenting.
In order to calm my agitated grandma
and safely place her somewhere
taking her hands I search for a dry spot in the house.
Even then she gestured to me
promising to tell me more stories for me.
Somehow finding a tiny slot
I make her lie down in that corner
and search for a lamp to write her story.
There the glow of the light stirred
into a great grand flame
Resolved to burn many heads crowned
the long steady trail of grandma
Lend more radiance to the shine.
Collecting that flame in her palms
She scatters it in the space filled with the
torment of her tales
Out of her story
a new chapter comes to be.
புதிய அத்தியாயம்.
மழை விடுவதாயில்லை,
அடைமழையில் நனைந்தபடி வீட்டினுள் நுழைகிறேன்..
வீட்டின் நாற்புறமும் ஒழுகும் நீரை சேமிப்பதற்காக சட்டி முட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன,
ஒரு ஓரமாய் நனைந்தபடி என் பாட்டி
கால காலமாய் ஒழுகும் நிலைக்கு பழக்கப்பட்டவளாய் சாய்ந்திருந்தாள்.
பாட்டி பல கதைகளை எனக்காக நிஜமாகவும் கற்பனை செய்தும் ஒப்புவிப்பாள்.
பாட்டி என்னை தூங்க வைப்பதற்காக தலையை தடவி பல சம்பவங்களை கதைகளாக்கி
படுக்கையில் மேடையேற்றுவாள்..
பாட்டியின் கதைகளில்
விடுதலை பாடல் நிரம்பியிருந்தது.
பாட்டியின் கதை சொல்லும் திறனில் தலைவர்களின் ஏமாற்று வித்தைகளின் கருக்கள் புதைந்திருந்தது.
பாவம் பாட்டி
ஒலிவாங்கியின்றி பலத்த குரலில் பல குடிசைகளின் ஒழுகும் கதையினை கதற ஆரம்பித்தாள்...
அமைதியிழந்த பாட்டியை
இருக்க வைக்க
கரங்களை பிடித்து நனைந்திடாத இடமொன்றை வீட்டினுள் தேடுகிறேன்.
அப்போதும் பல கதைகள் எனக்காக சொல்லப்போவதாக தலையசைத்து காண்பித்தாள்.
ஒருவாறு மழைக்கு தாக்கு பிடிக்கும் வீட்டின் ஒரு ஓரத்தில் பாட்டியை சாய்த்து அவளது கதையை எழுத, விளக்கு வெளிச்சத்தை தொடுகிறேன்..
அங்கே
விளக்கின் ஒளி பெரும் சுடராய் எழுந்தது
தலைமைகளின் தலைகளை சுட்டெரிப்பதாய் திடம் கொண்டது
பாட்டியின் கடந்து வந்த சுவடுகள்
அச்சுடரை மேலும் பிரகாசமாக்கியது
அத்தீப் பிளம்பை கையில் அள்ளியவள்
தன் கதைகளின் வேதனை வெளிதனில் அள்ளி வீசுகிறாள்
அவளது கதையிலிருந்து
புதியதொரு அத்தியாயம் எழுகிறது.
~~~~
மாரிமுத்து சிவகுமார்.
No comments:
Post a Comment