A POEM BY
VATHILAIPRABHA
She lay under the spell of that splendid dream-fortress
Collecting all her nights and piling them up brick by brick
had she built that castle so spontaneously
not thinking whether it should be a shrine or a mansion
Please don’t wake her up – who went to sleep
Telling herself that it is indeed a dream-castle.
The doors of the nights inside her
_ Oh, please don’t ever slam them shut
In the remaining hours when the work
for decorating the mansion
to be done
she sleeps.
Just as the great grand curtains
adorning the massive rooms
sway wave-like in the gusty wind
someone knocks at door.
Someone is disturbing her sleep.
She fast asleep
is not able to stir
Plunged in sleep she lay
In the mistresses’ quarters of the mansion.
Moaning she rolled over
and sunk into sleep again
not knowing the fact
that the key of that mansion
built wholesome on a day
one night
is lost.
Night after night someone or other went on knocking at her door.
On a day when she deprived of sleep
feel drowsy again
the key of her own, she might regain.
ஆழ்ந்த உறக்கத்தில் கட்டமைத்த கனவுக்கோட்டையின் ஒய்யார அழகில் மயங்கிக் கிடந்தாள்.
அவளின் இரவுகளையெல்லாம் சேகரித்து ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கி
ஓர் ஆலயமோ மாளிகையோ என யோசிக்காது கட்டிய கோட்டை அது..
கனவுக்கோட்டைதான் என தனக்குள் சொல்லியபடி தூங்கிப் போனவளை எழுப்பாதீர்கள்!
அவளுக்குள் இரவுகளின் கதவுகளை
ஒருபோதும்
படாரென அறைந்து சாத்தாதீர்கள்..
மாளிகையை அலங்கரிக்கிற பணிகள்
மிச்சமிருக்கிற பொழுதுகளில்
அவள் உறங்குகிறாள்.
அறைகளை அலங்கரிக்கிற
பெரும் திரைச்சீலைகள்
காற்றின் வேகத்தில் அலையிடுகிறமாதிரி
கோட்டையின் பிரமாண்ட வாயிற்கதவைத் தட்டுகிறார்கள்.
அவள் உறக்கத்தை யாரோ
கலைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவளால் விழிக்க முடியவில்லை..
ஆழ்ந்த உறக்கத்தில்
மாளிகையின் அந்தப்புரம் இருந்தாள்.
முனகியபடி புரண்டு படுத்தவள்
மீண்டும் உறங்கிப் போனாள்.
ஒரு நாள்
ஓர் இரவில்
முழுமையாகக் கட்டிய மாளிகையின் திறவுகோல் தொலைந்து போனது என்பதை அறியாமல்
மீண்டும் வாயிற்கதவு தட்டப்பட்டது...
ஒவ்வொரு இரவும் அவளுக்காக யாரோ தட்டிக்கொண்டிருந்தார்கள்.
உறக்கம் கலைந்தவள் .
மீண்டும் உறங்கும் ஒருநாள் அவளுக்கெனக் கிடைக்கலாம்...
அத் திறவுக்கோல்
வதிலைபிரபா
No comments:
Post a Comment