INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, January 31, 2023

KADANGANERIYAN ARIHARASUTHAN

 A POEM BY 

KADANGANERIYAN ARIHARASUTHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Late at night seeing the doctor in Pettai he returns
carrying his daily routines in his backpack
Unmindful of the buzzing traffic of the ’Rettai paalam’
an insane person is sketching a portrait in the air
and conversing with it.
He who lives almost like a frog
Neither there
Nor here
tries to translate him in vain
and speeds past.
In the Sulochana Mudaliar bridge
that boy
Is still fighting for a rise in daily-wage.
The figure of Krishnaswamy who gave his support
for making Kanimozhi a Rajyasabha MP
surfacing
If crushed under the wheel
After everything has become opportunism
is there any value for conscience
_so asked a voice which I refuted
Reaching the nest in Vannarpettai
shared with a few of my friends
unable to eat and sleep
I set out towards the steps of the temple tank
where Peraachi amman is sitting.
Death is there having thrown his fishhook
in Thamirabarani
for ‘Madhi’
and lying in wait.
The water-level keeps rising and falling.
True
Between the two
feeling his land and the strength of his feet
he kicks away
this globe colossal...

Kadanganeriyaan Ariharasuthan

பின்னிரவில் பேட்டையில் மருத்துவரைப் பார்த்துவிட்டு தன்னுடைய அன்றாடங்களை முதுகுப் பையில் சுமந்தபடி திரும்புகிறான்
அந்நேரத்திலும் ரெட்டைப் பாலத்தின் சுறுசுறுப்பான போக்குவரத்தை சட்டை செய்யாது
சித்த பிரமை பீடித்தவன் ஒருவன்
காற்றில் ஒரு சித்திரத்தை வரைந்து அதனோடு
உரையாடிக் கொண்டிருக்கிறான்
சற்றேறக்குறைய
அங்குமில்லாது
இங்குமில்லாது
தவளையைப் போல வாழ்பவன்
அவனை மொழிபெயர்க்க முயன்று தோற்று
வாகனத்தை விரட்டுகிறான்
சுலோச்சனா முதலியார் பாலத்தில்
அந்தப் பாலகன்
இன்றும் கூலி உயர்விற்காகப் போராடிக் கொண்டிருக்கிறான்
கனிமொழியை ராஜ்யசபா உறுப்பினராக்க
ஆதரவு கொடுத்த கிருஷ்ணசாமி யின் உருவம்
மேலெழ
அதனை சக்கரத்தில் நசுக்கினால்
எல்லாம் பிழைப்புவாதமென்றாகிப் போன பின்பு
மனசாட்சிக்கு என்ன மரியாதை எனக் கேட்ட குரலை மறுதலித்தேன்
சேக்காளிகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கும்
வண்ணார்பேட்டை யில் அமைந்திருக்கும் கூடடைந்து
உணவும் கொள்ளாமல்
நித்திரையும் வராமல் போக
பேராச்சியம்மன் அமர்ந்திருக்கும் படித்துறை
நோக்கிப் போகிறேன்
காலன் தன் தூண்டிலை
தாமிரபரணியில்
மதிக்காக வீசிவிட்டு
காத்திருக்கிறான்
ஏறி
இறங்குவதாக இருக்கிறது
நீர் மட்டம்
வளர்வதும்
தேய்வதுமாக நிலவு
உண்மை
இரண்டுக்கும் இடையில்
தன் நிலத்தையும்
பாதங்களின் பலத்தையும்
உணர்ந்தவன்
உதைத்துத் தள்ளுகிறான்
இப் பெருங் கோளத்தை...

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE