A POEM BY
THENMOZHI DAS
Snow’s glow
has ripened.
Sweat-droplets of Space
sparkle upon silvery stars
as lust pristine.
In the two hands of nights
Lifelines vary
The place as usual
lies curling as yet another shoot
that darkens for tomorrow
inside the stem.
A suprme void
A saint renouncing all hungers
ஒப்பற்ற வெறுமை
---------------------------------
பனியின் சுடர்
பழகிய நிலா
பழுத்துவிட்டது.
வெளியின் வியர்வைகள்
வெள்ளி நட்சத்திரங்களின் மேல்
காமமாய் மின்னுகின்றன.
இரவின்
இருகரங்களிலும்
ரேகைகள் மாறுபட்டிருக்கின்றன.
ஊர் என்றைக்கும்போல்
தண்டிற்குள் நாளைக்கென இருளும்
மற்றுமொரு தளிராய் சுருண்டு படுக்கிறது.
ஒரு ஒப்பற்ற வெறுமை
பசிகள் அத்தனையும் துறந்த துறவி
No comments:
Post a Comment