INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 30, 2023

IYYAPPA MADHAVAN

A POEM BY 

IYYAPPA MADHAVAN 

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Street Dogs have no Savings bank Account
They neither deposit nor withdraw money
They eat what is strewn on the roads
They need not go to restaurants
The street dog is not in the habit of clothing itself
For all festivals it wears nudity as its dress
Further it doesn’t write story or poem
No need to feel anguished for not having its name
in the Poetry-Symposium.
No need to accept bribe and vote accordingly.
No need to stand behind the politician
and shout slogans.
No need to drink Tasmac liquor
and with liver burnt
breathe his last
nor tumble down at the launching of
movie-monarchs’ new ventures
and make his final departure.
No need to remonstrate against
the venom-filled act of mixing
shit in drinking water
no need to decry those caste-fanatics
who didn’t allow the dhalits inside the temple
No need to print books and release the first copies.
No need to feel low
for the sales being not average, but well below.
No need to be part of the paraphernalia
of self-appointed saviours, mentors and champions.
No need to be at the beck and call of some
For winning award wholesome.
no need to pay currency in bundles.
No need to be known to the P.M or C.M or
Some minister
Dog amidst humans sans tail.

தெரு நாய்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கில்லை
அதற்கு பணம் போடும் பழக்கமோ எடுக்கும் வேலையோ இல்லை
சாலைகளில் பொறுக்கித் தின்னும்
அதற்கு உணவு விடுதிகளுக்கு செல்ல வேண்டியதில்லை
ஆடை உடுத்தும் வழக்கமில்லை
எல்லாப் பண்டிகைகளுக்கும்
ஒரே நிர்வாண உடுப்புத்தான்
மேலும் கதையோ
கவிதையோ எழுதுவதில்லை
கவிதை வாசிப்பில்
தன் பெயரில்லையென வருந்த வேண்டியதில்லை
லஞ்சம் வாங்கி ஓட்டுப் போடத் தேவையில்லை
அரசியவாதி பின்னால் நின்று
கோசம் போட வேண்டியதில்லை
டாஸ்மாக் சாராயம் குடித்து
குடல் வெந்து சாக வேண்டியதில்லை
உச்ச நட்சத்திரத்தின்
பட வெளியீட்டில் விழுந்து
சாக வேண்டியதில்லை
குடி நீரில் மலம் கலந்தவனுக்கு
எதிர்ப்புக் காட்ட வேண்டியதில்லை
தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள்
அனுமதிக்காத ஜாதி வெறியர்களைக் கண்டிக்கத் தேவையில்லை
நூல்கள் போட்டு
முதல் பிரதி வெளியிட வேண்டியதில்லை
புத்தகம் விற்கவில்லையென்ற
கவலையில்லை
ஆசான்களில் பின்னால் சென்று கொடி பிடிக்கும் அவசியமில்லை
விருது வாங்க கூஜா
தூக்க வேண்டியதில்லை
கட்டுக்கட்டாய் பணம் கொடுக்க
வேண்டியதில்லை
பிரதமரையோ முதல்வரையோ
அமைச்சரையோ தெரிந்திருக்க
வேண்டியதில்லை
நாய் வாலற்ற மனிதர்களிடையே.

அய்யப்ப மாதவன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE