INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 30, 2023

MA.KALIDAS

 THREE POEMS BY 

MA.KALIDAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1)

The Night is the one and only social shirt
That you have
That you like.
I have several cloth-bits with me
May I stitch the visible tears
Leaving no trace?
Wearing the night
When each time you go out and return
You come with stain.
For the stain-removers
Have to wander around throughout the day
In the night-shirt that never tire you out
Oh, blinding dark Dirt everywhere
Won’t you notice at all that a button of the night
that thoroughly covers and uncovers thee
Unfastening and rolling down?
I say that in joy someone has sprayed ‘White’ on your night-shirt
and gone. But, you pay no attention.
Because of lying for all too long during daytime
Your night-shirt has begun to lose its colour
and is turning pale.
At least once
after it has turned fully dry
iron your night
and wear it –alright?

இரவு, உங்களிடம் இருக்கும்
உங்களுக்குப் பிடித்தமான
ஒரேயொரு சமூகச் சட்டை.
என்னிடம் சில ஒட்டுத்துணிகள் இருக்கிறது
தென்படும் கிழிசல்களைக்
கைவசமிருக்கும் ஊசியால்
தடம் தெரியாதபடி தைத்துத் தரவா?.
இரவை அணிந்து கொண்டு
ஒவ்வொரு முறை
வெளியேறித் திரும்பும் போதும்
கறையோடு வருகிறீர்கள்.
கறைநீக்கிகளுக்காக பகல் முழுதும்
அலைய வேண்டியிருக்கிறது.
அலுப்பே ஏற்படுத்தாத இரவுச்சட்டையில் அநியாயத்திற்கு குருட்டு அழுக்கு.
உங்களை முழுவதுமாக மூடித் திறக்கும் இரவின் ஒரு பட்டன்
கழன்று உருண்டோடுவதைக்
கவனிக்கவே மாட்டீர்களா?
குதூகலத்தில் யாரோ
உங்கள் இரவுச் சட்டையில்
வெண்'மை' தெளித்துச் சென்றுள்ளனர். சொன்னால் கேட்கிறீர்களா,
பகலில் நெடுநேரம் கிடந்ததில்
உங்கள் இரவுச் சட்டையின் நிறம்
வெளிறத் தொடங்கிவிட்டது.
ஒருமுறையாவது, முழுதும் உலர்ந்த பிறகு
இஸ்திரி செய்து
உங்கள் இரவை உடுத்துங்களேன்.

- மா.காளிதாஸ்


(2)

Just now the dawn is aligning itself
Birds’ wings flutter towards the opposite direction
The loudspeaker for the housewarming function
blares the identity of the locale
The cow-dung collected
Is poured in the vacant plot.
A squirrel calls out to its mate
The room’s sky undergoes a change
Not knowing why
You revel like a child.
The final word of yester night
goes past drawing a line
Like the Jet plane.
Yet, see there, in that pot-plant
How beautifully blooms
the bud of our mutual smile.

இப்போது தான் அதிகாலை தன்னைத் தகவமைக்கிறது பறவைகளின் இறகுகள் எதிர்த்திசை நோக்கி இல்ல விழாவிற்கான ஒலிப்பெருக்கி அடையாளம் மெய்ப்பிக்கிறது வழித்தெடுக்கப்பட்ட சாணம் காலிமனையில் கொட்டப்படுகிறது ஒரு அணில் தன் இணையை அழைக்கிறது அறையின் வானம் மாறுபாடு அடைகிறது என்னவென்று அறியாமலே ஒரு குழந்தையைப் போல குதூகலிக்கிறாய் நேற்றிரவின் கடைசிச் சொல் ஜெட் விமானத்தைப் போல ஒரு கோடிழுத்துச் செல்கிறது ஆனாலும் பாரேன், தொட்டிச்செடியில் எவ்வளவு அழகாய் மலர்ந்திருக்கிறது நம் பரஸ்பரப் புன்னகையின் மொட்டு.
மா.காளிதாஸ்


(3)
Taking out the Gods one by one
the little girl begins to dry them.
The Satans slipped down come together
and create their own god.
The bats exiting from the cave changing colours
look alike the dove drawn by god’s youngest child
As the Almighty avoiding the usual offerings
began munching the scattered grains
“Hey, what is this, being childish?”
So admonishing a hand jerks it away
For the hungry God
there spring ten more limbs.
The ‘Sokkappanai’ burns gloriously
with leaping flames.

ஒவ்வொரு கடவுளாக எடுத்து
உலர்த்தத் தொடங்குகிறாள் சின்னவள்.
உதிர்ந்த சாத்தான்கள் ஒன்றுகூடி
தங்கள் கடவுளை உருவாக்குகின்றன.
நிறம் மாறும் கடவுளின் குகையிலிருந்து
வெளியேறும் வௌவால்கள்
கடவுளின் கடைசிக் குழந்தை வரைந்த
புறாவை ஒத்து.
வழக்கமான படையலைத் தவிர்த்து
சிதறிய தானியங்களைக்
கொறிக்கத் தொடங்கிய கடவுளின் கையை
"இதென்ன சிறுபிள்ளைத்தனம்" எனத்
தட்டிவிடுகிறது ஒரு கை.
பசித்த கடவுளுக்கு
மேலும் முளைக்கின்றன பத்து பாகங்கள்.
கொளுந்துவிட்டு எரிகிறது சொக்கப்பனை

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE