INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 30, 2023

VELANAIYOOR THAS

 A POEM BY

VELANAIYOOR THAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Today in Arali seashore
I saw several humans with wings sprouted on their shoulders.
Green Blue Yellow – so in hues myriad soft and splendid feathers wearing humans…..
They came floating above the sea…
Flew everywhere along the shores…
Some of them flew and landed on the trees closeby…
I asked one of them
“How come you have wings grown on thee?
What should I do to have wings sprout on me.
He said, ’You should first give up desire anger envy
Only for those who forsake these
Wings will sprout”.
It is desire that kindles effort in one
Without desire there won’t be attachment in the world.
Without attachment life is nothing.
No anger – how
Do you want me to wear an abject grin always
For anything and everything
Do I consciously train myself to be jealous
It springs on its own in the humans
Desire is the root of Misery!
Anger shuts tight your eye of wisdom
Envy begins to annihilate you from within!
Only when you find release from all these
You can really be free.
Only then wings will spring on thee’, said he.
‘Mmm… not possible to renounce desire.
Well, isn’t there women among you with wings sprouted
‘Of course there are’
Responding thus with a laugh a young woman
with red wings alighting from a tree
came towards me.
I asked her
‘Tell me some other way for the sprouting of wings’
And she said:
‘Write a real good poem
Wings will sprout on you too’.
Now upon my shoulders as a cotton-spread
Floating in layers many
In green and blue mix
Something having the semblance of wing
began growing-
…. Well, what for you are
now feeling your shoulder?

இன்று அராலிக் கடற்கரையில்
தோள்களில் சிறகுகள் முளைத்த மனிதர்கள்
சிலரைக் கண்டேன்...
பச்சை நீலம் மஞ்சள் ...என பல நிறங்களில்
மென்மையானதும் அழகானதுமான சிறகுகளை கொண்ட மனிதர்கள்....
கடலுக்கு மேலால் மிதந்து வந்தார்கள் ..
கரைகளில் பறந்து திரிந்தார்கள்...
சிலர் அருகில் இருக்கின்ற மரங்களின் மேலே
பறந்து ஏறினார்கள் ....
அவர்களின் ஒருவனை கேட்டேன்
உங்களுக்கு எப்படி சிறகு முளைக்கிறது?
இப்படி சிறகு முளைக்க என்ன செய்ய வேண்டும் ?
அவன் சொன்னான்.
"ஆசை,கோபம்,பொறாமை, இதை எல்லாம் முதலில் நீ விட்டுவிட வேண்டும்
இதை விட்டு விடுபவனுக்குத்தான் சிறகு முளைக்கும்" என்றான்...
ஆசைதானே முயற்சியை
தூண்டுகிறது.
ஆசை இல்லாவிட்டால் உலகத்தில் பற்றின்றி போய்விடும் ...
உலகில் பற்றற்று போனதின் பிறகு என்ன வாழ்வு .
கோபம் இல்லாமலா.
அப்படியானால் என்னை எல்லாவற்றிக்கும் இளித்துகொண்டு இருக்க சொல்கிறாயா?
பொறாமை பட சொல்லி நானா சொல்லிக்கொடுக்கிறேன்
அது மனிதர்களிடத்தில் தானாக விளைகிறது.....
ஆசையே துன்பத்தின் வேர்!
கோபம் உன் அறிவு கண்ணை மூடி விடுகிறது !
பொறாமை உன்னை உள்ளிருந்து அழிக்க தொடங்குகிறது!
எப்போது இவற்றில் இருந்து விடு படுகிறாயோ அப்போதுதான்
உனக்கு விடுதலை.
அப்போது உனக்கும்சிறகு முளைக்கும்" என்றான்...
ம்ம் ... ஆசையை விடுதல் சாத்தியம் இல்லை அது சரி. இருக்கட் டும்
உங்களில் சிறக்க முளைத்த பெண்கள் இல்லையா
ஏனில்லை சிரித்தபடி மரத்திலிருந்து இறங்கி வந்தாள்
சிகப்பு சிறகுகளுடன் ஓர் இளைய பெண்
அவளிடம் கேட்டேன்
சிறகு முளைப்பதற்கு வேறு ஏதாவது வழி சொல்லு .
அவள் சொன்னாள்
ஒரு நல்ல கவிதை எழுது
உனக்கும் சிறகு முளைக்கும்"...
இப்பொழுது என் தோளில் பஞ்சுப்படலமாய்
பல மடிப்புகளின் மிதப்பாய்
நீளமும் பச்சையும் கலந்த வண்ணத்தில்
சிறகு போல் ஒன்று வளரத் தொடங்கியது. ....
... அது சரி நீங்களேன் இப்பொழுது
உங்கள் தோளை
தடவிப் பார்க்கிறீர்கள்.

வேலணையூர் தாஸ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024