A POEM BY
RENGARAJAN VEERASAMY
Wonder what joy could be derived
in nipping it in the bud -
the oil providing some succour
died down
This darkness is not like
the earlier one
That had a thin light
There the one going a little ahead
Suffice to join him
This place then would gain a little shine.
This is how
In order to whitewash the darkness
It was learnt to use
the hue of sorrow
all too dense.
வழித்துணைக்கு நின்றவன்
கை விளக்கொடு வந்தவனுடன் நடந்தான்
சிறிய ஆசுவாசத்தின்
தலையைக் கிள்ளிப்
போடுவதில் என்ன மகிழ்வோ எண்ணெய் தீர்ந்து விட்டது
இந்த இருள்
முன்னது போலில்லை
அது கொஞ்சம்
வெளிச்சமாக இருந்தது
அதோ
சிறிது முன் செல்பவனுடன்
சேர்ந்து விட்டால்
இவ்விடம் சிறிது ஒளி பெறும்
இவ்வாறாகவே
இருளை வெள்ளையடிக்க
அடர்துயர் வண்ணத்தை
கையாளக் கைக்கொண்டது.
_ யுகயுகன்
No comments:
Post a Comment