INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 30, 2023

NETKOLUTHASAN

 A POEM BY 

NETKOLUTHASAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



Who is crying there
Can you hear the voice
Even after everything is over
Is the crying voice persistently heard
Aswathaman is immortal they said – didn’t they
No trails nor traces
for those who went along
hand in hand
for good or bad
life or death
no alternative nor any means
for the spirit and sustenance
of those remaining
Time bygone
Lies torn bursting breaking
turning into being nothing
Buried under sand
as void abysmal
parents scream
along drawn-out streets
all over the waste land
With memories of utmost dismal time
They bear in their parched shrunken bodies
raging fire.
Despite time turning them to ashes
and they becoming one with the soil
The woeful voice of a mother
asking
Aswathaamaa where are you
would always be calling out relentlessly.

அழுவது யார்
குரல் கேட்கிறதா
எல்லாம் முடிந்து போனதாயாகிய பின்னும்
அழுகுரல் மட்டும் கேட்கிறதா
அசுவத்தாமனுக்கு மரணமில்லையென்றார்களே..
கூடிப்போனவர்களின்
வாழ்வுக்கும் வீழ்வுக்குமென
தடங்களுமில்லை தடயங்களுமில்லை.
எஞ்சியோரின்
இயல்புக்கும் இருப்புக்குமாய்
மாற்றுமில்லை வழியுமில்லை
முன்காலம்
வெடித்துக் கிழிந்து நிணமிழந்து
பாழென மண்மூடிக்கிடக்கிறது
பெற்றவர்கள் குரலிடுகிறார்கள்.
நெடுந்தெருக்களில்
பரந்த தரவைகளில்
கடூழிய காலமொன்றின் நினைவுகளுடன்
வறண்டு சுருங்கிய தேகங்களில் எரியை சுமக்கிறார்கள்.
காலத்தால்
எரிந்து மக்கி மண்ணாகிபோன பின்னும்
அசுவத்தாமா எங்கிருக்கிறாயென்று
அன்னையொருத்தியின்
பாவக்குரல் அழைத்துக்கொண்டேயிருக்கும்.
நெற்கொழு தாசன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE