A POEM BY
UMAMAHESWARI BALRAJ
asking me to relish and find
how very tasty is the silent sap
of Everyday.
For the garden inside
that keeps engraving within
the bitternesses of Time
We need Flowers always.
When someone is close to heart
When someone moves apart
When someone breaks you into pieces
For us to preserve ourselves
Not being submissive to anything anybody
For the Self to sprout
as our essential part
The way flowers teach us
We can learn from no one else.
Umamaheswari Balraj
•
பூக்கள்
**********
தினங்களின்
மௌனச்சாறு
எத்தனை ருசியென்று
பருகச்சொல்கிறது
யாருமற்ற பொழுதுகள்
காலத்தின் கசப்புகளை
அழியாது பதித்துக்கொள்ளும்
உள்மனத்தோட்டத்தில்
பூக்கள் எப்போதும் வேண்டும்
யாரேனும் அருகிருக்கும்போதும்
யாரேனும் நகரும்போதும்
யாரேனும் உடைத்துவிடும்போதும்
யாரிடமும் எதற்காகவும் நம்மை
ஒப்புக்கொள்ளாத வாழ்விற்கு
கொஞ்சம் அவசியமாய்
சுயம் பூக்க அவைகள்
சொல்லித்தருவதை போல்
வேறுயாரிடமும் கற்க இயலாது...
உமா மஹேஸ்வரி பால்ராஜ்.
No comments:
Post a Comment