A POEM BY
SUGANYA GNANASOORY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
CAT LOVER
The city-cats wandering all wounded
fear the compound walls.
For the bleeding soft feet
a kiss or a gentle hug
would prove a balm.
Their anguish and agony never reach
the heart sans love.
The sharpness of nail
and the softness of feet
are two ways of life.
Those who were in love know very well.
Those who had fallen in love at least once
never ever stick broken glass pieces
on the compound wall of their house.
Suganya Gnanasoory
பூனைக் காதலன்
************
காயமுற்றுத் திரிகின்ற
நகரத்தின் பூனைகள்
மதில்களைக் கண்டு அச்சப்படுகிறது.
உதிரம் சொட்டும் மென்பாதங்களுக்கு
ஒரு முத்தமோ சிறு அணைப்போ
மருந்தாகக் கூடும்.
அவற்றின்
வேதனைகள் புரிவதேயில்லை
காதலற்ற உள்ளத்திற்கு.
நகத்தின் கூர்மையும்
பாதத்தின் மென்மையும்
வாழ்வின் இரு போக்கென
காதலித்தவர்கள் அறிவர்.
ஒருமுறையாவது காதல் கொண்டவர்கள்
தம்வீட்டு மதிலின்மேல்
எப்போதும்
*பிசுங்கான்களை பதிப்பதேயில்லை.
- சுகன்யா ஞானசூரி
12/02/2020. நள்ளிரவு 12:06.
*பிசுங்கான்: உடைந்த கண்ணாடி சில்லுகள்.
No comments:
Post a Comment