A POEM BY
MIZRA JABBAR
I lock all the doors meant for humans
From the resounding wine-cup
as a giant rock the beauty of black is burning
In moments when dream coming true becomes impossible
Leaving your kangaroo lap
in quiet courage
I jump into the sea
so full of noise.
During the snowy days the language of the soul
turns into frost
You come with the interpretations of dream
The poems of the soil that roll
as wave after wave foaming and
weighing heavy
would open their eyes for me.
An all too sweet loving voice heard from
pure- pristine
shines as the womanhood
of Mankind.
Mizra Jabbar
நான் தனிமை எனும் இருளில்
மனிதர்களுக்கான எல்லா கதவுகளையும்
பூட்டிக் கொள்கிறேன்
ஒலி எழுப்பும் மதுக்கிண்ணத்திலிருந்து
பெரும் பாறையென கறுப்பின் அழகு கனன்று கொண்டிருக்கிறது
கனவு பலிப்பது அசாத்தியமாகும் தருணங்களில்
உன் கங்காரு மடியை விட்டு ஓர் மௌனத் துணிச்சலோடு
இரைச்சல் நிறைந்த சமுத்திரத்தில்
குதிக்கிறேன்
ஆன்மாவின் மொழி பனிபெய்யும் நாட்களில்
உறைபனியாகிப் போகிறது
கனவுக்கான வியாக்கியானங்களோடு நீ வருகிறாய்
நுரை நுரையாய் கனத்துப் புரளும்
பூமியின் கவிதைகள் எனக்காய்
கண் திறக்கும்..
நிர்மலத்திலிருந்து கேட்கும் ஓர் மோகனக் குரல்
மானுடத்தின் பெண்மையாய் மிளிர்கிறது...
No comments:
Post a Comment