INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, March 19, 2021

KAVIGNAR MAJEETH

  A POEM BY

'KAVIGNAR' MAJEETH

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE DEATH OF A LEAF
From that tree how old none knows
a leaf pushing aside the wind falls on the ground.
Under the tree I stretch my legs and repose.
That leaf had turned old
Not ripened but
The same leaf that went unnoticed
while sticking in the branch
is gobbling up all my attention today.
The breeze that blows there every now and then
stroking
it bounces and moves brushing against the soil
dries in the sun
While being in the branch the way it protected
the last raindrop from falling down
we can recollect now.
I am writing the possibilities of connecting the leaf
with the branch.
Collecting the leaf my wife throws it in the trash
and goes away.
From that tree how old none knows
one more leaf falls in my heart.
The next morn I see
The leaf fallen in the heart
Is still there in tact
Not tripping off.
The possibilities of bonding the leaf with the branch
I no more remember.

கவிஞர் மஜீத்
ஒரு இலையின் மரணம்
வயதை கணிக்க முடியாத
அந்த மரத்திலிருந்து ஒரு இலை
காற்றை விலக்கிக் கொண்டு நிலத்தில் விழுகிறது
மரத்தடியில் கால் நீட்டி நான் அமர்கிறேன்
அந்த இலை முதுமையடைந்திருந்தது பழுக்கவுமில்லை
கிளையில் ஒட்டியிருக்கும் போது
உற்றுக் கவனிக்காத இலைதான்
இன்று எனது முழுக்கவனத்தையும் தின்னுகிறது
அங்கு இடையிடையே வீசும் காற்றில்
ஒத்திவிடப்பட்டு தாவி
நிலத்தில் உரசி நகர்கிறது
வெய்யிலில் உலர்கிறது
கிளையில் இருக்கும் போது
நிலத்தில் விழாது காத்த கடைசி மழைத்துளியை
இன் நேரங்களில் நினைவு கூரலாம்
அவ்விலையை கிளையுடன் இணைக்கும்
சாத்தியங்களை எழுதுகிறேன்
இலையை பொறுக்கி எனது மனைவி
குப்பையில் போட்டு விட்டு செல்கிறாள்
வயதைக்கணிக்க முடியாத அம்மரத்திலிருந்து
இன்னுமொரு இலை என் நெஞ்சில் விழுகிறது
மறு நாள் காலையில் பார்க்கிறேன்
நெஞ்சில் விழுந்த அவ்விலை
இன்னும் உதிரவில்லை
இலையை கிளையுடன் இணைப்பது
பற்றிய சாத்தியங்கள்
மறந்து போயிருந்தன




No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE