A POEM BY
blink alarmed as a child just learning to walk
In the streams churned in rusted brown
the mountain –rivers crystal-clear
alighting and sprinting
In crevices wails of bleeding pains….
moaning resounding growing into an uproar
turn quiet..
In dusk with black coating on dark red
salty eyelids soaked in pain swelling
With nights stretching
sliced muscles and the odour of flesh
translating themselves in the Cicada-screeches
The soul goes on singing ……..
Kajuri Puvirasha
பெருக்கெடுத்துக்கொண்டிருக்கும்
என் கனவுகள்
நடைபழகும் குழந்தையின் சாயலில் அதிர்ந்து விழிக்கின்றது....
பழுப்பில் துருவேறி கலங்கிய
ஓடைகளில் தெளிவுற்று மலையாறு இறங்கி ஓடிக்கொண்டிருந்தன...
பிளவில் ரத்தம் சொட்டும் வலியின்
ஓலங்கள்.....
முனகி அதிர்ந்து பேரிரைச்சலுற்று
அமைதியாகின்றன....
அடர்சிவப்பின் மேல் கருமைபூசி
சாயும் அந்தியில் வலியின்
உவர்ப்பு தோய்ந்த கண்ணிமைப்
பெருப்புக்கள்....
இரவுகள் நீள நீள வெட்டப்பட்ட
சதைகளும் நிண வாசங்களும்
சில்வண்டுக் கீச்சிடுதல்களில்
தம்மை மொழிபெயர்க்க ...
ஆன்மா இசைத்துக்கொண்டிருக்கிறது.....
கயூரி புவிராசா....
No comments:
Post a Comment