A POEM BY
MALINI MALA
My dream-drawn sea for the Time-fish to swim
is not to be seen.
Who would have stolen it
Where would it be hiding
Or who at all would have gulped it
Well, let the sea that would quench my thirst
get into my life’s shell
O, where at all it would have vanished
Here….here
In the salty taste of the water
flowing unleashed
with the corners of eyelids
where dream-dead black eyes
float in angst
bursting open _
the same flavour
கரையில்
நின்றுகொண்டிருக்கிறேன்.
காலமீன் நீச்சலடிப்பதற்காய்
கனவில் வரைந்து வைத்த என்
கடலைக் காணவில்லை.
எவர் திருட நேர்ந்திருக்கும்
எங்கே ஒழிந்திருக்கலாகும்
அல்லது
யார் தான் அருந்தியிருக்கக் கூடும்.
உயிர்க்கூடு வரட்டும் என்
தாகத்தைத்தணிக்கும் கடல்
எங்கு தான் மறைந்திருக்கும்.
இதோ....இதோ...
கனவிறந்த
கருவிழிகள் மிதந்து துடிக்கும்
மடல்களின் ஓரங்கள்
உடைப்பெடுத்துப் பாயும்
நீரின் கரிப்பில்
அதே சுவை.....
No comments:
Post a Comment