A POEM BY
NUHA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
the great grand sea kneels down.
When Nature gives a slap on the cheek of waves
foam swells and the speed tends to subside
A butterfly turns into nothing
the smoke-emitting poisonous gas of the serpentine
that had set aflame the jungle
Beyond sorrow calm and serenity
this is all strong white-filled Sun-river.
The White Lotus sprouting as ash
in the boiling beverage that never cease to be
is made of two, three petals.
குமிழிகள் உடையும் மண் துணிக்கைகளின்
முன் மாபெரும் கடல் மண்டியிடுகிறது
இயற்கை அலைகளின் கன்னத்தில் ஓங்கி அறைகையில் சுழல் நுரைத்து அமர்முடுகப்
பார்க்கிறது
வனங்களை எரித்த சர்ப்பத்தின்
புகைந்த விஷவாயுவை பிசுபிசுக்கச்
செய்தது ஒரு பட்டாம்பூச்சி
நீர்த்துப் போகுமென்று அல்லது கொந்தளித்து
வெடிக்குமென்று சாத்தான் கண்ட கனவில்
வெண்முகிலை வரைந்தது யார்
துக்கம் சாந்தம் அமைதியை தாண்டி
இது உரம்பாய்ந்த வெண்மை தழைக்கும்
வெயில் நதி
தீராத கொதி குழம்பில் நீறாய் பூத்திருக்கும்
வெண்தாமரை
இரண்டு மற்றும் மூவிதழ்களால் ஆனது
நுஹா
No comments:
Post a Comment