TWO POEMS BY
RAGAVAPRIYA THEJESWI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
The deadly tongue of the la-demon
called Urbanization
is indeed stretching a bit too far
It is amidst the deadly teeth of concrete constructions
crisscrossing and sticking out dangerously
She preserves it safely.
At the corner of her lips
the leftovers of a semi-swallowed playground
are hanging as sticking morsels.
Even beyond that her tongue would extend and recoil
once in a while
for tasting open spaces.
It is in that particle-like ground
that has still survived
our children are playing now.
நகரமயமாதல் அரக்கியின் நாக்கு
கொஞ்சம் நீளம்தான்..
தாறுமாறான கோரகட்டிடப் பற்களுக்கு நடுவேதான்
அதை பாதுகாப்பாக வைத்திருக்கிறாள்..
அவளின் உதட்டோரம் பாதிவிழுங்கிய
ஓரு மைதானத்தின்
மிச்சங்கள் ஒட்டிய பருக்கைகளாய் தொங்கிக்கொண்டிருக்கின்றன...
அதையும் தாண்டி அவள் நாக்கு
வெட்ட வெளிகளின் ருசிக்காக
அவ்வப்போது வெளிவந்து உட்செல்லும்...
அப்போதும் தப்பித்த
அந்தப் பருக்கை மைதானத்தில்தான்
எங்கள் குழந்தைகள்
இப்போது விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்..
ராகவபிரியன்...
(2)
It is in search of my pathway I am walking along…
The lilt and leap of the lamp
that can run across the road all too suddenly,
A horse-shoe screw all rusted that had come off the hoofs,
The dried-up and shapeless cow-dung balls,
The trails of the bygone world inside them,
The left-over thatches in the ‘Thanneer-Pandals’
The sound of some all too thirsty wayfarer
gulping the thick butter-milk
_ The intricate elegance of the sculptures
settled on the pillars of the Mandap
_the place where God comes and repose even now_
suffering damage due to road expansion,
A roadside park that has breathed its last
the load-bearer…..
and in search of many more
that I continue my walking exercise….
A helmet unable to place on the head
but brought along for fear of police-thrashing
has slipped and lying in the middle of the road….
If I go past that will I get my passage….?
I am wearing mask.
Ragavapriyan Thejeswi
எனது சாலையைத் தேடித்தான் நடைபயில்கிறேன்...
சட் டென குறுக்கே ஓடமுடிந்த
சிறிய வெள்ளாட்டின்
துள்ளலையும்...
குளம்புகளில் இருந்து கழன்று கிடக்கும்
துரு ஏறிய லாட ஆணியொன்றையும்...
மாட்டுச் சாண காய்ந்த வடிவமிழந்த
உருண்டைகளையும்...
அதற்குள்ளான முன் சென்ற உலகின் தடங்களையும்...
தண்ணீர் பந்தல்களில்
மீந்து கிடக்கும் ஓலைகளையும்...
தாக மயக்கத்தில் யாரோ ஒரு வழிப்போக்கன்
மடக்மடக்கென்று
கெட்டி நீர்மோர் அருந்திய ஓசையையும்...
இப்போதும் கடவுள்
வழி நடையாய் வந்தமரும்-
சாலை விரிவாக்கத்தால்
சிதைந்த மண்டபத் தூண்களின்
ஒட்டிக் கிடக்கும்
சிற்பங்களின் சிதைக்க முடியாத
நளினங்களையும்...
இறந்த சாலையோரப்பூங்கா ஒன்றையும்...
சுமைதாங்கியையும்...
இன்னும்
எல்லாவற்றையும் எல்லாவற்றையும்
தேடித்தான் நடை பயில்கிறேன்...
தலைக்கு வைக்க முடியாமல்
தடிக்குப் பயந்து கொணர்ந்த தலைக்கவசமொன்று
பிடி நழுவி
நடுச்சாலையில் கிடக்கிறது...
அதைக் கடந்தால் என் சாலை கிடைக்குமா...?
நான் முகக் கவசம் அணிந்திருக்கிறேன்...
ராகவபிரியன்
My pranams to my literary mother..on this world poets'day...vanakkangaludan...anban..ragavapriyan
ReplyDelete