INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, March 19, 2021

KALA PUVAN

 A POEM BY

KALA PUVAN



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




Is bird minus wings
Parrots captured in forest,
the hunter sells in the town
He severs their wings
for the fortune-teller to give predictions
The birds thus imprisoned in cages
forget the sky and the forest
In course of time
the parrots that come out of the cage
to give predictions
as soon as they take out a card
get into the cage and turn themselves into captives.
Worse still
as days pass they forget their inherent flying.
Women who turn cooks after wedding
do forget reading and learning
The parrots begin to live in the cages
being more comfortable than women.
In a way though the cages of women are bigger
than that of parrots
they find it difficult to fly.
Damned are these lot.
Till they die,
closed their cages remain.
Amen.
Kala Puvan
சிறகுகளற்றதா பறவை
காட்டில் பிடித்து வரும் கிளிகளை வேடன் நாட்டில் விற்கிறான்
ஜோசியக்காரர்கள் ஆருடம் சொல்வதற்கு
அவைகளின் சிறகுகளை வெட்டி விடுகிறான்
கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள்
காலப்போக்கில் ஆகாசத்தையும் காட்டையும் மறந்துவிடுகின்றன
சிறு தானியங்களுக்காக கூண்டிலிருந்து
வெளியே வரும் ஆருடக் கிளிகள் சீட்டை எடுத்ததும்
கூண்டுக்குள் தாமே அடைபட்டுக் கொள்கின்றன
நாட்கள் செல்லச் செல்ல அவைகள் பறத்தலையும் மறந்து விடுகின்றன என்பது தான்
ஆகப் பெரும் கொடுமை
சமையல்காரிகளாக திருமணத்திற்கு பின் ஆகும் பெண்கள் வாசித்தலையும் ,படித்தலையும்
மறந்து தான் விடுகின்றனர்
கிளிகள் பெண்களை விட வசதியாகவே
கூண்டில் அடைபட்டு வாழத் தொடங்கிவிடுகின்றன
ஒரு வகையில் கிளிகளை விட
பெண்களின் கூண்டுகள் பெரிதாக இருந்தாலும்
பறக்க முடிவதில்லை
இப்படியான பெண்கள் பாவப்பட்டவர்களே
இவர்களின் கூண்டுகள் மரணிக்கும் வரை
திறக்கப்படுவதேயில்லை
ஆமென்.

கலா புவன் - லண்டன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024