A POEM BY
DANISKARAN KANDASAMI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Once again it would become an empty tent
The rubles
If he with whom Adelaida had run away
Is but a half-starving teacher
On reading Dostoevsky’s writings about her
being and role
We can ask Fyodor.
With a few words
That are accessible for the time being
I go searching for Adelaida
wandering all over Petersburg.
With the tears that Karamazov had shed
in a city- street
wetting my feet
I look up.
For Adelaida’s death that happened upstairs
there are two names
Starvation and Fever.
‘Neeli’ is a name for tears.
முதலாம் மரணமும்
மூன்று பெயர்களும்
--------------------------------------------------
கலியாட்டங்களால் நிரம்பி இருக்கிறது
கரமசோவின் வீடு
மீண்டும் காலிக்கூடாரமாகும்,
சுரண்டிய ரூபிள்கள் கரைந்து
காணாமல் போகும்.
அடிலெய்டா ஓடிப்போனது
ஒரு அரைப்பட்டினி வாத்தியாரோடென்றால்
அவளது இருப்பும் பங்கும் குறித்த
தஸ்தவ்யெஸ்கியின் எழுத்துக்களை
வாசிப்பது பற்றி
ஃபியோதரை விசாரிக்கலாம்
இப்போதைக்கு
சாத்தியமாகும் சில சொற்களோடு
அடிலெய்டாவைத் தேடித்தேடி
பீட்டர்ஸ் பர்க்கில் அலைகிறேன்
நகரின் தெருவொன்றில்
கரமசோவ் அழுத கண்ணீர்
என் கால்களை நனைக்க
நிமிர்ந்து பார்க்கிறேன்
மாடியில் நிகழ்ந்த அடிலெய்டாவின் மரணத்திற்கு
பட்டினி என்றும் காய்ச்சல் என்றும்
இரண்டு பெயர்கள்
கண்ணீருக்கு நீலி என்று ஒரு பெயர்
- டணிஸ்கரன் -
20012021
பின்குறிப்பு: காற் புள்ளி சஞ்சிகையில் வெளிவந்த எனது பிரதியின் இன்னுமொரு வடிவம்.
No comments:
Post a Comment