Forgetting to see their own.
The cat is grazing
Centipedes are born
all over the heart
being exported through the eyes.
Thirst devilish, unquenchable and
for the blood of others.
Ruby can shine radiantly inside a poor man
That would cause irritation to the centipede
Lying inside the spathe.
What for the coward needs
Another’s
Disc bulge treatment
Centipedes beware
Soon there might come a day
When the same spathe cuddling inside you
would beat you black and blue
பாளைக்குள் பூரான்.
- - - - - - - - - - - - - - - -
சிலர்
பிறர் கல்லையைப்
பார்த்துப் பார்த்தே தன் கல்லையை மறந்துவிட்டனர்;
பூனை மேய்கிறது.
மனம் முழுக்கப் பூரான்கள் உற்பத்தி
கண்கள் வழியாக ஏற்றுமதி.
அடுத்தவன் ரத்தத்தில்
ஆறாத பேய்வெறி.
ஏழைக்குள் ரத்தினம் சிரிக்கலாம்
அதனால்
பாளைக்குள் படுக்கும் பூரானுக்கு அரிக்கலாம்
கோழைக்கு எதற்கு
மற்றவனின்
முள்ளந்தண்டுச் சிகிச்சை?
பூரான்களே கவனம்
நீங்கள் சுருண்ட பாளையே
உங்களை அடிக்கும் காலம்
விரைவில்..
ஜே.வஹாப்தீன் –
No comments:
Post a Comment