A POEM BY
MANONMANI (PUDHUEZHUTHU)
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
When Lao Tzu was sipping tea
I was there with C.Mani.
The lid of the bottle in the earthen- pot
he went on tightening.
Sad indeed getting back something before
The lid of the bottle in the earthen- pot
he went on tightening.
Sad indeed getting back something before
sending it off
said he.
Whose job is it to preserve the cups from turning dry
asked Lao Tzu.
without words the pot remains Eternal Tao- vacuum
said Lao Tzu.
What is its name
Never ever a name said Lao Tzu.
Mani too couldn’t control his laughter.
Trickling Tea sways inside the bottle
as yellowish liquid.
It tries to exert its influence says Mani.
That would always be functional ‘The’ observes Lao Tzu.
Poisonous insect has stung the child says Mani
Shrinking his thin-line eyes Lao Tzu laughs.
Any and everything keep moving in
opposite direction Hon’ble ‘The’
Mani mutters.
Though not in race
It is that which wins
says Lao Tzu
That never competes
says Mani in the words of Lao Tzu
Both became silent.
Being aware Words became redundant.
said he.
Whose job is it to preserve the cups from turning dry
asked Lao Tzu.
without words the pot remains Eternal Tao- vacuum
said Lao Tzu.
What is its name
Never ever a name said Lao Tzu.
Mani too couldn’t control his laughter.
Trickling Tea sways inside the bottle
as yellowish liquid.
It tries to exert its influence says Mani.
That would always be functional ‘The’ observes Lao Tzu.
Poisonous insect has stung the child says Mani
Shrinking his thin-line eyes Lao Tzu laughs.
Any and everything keep moving in
opposite direction Hon’ble ‘The’
Mani mutters.
Though not in race
It is that which wins
says Lao Tzu
That never competes
says Mani in the words of Lao Tzu
Both became silent.
Being aware Words became redundant.
...................................................................................
*கவிஞர் சி.மணியின் மொழிபெயர்ப்பு நூல். தாவோ தே ஜிங்(ஆன்மிகம்) [ க்ரியா , 2002 ]
*கவிஞர் சி.மணியின் மொழிபெயர்ப்பு நூல். தாவோ தே ஜிங்(ஆன்மிகம்) [ க்ரியா , 2002 ]
**Lao Tzu : Laozi என்றும் Lao-Tze, என்றும்
அழைக்கப்படுபவர் பண்டைய சீன தத்துவஞானியும் எழுத்தாளருமாவார். Tao Te Ching, நூலின் ஆசிரியர். தாவோ தத்துவத்தை நிறுவியவர்.தாவோயிய மதம் மற்றும் மரபார்ந்த சீன மதங்களில் கடவுளாக பாவிக்கப்படுபவர். (நன்றி: விக்கிபீடியா)
.......................................................................................
அழைக்கப்படுபவர் பண்டைய சீன தத்துவஞானியும் எழுத்தாளருமாவார். Tao Te Ching, நூலின் ஆசிரியர். தாவோ தத்துவத்தை நிறுவியவர்.தாவோயிய மதம் மற்றும் மரபார்ந்த சீன மதங்களில் கடவுளாக பாவிக்கப்படுபவர். (நன்றி: விக்கிபீடியா)
.......................................................................................
Manonmani Pudhuezuthu
லாவோட்சு தேநீர் அருந்தும் போது
சி மணியுடன் நானும் இருந்தேன்.
ஓட்டைப் பானையில்
எடுத்த புட்டியின் மூடியை
இன்னும் திருகிக் கொண்டிருந்தார்
ஒன்றை அனுப்பும் முன்னர்
திரும்பப் பெறுவதுதான் துயரம் என்றார்
கோப்பைகளை வற்றாமல் இருக்கச் செய்வது
யார் வேலை என்றார் லாவோட்சு
சொற்களில்லாமல் நிரந்தரத் தாவோ
காலியாக இருக்கிறது புட்டி என்றார் மணி
அதற்கு என்ன பெயர்
எப்போதும் பெயரே இல்லை என்றார் லாவோட்சு
மணிக்கும் சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது
சிந்தும் தேநீர் மஞ்சள்நிற திரவமாக புட்டியில் குலுங்குகிறது
அதன் ஆதிக்கத்தை செலுத்தப் பார்க்கிறதென்கிறார் மணி
அது செயல்பட்டுக் கொண்டே இருக்கும்
தே என்கிறார் லாவோட்சு
விஷப்பூச்சி குழந்தையைக் கடித்து விட்டது
என்கிறார் மணி
கோட்டுக் கண்களை இடுக்கிச் சிரிக்கிறார் லாவோட்சு
எல்லா விஷயங்களுக்கும்
எதிர்திசையில்
போய் கொண்டிருக்கிறது உன்னத தே
மணி முனுமுனுக்கிறார்
போட்டியில் இல்லை என்றாலும்
அதுதான் வெற்றி பெறுகிறது
என்கிறார் லாவோட்சு
அது ஒருபோதும் போட்டியிடுவதில்லை
என்கிறார் லாவோட்சுவின் சொற்களில் மணி
இருவரும் அமைதியாகி விட்டனர்
அறிந்ததால் பேச்சில்லை.
சி மணியுடன் நானும் இருந்தேன்.
ஓட்டைப் பானையில்
எடுத்த புட்டியின் மூடியை
இன்னும் திருகிக் கொண்டிருந்தார்
ஒன்றை அனுப்பும் முன்னர்
திரும்பப் பெறுவதுதான் துயரம் என்றார்
கோப்பைகளை வற்றாமல் இருக்கச் செய்வது
யார் வேலை என்றார் லாவோட்சு
சொற்களில்லாமல் நிரந்தரத் தாவோ
காலியாக இருக்கிறது புட்டி என்றார் மணி
அதற்கு என்ன பெயர்
எப்போதும் பெயரே இல்லை என்றார் லாவோட்சு
மணிக்கும் சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது
சிந்தும் தேநீர் மஞ்சள்நிற திரவமாக புட்டியில் குலுங்குகிறது
அதன் ஆதிக்கத்தை செலுத்தப் பார்க்கிறதென்கிறார் மணி
அது செயல்பட்டுக் கொண்டே இருக்கும்
தே என்கிறார் லாவோட்சு
விஷப்பூச்சி குழந்தையைக் கடித்து விட்டது
என்கிறார் மணி
கோட்டுக் கண்களை இடுக்கிச் சிரிக்கிறார் லாவோட்சு
எல்லா விஷயங்களுக்கும்
எதிர்திசையில்
போய் கொண்டிருக்கிறது உன்னத தே
மணி முனுமுனுக்கிறார்
போட்டியில் இல்லை என்றாலும்
அதுதான் வெற்றி பெறுகிறது
என்கிறார் லாவோட்சு
அது ஒருபோதும் போட்டியிடுவதில்லை
என்கிறார் லாவோட்சுவின் சொற்களில் மணி
இருவரும் அமைதியாகி விட்டனர்
அறிந்ததால் பேச்சில்லை.
..............................................................................................
*translator's note: இந்தக் கவிதையை மொழிபெயர்ப்பது எளிதல்ல. கவிஞர் சி.மணி, சீன லாவோ ஸு இவர்களுடைய எந்த அம்சத்தை - கவிஞர் என்ற அளவிலும் மனிதர், ஆசான் என்ற அளவிலும் கவிஞர் குறிப்பாக உணர்த்துகிறார் என்பது புரிய நமக்கு இவர்களை ஓரளவுக்காவது தெரிந்திருக்கவேண்டும்.
அதே சமயம், Half learning is more dangerous என்பதும் உண்மையே.
எனக்கு இவர்களை இவர்கள் படைப்புகளை ஓரளவுக்குத் தெரியும் என்று சொல்லிக்கொள்ள முடியுமா - தெரியவில்லை. யோசித்துப்பார்த்தால், யாரைத்தான் நமக்கு ஓரளவுக்குக்கூடத் தெரியும் - நமக்கு நாம் உட்பட. .....
லாவோஸூ தான் தமிழில் சரியான உச்சரிப்பா என்பதே எனக்கு சரியாகத் தெரியாது.
அவருடைய கூற்றுகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அவற்றை என் மொழிபெயர்ப்பில் நான் அப்படியே பயன்படுத்துவதுதான் சரியா? அவற்றை நான் எங்கேயென்று தேடுவது?
ஒரு கவிஞர் ஏன் வரிக்கு வரி குறிப்புணர்த்தல்க ளோடு அல்லது மொத்த கவிதையுமே குறியீடு களாலானதாய் தன் கவிதையை உருவாக்க வேண்டும் என்று கேட்பது அபத்தம்.
இலக்கியம் என்பதே மொழியின் வழியானது. ஒரே விஷயத்தை எண்ணிறந்த வழிகளில் சொல்ல மொழியே உதவுகிறது.
ஒரு கவிதையில் மேம்போக்காக பெயர்களும் குறிப்புகளும் தரப்பட்டிருந்தால் அதை வாசகரால் கண்டுகொள்ள முடியும். அந்தக் கவிதையைக் கடந்துசென்றுவிட முடியும்.
அப்படியில்லை, அந்தக் கவிதை எதையோ நுட்பமாகச் சொல்லத்தான் அத்தனை பெயர்களையும் குறிப்புகளையும் இடம்பெறச்செய்திருக்கிறது என்று தெரிந்தால் முடிந்த அளவு அந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டு அந்தக் கவிதையின் உட்பொருளை நெருங்க முயற்சி செய்வார் வாசகர்.
மொழிபெயர்ப்பாளரும் வாசகரே என்ற அளவில் நான் மேற்சொன்னவையாவும் மொழிபெயர்ப்பாள ருக்கும் பொருந்தும்.
ஒரு வாசகராக தனக்குத் தெளிவாகாத, தெரியாத பகுதிகளை, குறிப்புகளை, பெயர்களை உள்ளடக்கி யிருக்கும் ஒரு கவிதையை மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்க்கலாமா? கூடாதா?
கவிதையை உள்ளது உள்ளபடி மொழிபெயர்த்தால் மோசமாகிவிடுவது உண்டு என்பதுபோலவே மோசமாகிவிடாமலிருப்பதும் உண்டு. உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்கப்படும் நிலையில் ஒரு கவிதையில் இடம்பெறும் பெயர்கள், குறிப்புகள் அவை பரிச்சயமான வாசகர்களால் அதிகம் புரிந்து கொள்ளப்படவும் வழியுண்டு. ஆனால், அப்படி உறுதியாகச் சொல்லிவிடவும் முடியாது.
இத்தனை ஐயப்பாடுகளையும் மீறி எனக்கு இந்தக் கவிதையை மொழிபெயர்க்கவேண்டும் என்று ஆர்வமாயிருந்ததால் மொழிபெயர்த்தேன். தோழர் மனோன்மணி உரிய திருத்தங்களை, விளக்கங் களைத் தருவார் என்ற நம்பிக்கையில்.
இங்கேயுள்ள என் மொழிபெயர்ப்பில் இன்னும் திருத்தங்கள் தேவை என்பதை உணர்ந்தே அதை இங்கே பதிவேற்றுகிறேன்.
இந்த மொழிபெயர்ப்பில் குறைகாண்பவர் இந்தக் கவிதைக்கான அப்பழுக்கற்ற மொழிபெயர்ப்பைத் தந்தால் அது கவிஞருக்கு செய்யும் மரியாதை. அத்தகைய அப்பழுக்கற்ற மொழிபெயர்ப்பை வாசிக்க நானும் ஒரு வாசகராக ஆர்வமாக இருக்கிறேன்.
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்.
லதா ராமகிருஷ்ணன்.
No comments:
Post a Comment