INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

VASANTHADHEEPAN'S POEMS

THREE POEMS BY 
VASANTHADHEEPAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
His tears overflow.
Hunger burns him.
He _
doesn’t belong to any caste
doesn’t adhere to any religion.
He is not owned by any race;
Not under the control of any Party
He knows not Vedas;
Has not gone through Bible;
Nor learned Quran;
Or the Puranas;
Never heard of Ithikaasaas.
Having no language
Voiceless
Landless
No salvation
Knows not patriotism

He has no dreams
He knows not the difference between
God and Satan
He has never smelt the fragrance of mercy
Never tasted sympathy
Never held close to heart any ambition
He would slog like a beast
and die like a worm
He is one sans identities of any kind;
No trails he leaves behind.



அவனது கண்ணீர் வழிந்தோடுகிறது..
அவனை பசி எரிக்கிறது..
அவன் --
எந்த சாதிக்கும் சொந்தமில்லை
எந்த மதத்திற்கும் கட்டுபடாதவன்
எந்த இனத்திற்கும் உடைமையில்லை
எந்த கட்சிக்கும் உட்பட்டவன் இல்லை
வேதங்களைத் தெரியாது
பைபிளை வாசித்ததில்லை
குர்ரானைக் கற்றதில்லை
புராணங்களைப் படித்ததில்லை
இதிகாசங்களைக் கேள்வியுற்றதில்லை
மொழியற்றவன்
குரலற்றவன்
நிலமற்றவன்
வீடுபேறு பெறாதவன்
நாட்டுப்பற்று அறியாதவன்
கனவுகள் அவனிடம் இல்லை
கடவுள் சாத்தான் பாகுபாடு புரியாதவன்
கருணையை அவன் நுகர்ந்ததில்லை
இரக்கத்தை அவன் ருசித்ததில்லை
இலட்சியத்தை அவன் ஏந்தியதில்லை
மிருகமாய் உழைப்பான்
புழுவாய் செத்துப் போவான்
அடையாளங்கள் அவனுக்கு ஏதுமில்லை
தடையங்களை அவன் விட்டுச் செல்வதும் இல்லை.
வசந்ததீபன்


2. ON BLUE.......
He who was playing the flute was of blue skin
Everyone said that he was black.
Clouds are dark
So also the charcoal pieces.
It is by speaking about the colours that
hatred towards fellow beings begin
Tears and blood
start flooding
Flowers are set afire
Converting women into machines
they trade them
Changing children into dolls
they play heinous games.
Men slog and decay as footwear
Songs of pain and angst come to be
Treachery tour across the seas
Delirium of drugs stimulated dangerously
The diabolic tactics of stealing human organs
are conceived afresh with every passing day
Prisons keep multiplying
Punishment procedure being modernized.
Rivers are wiped out
With forests being systematically destroyed
The lands of heritage and culture
of humanity
turned to ashes.
Hearts are lost and ever searched for.
Alas _
Therefore
let’s end the tale
calling the flute-player
Colourless.
நீலநிறம் பற்றிய உரையாடல்
புல்லாங்குழல் ஊதுபவன்
நீல நிறத்தில் இருந்தான்
அவன் கறுப்பு நிறமென்று
எல்லோரும் சொன்னார்கள்
மேகம் கறுப்பு நிறமாக இருக்கிறது
கரித்துண்டுகளும் அப்படியே..
நிறங்களைப் பற்றி பேசித்தானே
மனிதர்களை வெறுப்பது ஆரம்பமாகிறது
கண்ணீரும் ரத்தமும்
பெருக்கெடுத்தோடுகிறது
பூக்கள் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது
பெண்களை இயந்திரங்களாக்கி
கடத்துகிறார்கள்
குழந்தைகளை பொம்மைகளாக்கி
விளையாடுகிறார்கள்
ஆண்கள் செருப்புகளாகித் தேய்கிறார்கள்
வலியின் இசைப்பாடல்கள்
அரங்கேறுகின்றன
வஞ்சம்
கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது
போதை மருந்துகளின்
வெறி கிளர்த்தப்படுகிறது
மனித உறுப்புக்களைக் களவாடும்
தந்திரங்கள்
புதிது புதிதாய் தீட்டப்படுகின்றன
சிறைக்கூடங்கள்
பெருகிக் கொண்டிருக்கின்றன
தண்டனைகளின் வடிவங்கள்
நவீனப்படுத்தப்படுகின்றன
நதிகள்
சாகடிப்படுகின்றன
காடுகள்
துடைத்தெறிய பண்பாடுகளின் இன்
நாடு நகரங்கள்
சாம்பலாக்கப்படுகின்றன
இதயங்கள்
தேடப்படுகின்றன
எனவே
புல்லாங்குழல் ஊதுபவனை
நிறமற்றவனென
கதையை முடித்து வைப்போம்.
வசந்ததீபன்

3



Mountain base

Two deer
Tears overflowing, the male
The female deer, terribly bleeding
Alas what cruelty had assaulted them?
What perversion had preyed upon them?
Does the wind that flees wailing
Sings the song of dirge?
The river that flows roaringly
Is in fact exploding in tears of agony
Are the trees that swing and sway with such force
Writhe in pain unbearable
Does the mountain standing there in silence
Feeling heartbroken let waterfalls stream down
With the sky breaking apart and pour down densely
scattering all over
In the heavy rain so like the deluge
Those two deer.
Of them in the female deer’s belly
There were incessant shiver and jerks
Humans swarm there as insects.
The selling and buying voices
Turn the streets upside down
He and she go there.
Axes and the ensuing gory acts continue
In a wink everything was over
He was all drenched and floating in blood,
Almost dead.
She getting soaked in tears
in her advanced stage of pregnancy…
Many an eye watch it all amused
Many a mouth chatter about it
Truths and lies keep rolling on.
What fury sliced it so?
What malice avenged , O…
With the wind howling
Along with tears forlorn
there began torrential rain.


மலை அடிவாரம்
மான்கள் இரண்டு
கண்ணீர் பெருக்கியபடி ஆண்
உதிரம் வடித்தபடி பெண்
எந்தக் குரூரம் தாக்கியதோ...?
எந்த வக்கிரம் பாய்ந்ததோ...?
ஓலமிட்டு ஓடும் காற்று
ஒப்பாரி பாடுகிறதோ...
சத்தமிட்டுப் பாயும் நதி
சோகம் வெடிக்க அழுகிறதோ...
விசை கொண்டு ஆடும் மரங்கள்
வலி தாங்காமல் துடிக்கிறதோ...
மெளனமாய் நின்றிருக்கும் மலை
மனமுருக்கி நீர் தாரைகளை வழியவிடுகிறதோ...
வானம் உடைந்து சிதறிக் கொட்டிட
வெள்ளமாய் ஊழிப் பெருமழையில்
அந்த மான்கள்..
அதில் பெண் மானின் வயிற்றில்
தீராத துள்ளல்கள் தொடர்ந்தபடி.......
பூச்சிகளென மனிதர்கள்
மொய்க்கிறார்கள்..
விற்கும் வாங்கும் குரல்கள்
வீதிகளை துவம்சம் செய்கின்றன..
அவனும் அவளும் போகிறார்கள்
அரிவாள்களும் கொடூரமும் தொடர்கின்றன..
இமைக்கும் நேரத்தில்
எல்லாம் முடிகின்றன..
அவன் குருதியில் நீந்தியபடி குற்றுயிராய்...
அவள் கண்ணீரில் நனைந்தபடி நிறைசூலியாய்...
நிறையக் கண்கள் வேடிக்கை பார்க்கின்றன..
நிறைய வாய்கள் சலசலக்கின்றன..
உண்மையும் பொய்யும் உருண்டோடுகின்றன..
எந்த வெறித்தனம் வெட்டியது...?
எந்த வெஞ்சினம் வஞ்சித்தது...?
காற்று வீறிட
அவளின் அழுகையினூடே....
பெருமழையும் பெய்ய ஆரம்பித்தது.
வசந்ததீபன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE