INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

JEYADEVAN'S POEMS

TWO POEMS BY 
JEYADEVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

In the room filled with silence it falls
with sound resounding ‘Nangg….’
The porcelain mug in which I drank tea
a little while ago and placed on the table..
Wherefrom this noise had come?
Was it inside the mug all along?
If so,
Could it be that some splinters of this sound
would’ve entered inside the tea I drank,
Of these porcelain pieces scattered all over
as the ‘koozham’jackfruit fallen from the tree
which at all I can pose my query to?
“Having so much of sound within
why you spoke nothing to me till now
You could’ve atleast greeted me daily
with a 'good morning' .

ஜெயதேவன்
நிசப்தமான அறையில் ' ணங்' என்ற ஒலியுடன் சிதறி விழுகிறது
சற்று முன் நான் தேநீர் குடித்து விட்டு
மேசையில் வைத்த பீங்கான் குவளை.
எங்கிருந்து வந்தது இந்த ஒலி
குவளைக்குள்தான் இருந்ததா?
எனில்
நான் பருகிய தேநீருக்குள்ளும் சில
ஒலிச் சிதறல்கள் போயிருக்குமா.
பலா மரத்திலிருந்து விழுந்த
கூழம் பலா போல் சிதறிக் கிடக்கும்
பீங்கான் துண்டில் எந்தத் துண்டிடம்
கேட்பேன்.
" இத்தனை ஒலியை உள்ளுக்குள் வைத்திருந்தும்
ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை.
குறைந்தது ஒரு காலை வணக்கமாவது
சொல்லியிருக்கலாமே தினமும்"
******
(2)
All are leaving for our place
Our place is far away
And also nearby.
Household items, bag and baggage are ready.
Wooden frames are getting ready for us somewhere.
We have conveyed to almost all the birds
We have passed the news to the plants too.
As a sign of the pangs of separation
a few tear drops.
The path of our arrival and departure is
but one and the same.
Similarly unlike.
Slight, quick handshakes, exchange of smiles
Everything takes place.
Only when leaving for our birthplace
the place where we dwelt in enchants us
all the more.
It is only then we start loving our fellow humans.
Drumbeats or trumpets solely for us
are ready
How happy the place is in seeing us off
Nothing can proceed from here.
Yet cartons full of commodities.
The place where we were earlier, said they
The place of our ancestors, said they
What if it is alien to us
We are ready to befriend it.
Let’s look at each other intently.
When we go to that place
Our own identity would be lost.
When that place draws near
let’s let go this place
This is for humans other than us.
ஜெயதேவன்
எல்லோரும் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்
ஊர் தூரமாய் இருக்கிறது
ஊர் அருகாமையிலும் இருக்கிறது.
தட்டு முட்டுச் சாமான்கள் ,மூட்டை முடிச்சுகள் தயாராகி விட்டன.
மரச் சட்டகங்கள் எங்கோ நமக்காக
தயாராகின்றன.
அநேகம் எல்லா பறவைகளோடும்
பேசி விட்டோம்
தாவரங்களுக்கும் செய்தி சொல்லி விட்டோம்.
பிரியா விடைக்கு அடையாளமாய்
சில கண்ணீர்த் துளிகள்
வந்த பாதையும் போகும் பாதையும் ஒன்றுதான்
ஒன்று போல வேறுதான்.
சின்னச் சின்ன கைகுலுக்கல்கள், புன்னகைப் பறிமாற்றம் எல்லாம் நிகழகிறது.
ஊருக்குப் போகும் போதுதான்
இருந்த ஊர் இன்னும் வசீகரிக்கிறது.
மனிதர்களை அப்போதுதான் காதலிக்கிறோம்
நமக்கான பறையிசையோ, முழவோ
தயார்
நம்மை வழியனுப்பவதில் ஊருக்கு எத்தனைக் கொண்டாட்டம்.
இங்கிருந்து ஏதும் கொண்டு செல்ல முடியாது
ஆனாலும் பெட்டகங்கள் நிறைய பொருள்கள்
முன்பு இருந்த ஊர் என்றனர்
நம் முன்னோர் சென்ற ஊர் என்றனர்
நமக்கு அந்நியமானால் என்ன?
நாம் ஊருக்கு தயாராகி விட்டோம்
நாம் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக் கொள்வோம்.
அந்த ஊர் போனால் நம்
சொந்த அடையாளம் போய் விடும்
அந்த ஊர் சமீபிக்கும் போது
இந்த ஊரை விட்டு விடலாம்
இது வேறு மனிதர்களுக்காக.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024