INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

AZEEZ M.FAIZ'S POEM(1)

A POEM BY 
AZEEZ M.FAIZ
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

ONE HUNDRED YEARS OF WAITING
A white horse
A sword of the war-front
A shield
are for a long time
waiting
for an able commander.
Commanders do come
every now and then
In their hasty arrival
they climb on donkeys
and go jockeying it.
Some on the back of buffaloes
Some on the back of
god knows what.
In their hands
instead of sword and shield
there were
some printed sheets
and a mike.
A few more commanders
came along
They too climbed on the back of stallions.
Sword and armour were given to them too.
But
they drove their stallions to the river-bank
and slicing fish
they roasted it on the shield and ate.
All that we keep searching for
is a real brave accomplished commander.
Not cowards who climb on their horses and flee
dreading the dogs at their back.
A white horse
A sword of the war-front
are there waiting for centuries
For a commander-par-excellence
Valorous and very eloquent
Some time back
several commanders came
thinking that they are seated on tuskers
while in truth sitting on the backs of cats
They showed themselves to be dumb and deaf
taking us to be fools….
The longing for an able commander
fills all the hearts
The sword and shield of the warfront
are still there, wiped of dust accumulated,
with the neighs and brays of horse
.
Azeez M. Faiz

#நூற்றாண்டுக்காத்திருப்பு...
ஒரு வெள்ளைக் குதிரையும்
ஒரு போர்வாளும்
ஒரு கேடயமும்
நீண்ட காலமாய்
காத்திருக்கிறது
சிறந்ததொரு தளபதிக்காய்.
தளபதிகள்
காலத்துக்கு காலம்
வந்து கொண்டுதானிருந்தார்கள்
வருகின்ற அவசரத்தில்
குதிரைகளுக்குப் பதிலாக
கழுதைகளிலேறி
ஓட்டிச் சென்று விடுகிறார்கள்.
சிலர் எருமை முதுகிலும்
சிலர்
எதுவெனத் தெரியாதவற்றின்
முதுகிலும் கூட.
அவர்கள் கைகளில்
போர்வாளுக்கும் கேடயத்திற்கும்
பதிலாக அச்சடிக்கப்பட்ட
சில காகிதங்களும்
ஒரு ஒலிவாங்கியும் இருந்தன.
இன்னும் சில விரல்விட்டு
எண்ணக்கூடிய தளபதிகளும் வந்தார்கள்.
அவர்களும் குதிரைகளில்தான்
அமர்ந்தார்கள்.
வாளும் கேடயமும்
அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
அவர்கள்
ஆற்றங்கரைக்கு ஓட்டிச் சென்று
வாளால் மீன்வெட்டி
கேடயத்தில் சுட்டுச் சாப்பிட்டார்கள்.
நாங்கள் தேடுவதெல்லாம்
தைரியமிக்க
ஆளுமையுள்ள ஒரு தளபதியைத்தான்.
துரத்தும் நாய்களுக்குப் பயந்து
குதிரைகளில் ஏறியோடும்
கோழைகளையல்ல.
ஒரு வெள்ளைக் குதிரையும்
ஒரு போர்வாளும்
ஒரு கேடயமும்
நூற்றாண்டுகளாக
காத்துக் கிடக்கின்றன.
நாவன்மையும் தைரியமும் மிகைத்த
ஒரு சிறந்த தளபதிக்காய்...
சில காலங்களுக்கு முன்
சில தளபதிகள் வந்தார்கள்.
யானைகளின் முதுகில்
ஏறியமர்ந்ததாய் நினைத்து
பூனைகளின் முதுகில்
அமர்ந்து கொண்டு.
அவர்கள் ஊமைகளாயும்
செவிடர்களாயும்
தங்களைக் காட்டிக் கொண்டனர்
எங்களை மூடர்களாக
நினைத்து...
தளபதிக்கான
ஏக்கம் எல்லா நெஞ்சிலும்
தேங்கிக் கிடக்கிறது.
போர்வாளும்
கேடயமும் இன்னமும் புழுதி துடைத்தேயிருக்கிறது
குதிரையின் கனைப்புகளுடன்.
#அஸீஸ்எம்பாயிஸ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024