INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, July 26, 2020

MA.KALIDAS'S POEMS(3)

FOUR POEMS BY 
MA.KALIDAS
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The snake creeps on with some plan for sure

Following its crisscross curvy trails
proves not that easy.

The smell of forked tongue
forces the prey to stand still
balancing it well.
The charmer who had forgotten the old way of
containing it in a small box
lay there all blue.
The son of
He who plucked the tooth of the snake
that knows not to suck its own venom by itself
and added it to his chain of beads
is there in the third seat
as the clerk.
The snake hole that had thoroughly flattened
in a torrential downpour
forgot to crave for the aroma of milk.
She who had shared the picture of
a snake lifting its hood sky high
receiving no response even after 24 hours
abuses her mobile the entire day.
For attaining ‘paramapadha’ state
stung by all the snake
He who has lost hope in ‘Sarpa dhosha pooja’
is being torn by the hands of Time.
That which is shed and lies there
must be his skin only.
• பரமபதம் - Salvation; snake and ladder game
• சர்ப்பதோஷ பூஜை : Pooja for getting release from the curse of the astrological Raagu and Kethu
மா.காளிதாஸ்
June 18 at 6:52 PM •
ஏதோவொரு திட்டத்தோடு தான்
நகர்கிறது பாம்பு.
நெளிநெளிவான அதன் பாதைகளைப் பின்தொடர்தல் அவ்வளவு எளிதல்ல.
பிளவுபட்ட நாக்கின் வாசனை
ஆடாமல் அசையாமல்
நிலைநிறுத்துகிறது இரையை.
சிறுபெட்டிக்குள் அடக்கும் வகை மறந்த பழைய மகுடி
நீலம் பாரித்துக் கிடக்கிறான்.
தன் விஷத்தைத்
தானே உறிஞ்சத் தெரியாத
பாம்பின் பல்லைப் பிடுங்கிக் கழுத்துமணியில் கோர்த்தவன்
வாரிசு தான், அதோ அந்த மூன்றாம் இருக்கையில் எழுத்தராக.
ஒரு பெருமழையில்
தரைமட்டமாகிப் போன புற்று,
பால் வாசத்துக்கு ஏங்குதலை
மறந்தே போனது.
வானுயரப் படமெடுத்து நின்ற
பாம்பின் படத்தைப் பகிர்ந்து
அடுத்த 24 மணி நேரமாகியும்
பலன் கிட்டாதவள், தன் அலைபேசியை அன்று முழுக்க அவமதிக்கிறாள்.
பரமபத நிலை அடைய
எல்லாப் பாம்புகளிடமும் கொத்துப்பட்டும் சர்ப்பதோஷ பூஜையில்
நம்பிக்கையும் இழந்தவனைக்
கால முள் குத்திக் கிழிக்கிறது.
அங்கே கழன்று கிடப்பது, அவன் சட்டையாகத் தான் இருக்க வேண்டும்.

- மா. காளிதாஸ்


2.
Just as those words that you had poured down just like that
Out of blue with absolutely no need nor necessity
I am scattered all over the room.
This sultriness is required for the time being.
When the whole lot of calm hiding outside
Knocked at the door with the finger-tip
Didn’t dare to ignore it.
As throwing a huge stone into the well deep down
You lit the cabin.
As usual you wouldn’t have noticed a bird
With a soft sound a bird flying out
You wouldn’t have noticed, as usual.
From the roof staring at me fixedly,
a droplet that had missed to tumble long ago
lands on the upper lip as the lizard’s dropping
Inside the chalkpiece-frame drawn for the cluster of ants
the painting drawn by Time
with the dust in the room and the spiderwebs there
has got aligned splendidly.
Blending with the acid secreting in the
stomach moaning within
after safeguarding as a guarantee card
the hunger falling off hunger,the tears of words would disappear
Except banging shut the room
that yearningly awaits another opportune hour
nothing else can be done now.

மா.காளிதாஸ்
எந்தவொரு முன்னேற்பாடோ
தேவையோ அவசியமோ இன்றி
நீ கொட்டிக் கவிழ்த்த சொற்களைப் போல அறை முழுதும் விரவிக் கிடக்கிறேன்.
இந்தப் புழுக்கம் இப்போதைக்குத் தேவையாய் இருக்கிறது.
வெளியே ஒளிந்து கிடந்த
ஒட்டுமொத்த அமைதியும்
அறைக் கதவை
நுனிவிரலால் தட்டிய போது உதாசீனப்படுத்தத் துணிவில்லை.
ஆழக் கிணற்றில் ஒரு பெருங்கல்லைத் தூக்கிப் போடுவதைப் போல
அறை விளக்கை ஒளியூட்டினாய்.
மெல்லிய ஒலி எழுப்பியபடி, உள்ளிருந்து ஒரு புள் பறந்து போனதை
வழக்கம் போல் கவனித்திருக்கமாட்டாய்.
என்னையே
உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் உத்திரத்திலிருந்து, எப்போதோ
சொட்டத் தவறிய துளி
பல்லி எச்சம் போல
மேலுதட்டில் விழுகிறது.
எறும்புக் கூட்டத்திற்காகப் போட்ட
சாக்பீஸ் கட்டத்திற்குள்,
அறைப்புழுதி மற்றும்
ஒட்டடையைக் கொண்டு
காலம் தீட்டிய ஓவியம்
கனகச்சிதமாகப் பொருந்திவிட்டது.
பசியிலிருந்து கழன்று விழுந்த பசியை உத்தரவாத அட்டையைப் போலப் பத்திரப்படுத்திவிட்டு
உள்ளே முனகிக் கொண்டிருக்கும் வயிறு, சுரக்கும் அமிலத்தில் சீக்கிரமே கலந்து காணாமல் போய்விடும்
சொற்களின் கண்ணீர்.
இன்னொரு பொழுதுக்காக
ஏக்கத்துடன் காத்திருக்கும் அறையைப் படாரென்று சாத்துவதைத் தவிர
வேறு உபாயம் ஏதுமில்லை இப்போதைக்கு.
- மா. காளிதாஸ்


3

 Night has set in
Concealing the fact
at every nook and corner our torches glow
Insects have come to hover in clusters
The pet-cat jumps from one wall to another
A stone from somewhere chases the dog
that howls carrying the message of death.
Even the owl has come to know the truth.
The calf filled with fear
pounds against the udder of its mother cow
which sharpens its horns
preparing to tear the leash and run amok
The plume of the cock
that crows in the company of its hen
turns red and shines.
Our Drum
Our Trumpet
Our Clarion
Our Night
Our being set afire
at our Dawn.
We bow down to those and seek blessing from them
who carry our defeat in a palanquin, celebrating
The media glare that keeps flashing on
the relief being sprayed
to chase away what is left of us,
proving unbearable
our night's eyes recoil.

இரவு கவிந்துவிட்டது.
அது தெரியாவண்ணம்
முக்குக்கு முக்கு கொழுந்துவிட்டு எரிகிறது நம் தீப்பந்தம்.
பூச்சிகள் மொய்க்கத் தொடங்கிவிட்டன.
ஒரு சுவரிலிருந்து
இன்னொன்றுக்குத் தாவுகிறது
வளர்ப்புப் பூனை.
இழவுச் செய்தியை
ஏந்தி ஊளையிடும் நாயை
எங்கிருந்தோ துரத்துகிறது ஒரு கல். கோட்டானுக்கும்
விசயம் தெரிந்து விட்டது.
கயிறை அறுத்துக் கொண்டு ஓடக்
கொம்பு சீவும் பசுவின் மடியைப்
பயத்தில் மேலும் முட்டுகிறது இளங்கன்று.
இணையோடு சேர்ந்து கொக்கரிக்கும் சேவலின் கொண்டை
சிவந்து மினுங்குகிறது.
நம் பறை
நம் கொம்பு
நம் முழவு
நம் நிசி
நம் விடியலில்
நம் தீக்கிரை.
நம் தோல்வியைப்
பல்லக்கில் தூக்கி வைத்துக்
கொண்டாடி வருபவர்களிடம்
குனிந்து நெற்றியைக் காட்டி
ஆசிர்வாதம் பெறுகிறோம்.
நம் மிச்சங்களைத் துரத்தியடிக்கத் தூவப்படும் நிவாரணத்தின் மீது
மாறிமாறிப் பாயும் ஊடக வெளிச்சத்தில்
கண்கூசுகிறது நம் இரவுக்கு.
- மா. காளிதாஸ்


4. MAKING IT INTO A 
HARMONIOUS INSTRUMENT
Should groove it lengthwise
Should shrink it to fifteen inches.
Should pierce eight holes
Should block them with well-molded corks
For concealing the blood stain
and extra sheen
should apply paint on it
Should hand it over to an
accomplished musician
Cupping the lips
and the fingers lilting and lingering
should know how to play it with
no discordance
There should be a crowd savouring it all
with eyes closed.
If Kannan’s finger were to touch it
Then, sheer heaven.
With all these laborious efforts
won’t the Lathi
turn into Flute?

மா.காளிதாஸ்

இசைந்த கருவியாக்குதல்
நீளவாக்கில் குடைய வேண்டும்
பதினைந்து அங்குலமாகக்
குறுக்க வேண்டும்
எட்டுத் துளையிட வேண்டும்
செதுக்கிய தக்கை வைத்து
அடைக்க வேண்டும்
குருதிக் கறையையும்
கூடுதல் பளபளப்பையும் மறைக்க
வர்ணம் பூச வேண்டும்
தேர்ந்த இசைக் கலைஞரிடம்
கையளிக்க வேண்டும்
பிசிறு தட்டாமல்
உதடு குவித்து
விரல் நயனம் புரிந்து
இசைக்கத் தெரிய வேண்டும்
கண்மூடித் தலையை ஆட்டி
லயிக்கும் கூட்டம் வேண்டும்
கண்ணன் விரல் பட்டுவிட்டால்
ஜென்ம சாபல்யம் தான்
இவ்வளவு மெனக்கெடும் போது
லத்தி
புல்லாங்குழல் ஆகிவிடாதா என்ன?
- மா. காளிதாஸ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024