INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 5, 2025

NATCHIYAL SUGANTHI

A POEM BY
NATCHIYAL SUGANTHI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Eating Hybrid seeds
Relishing fruits with artificial hues
applied
The generation that celebrates
Things synthetic to the hilt
In front of its dance delirious
Nature stands dazed

In front of those brains
That acclaims and proclaims
Artificial Intelligence as the zenith
Of Technological advancement
Time stands frozen
Not knowing what to do

Standing before those unworthy ones
Who hail abject cheating
As height of diplomacy
If I ask
Is there a thing called heart
The diplomatic lot
Mocking and jeering
has a hearty laugh

Now, what to do with this
wretched mind?

Having a heart
Moist , wet – thawing out
Is it a curse in fact
O! Strategic Diplomat?

ஹைபிரிட் விதைகளைத் தின்று
நிறமேற்றிய பழங்களைச் சுவைத்து
செயற்கையை போற்றிக் கொண்டாடும்
தலைமுறையின் நடனத்துக்கு முன்பு
விக்கித்து நிற்கிறது
இயற்கை

தொழில்நுட்பத்தின் உச்சபட்சமென
செயற்கை அறிவை
விதந்தோதும் மூளைகளின் முன்
செய்வதறியாது திகைத்துக் கிடக்கிறது
காலம்

ஏமாற்றுவதை ராஜதந்திரம் என்று
சிலாகிக்கும் பதர்கள் முன்பு
இதயமென்று ஒன்று இருக்கிறதா என
கேள்வி கேட்டால்
கெக்கலித்து சிரிக்கிறது
ராஜதந்திர கூட்டம்

இப்போது என்ன செய்வது
இந்த பாழும் இதயத்தை?

மனமும் ஈரமும் இருப்பது
சாபமா
ராஜதந்திரமே?!

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET