A POEM BY
D.MANIVANNAN
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Going deeper beyond 500 feet
With unnecessary chemicals
Losing its uniqueness
With its body burnt
Bearing wounds all over
So lies this water!
Spreading carpet
with non-biodegradable plastics
destroying biodegradable trees, plants and creepers
turning sterile, lying dead
with the soil not fit even for microorganisms
to survive
_ So remains this Land!
Swallowing carbon particles
burnt to the core by wildfire
scorched by the missiles thrown
with the greed of capturing a country
Swirling and whirling taking turns
as Lower – Air circulation and
Upper-Air circulation
and so remain endangered
_ This Wind
Remaining as the veritable trash-bin
of Satellites
sent by countries the world over
in the name of developmental research
and, malfunctioning
going round and round
_ that Space called Sky!
The fire spit by the Ozone depletions
that filter the poisonous virulence
resulting in global warming
causing snow-mountain to melt
and the sea-level rising and devouring
the low-lying earth
due to Sun’s heat.
With seasons turning astray
and pouring haphazardly
proving chaotic to the growth thereby
mostly causes massive ruins
_ These Monsoon seasons
and the rains therein.
As fertile lands where paddy was sown
Prove profitable plots
For concrete structures
He who fed the world
Is now struggling to get
Even one square meal a day
Such is the sad state of peasant today.
When things are thus
In order to enable our future generation also
rejoice in the Festival of Pongal
which is a celebration of Nature
At least from now on
Let’s preserve Nature
as our heart so dear
and, worship it
as God - Omnipresent.
மணிவண்ணன் தேவராஜ்
50 அடியில் இருந்து
500 அடிக்கு கீழே போய்
தேவையற்ற வேதிப்பொருள்களின்
கலப்பால்
தனித்துவம் இழந்து
தேகம் வெந்து
புண்ணாகி கிடக்கிறது
இந்த தண்ணீர்!
மக்காத
நெகிழிகளால் கம்பளம் விரித்து
மக்கும் மரம் செடி கொடிகளை வேரழித்து
நுண்ணுயிர்கள் கூட
வாழ
தகுதியற்ற மண்ணாய்
மலடாகி
மரணித்து கிடக்கிறது
இந்த நிலம் !
கார்பன் துகள்களை விழுங்கி
காட்டுத் தீயால் கருகி
நாடு பிடிக்கும் ஆசையில்
எறியும் ஏவுகணை வெடித்தீயில் எரிந்து
கீழடுக்கு மேலடுக்கு என
மாறி மாறி சுழன்று சாகிறது
இந்த காற்று !
வளர்ச்சி ஆய்வின் பெயரில்
அனுப்பப்பட்டு
செயலிழந்து சுற்றி வரும்
உலக செயற்கைக்கோள்களின் குப்பை கூடமாக திகழ்கிறது
அந்த விண்வெளி ஆகாயம்!
விஷவீரியத்தை வடிகட்டும்
ஓசோன்படல சிதைவுகளால்
உமிழும் நெருப்பு
அப்படியே விழுந்து
பனிமலை உருகி
கடல் மட்டம் உயர்ந்து
தாழ்வான
பூமியை தின்றுவிட காரணமாகிறது
சூரியனின் வெப்பம்!
பருவம் தடம் மாறி
தாறுமாறாக பொழிந்து
ஆக்கத்திற்கு உதவாமல்
பெரும்பாலும்
பேரழிவையே தருகிறது
இந்த பருவமழை!
நன்செய் நிலங்களில்
காங்கிரீட் கட்டடங்களை விதைக்க
நெல் விளைந்த நிலங்கள்
விலை நிலமாகி வருவதால்
உலகுக்கே சோறு போட்டவன்
ஒருவேளை சோற்றுக்கு அல்லல்படும் நிலையில் வாழ்கிறான்
இன்றைய விவசாயி!
இந்நிலையில்
இயற்கையை கொண்டாடும்
இனிய பொங்கல் திருநாளை நாளைய தலைமுறையும்
மகிழ்வோடு கொண்டாட .....
இனியாவது
இயற்கையை
இதயம் போல் பாதுகாத்து
இறைவனாக வணங்குவோம்!
No comments:
Post a Comment