A POEM BY
SOLAIMAAYAVAN
in the courtyard of your office
the eyes fail to see
While planting the right foot inside the office
There were two ready with their demands
Green sky so close within the reach
As just glancing above one can measure
its length and breadth with ease.
Searching for the response to the RTI Post
Jumping into the file getting immersed
and then finally looking up
Lunch time has arrived.
I had absolutely forgotten urinating.
For the queries that come every now and then
Sending at once the required data
As sending Telegram
Yet receiving reprimand and abuse as gifts
I swirl like ‘Rayilpoochi’*
Calls in quick succession
as garbage carried by the mentally deranged.
Pesterings persisting
Asking for information.
Shaking off everything while shutting the door
Darkness and snow had encircled the Mountain.
Staring
I took a Selfie with it.
The mountain that sat on the shoulder
could hear the child’s laughter.
*Millipede
உன் அலுவலக முற்றத்தில் தென்றலைத் தெளிக்கும்
அவ்வளவு பெரிய மலை கண்ணுக்குத் தெரியவில்லை
அலுவலகத்தின் உள்ளே
வலது காலை வைக்கும் பொழுது
கோரிக்கையுடன் நின்றிருந்தனர் இருவர்
நிமிர்ந்து பார்த்தாலே
அளந்துவிடலாம் அருகில் பச்சை ஆகாயம்
RTI தபாலுக்கான பதிலை
கோப்புக்குள் குதித்து மூழ்கி நிமிர்கையில்
மதிய உணவுக்கான நேரம்
சிறுநீர் கழிப்பதையே மறந்திருந்தேன்
இடை இடையே மேலிருந்து வரும்
வினாக்களுக்கு உடனுக்குடன் தரவுகளை
தந்தி போல் அனுப்பியும்
வசவுகளைப் பரிசாக பெற்றுத் திருத்தங்களுக்குள்
இரயில் பூச்சியைப் போல் சுழலுகிறேன்
அடுத்த அடுத்த அழைப்பு
மனம் பிறழ்ந்தவன்
சுமந்து செல்லும் குப்பைகள் போல்
இடைவிடாத தகவல் கேட்கும் நச்சரிப்புகள்
நொடிப்பொழுதும் தாமதிக்காமல்
எல்லாவற்றையும் உதறி உதறி
கதவடைக்கையில்
இருளும் பனியும் மலையைச் சூழ்ந்திருந்தது
வெறித்துப் பார்த்தபடியே
அதனுடன் ஒரு செல்பி எடுத்துக்கொண்டேன்
தோளில் அமர்ந்த அந்த மலைக்கு
குழந்தையின் சிரிப்பு கேட்டது
~ சோலைமாயவன்
No comments:
Post a Comment