INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 5, 2025

MANIVANNAN DEVARAJ

A POEM BY
MANIVANNAN DEVARAJ

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

The fire spit by
the Ozone depletions that filter the
poisonous virulence
resulting in global warming
causing snow-mountain to melt
and the sea-level rising and devouring the low-lying earth
due to Sun’s heat.
With seasons turning astray
pouring chaotically
not facilitating growth and prosperity
mostly causes colossal damage
- these monsoon seasons and their rains
in fertile agricultural lands
sowing concrete buildings
as lands with paddy grown
are turning into commercial plots
he who fed the entire world
is today finding it hard to get one square meal a day
_ today’s peasant, so to say.
In such a situation
For our younger generation
to enjoy the Festival of Pongal
celebrating Nature
at least from now on
let us cherish Nature as our very heart
and worship it as
God, the Omniscient!

விஷவீரியத்தை வடிகட்டும்
ஓசோன்படல சிதைவுகளால்
உமிழும் நெருப்பு
அப்படியே விழுந்து
பனிமலை உருகி
கடல் மட்டம் உயர்ந்து
தாழ்வான
பூமியை தின்றுவிட காரணமாகிறது
சூரியனின் வெப்பம்!
பருவம் தடம் மாறி
தாறுமாறாக பொழிந்து
ஆக்கத்திற்கு உதவாமல்
பெரும்பாலும்
பேரழிவையே தருகிறது
இந்த பருவமழை!
நன்செய் நிலங்களில்
காங்கிரீட் கட்டடங்களை விதைக்க
நெல் விளைந்த நிலங்கள்
விலை நிலமாகி வருவதால்
உலகுக்கே சோறு போட்டவன்
ஒருவேளை சோற்றுக்கு அல்லல்படும் நிலையில் வாழ்கிறான்
இன்றைய விவசாயி!
இந்நிலையில்
இயற்கையை கொண்டாடும்
இனிய பொங்கல் திருநாளை நாளைய தலைமுறையும்
மகிழ்வோடு கொண்டாட .....
இனியாவது
இயற்கையை
இதயம் போல் பாதுகாத்து
இறைவனாக வணங்குவோம்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET