A POEM BY
LEENA MANIMEKALAI
Fixing some stones to set right the wreckage
They would be carefully watching it.
Amidst sound uproarious
Using silence as hand-fan
They would be contemplating.
The wounded hearts of strangers
They would softly open as tiny handbags.
Kneeling down they would tell tales
whispering into the ears of children
caressing cats’ bellies
they would put them to sleep.
They would gently wipe off the saliva
Oozing out of the mouth of the dead
Their countenances
brimming with dark and light
are but ambling lamps alright.
ஆசான்கள்
அவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்
சிதிலங்களில் சிறு அடைப்புக் கற்களைப்
பொருத்தி பார்ததுக் கொண்டிருப்பார்கள்
பெரும் சத்தத்திற்கு நடுவே
மெளனத்தை விசிறியாக அசைத்தபடி அவதானித்திருப்பார்கள்
அந்நியர்களின் காயப்பட்ட இதயங்களை
அவர்களின் சிறு கைப்பைகளைப்போல
மெல்லத் திறப்பார்கள்
மண்டியிட்டு அமர்ந்து குழந்தைகளின் காதுகளில்
கதை சொல்லி கிசுகிசுப்பார்கள்
பூனைகளின் வயிற்றைத் தடவிக் கொடுத்து
தூங்க வைப்பார்கள்
இறந்தவர்களின் வாயில் வழியும் எச்சிலை
மென்மையாக துடைப்பார்கள்
இருளும் ஒளியும் ததும்பி நிற்கும் அவர்களின் முகங்கள் நடமாடும் தீபங்கள்!
லீனா மணிமேகலை
No comments:
Post a Comment