INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, December 31, 2024

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT
PARTICIPATING TAMIL POETS 
IN OCT, NOV, DEC 2024  





 

INSIGHT - NOV-DEC, 2024

 INSIGHT  - NOV-DEC, 2024


S.VAIDHEESWARAN

 TWO POEMS BY 

S.VAIDHEESWARAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

1.THE STRUGGLE

The river would measure
Rain’s length.
In life imprisonment
vulnerable wind would rage inside the balloon.
The aged heart rising and falling being
erroneous beat of Time
Close to the third floor railings
Quite callous fight between
brain’s delirium
and life glued to the body like Iguana
In the midst of
experimental workshops
and freedom unleashed
with an umbrella form-torn
engaged in word-hunt
sweating and spent-out
the Neo Poet.

வைதீஸ்வரனின் கவிதை
போராட்டம்
ஆறு அளக்கும்
மழையின் நீளம்
ஆயுள் தண்டனையில்
பலூனுக்குள் குமுறும் அற்பக் காற்று.
எழுந்து விழும் வயோதிக இதயம்
காலக் குதிரையின் தப்புத்தாளம்
மூளைக் கொதிச்சலுக்கும்
உடம்பின் உடும்பு உயிர்க்கும்
மூன்றாம் மாடிக் கிராதியோரம்
மூர்க்கமான மௌன யுத்தம்
பரிசோதனைப் பட்டறைகளுக்கும்
தறிகெட்ட சுதந்திரத்துக்கும்
இடையில்,
வடிவம் கிழிந்த குடையுடன்
வார்த்தை வேட்டையாடி வியர்க்கிறான்
நவீன கவிஞன்.

(2)

A SOUND WITHIN
Age is a ‘Lifometer’.
Changing us into ants inside Time
moving us slowly
nurturing and torturing
It drags us along
into all too dark a jungle
utterly directionless.
It depicts years as life.
Stirring and severing different images
making us believe to be ‘I’
pushing us headlong into
the valleys of middle age.
Rising up still, and realizing
within ourselves self-deception
when we falter
giving walking-stick it helps us
climb ashore.
Unable to move on
standing on the road
where we’re destined to cease
when we look back
Age seems not to have been
but is lost
as a dream without trace.
I have no mouth to laugh.

உள்ளே ஒரு ஓசை
வயது ஒரு உயிர்மானி.
காலத்துக்குள் நம்மை
எறும்புகளாக்கி மெல்ல நகர்த்தி
வளர்ப்பதும் வதைப்பதுமாக
திக்குத் தெரியாத சம்பவக் காட்டுக்குள்
இழுத்துச் செல்லுகிறது.
வருஷங்களை வாழ்வாகச் சித்தரிக்கிறது.
வெவ்வேறு பிம்பங்களை
எழுப்பி அழித்து ‘நான்’ என்று
நம்பவைத்து நடுவாழ்க்கை
பள்ளத்தாக்குகளில் விழுத்துகிறது.
மேலும் எழுந்து வந்து நமக்குள்
தன்னேய்ப்பை உணர்ந்து தடுமாறும் சமயம்
கைத்தடியைக் கொடுத்து கரையேற்றிவிடுகிறது.
நகரமுடியாமல் விதி முடிந்த வீதியில் நின்று
திரும்பிப்பார்க்கும்போது
வயது இருந்ததாகத் தெரியாமல்
சுவடற்ற கனவாய் தொலைந்துவிடுகிறது.
சிரிப்பதற்கு எனக்கு வாயில்லை.

S.VAIDHEESWARAN 

KADANGANERIYAN ARIHARASUTHAN

POEMS BY 

KADANGANERIYAN ARIHARASUTHAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

For appeasing God who comes

climbing down the mountain

after standing with no respite

enduring the paining legs

and blessing the staunch devotees

who come with undaunted hope

keeps forever ready

a Beedi

He the man, insane

rambling at the base.

2

The early morn fog

and the smoky smog

arising at dusk

draw but the same portrait

In it the heart does see

what it wants to perceive.

3

He who humbly falls at the feet

of those who feed so many

without showing their identity

and receive their blessings

become God

4

A kind of mania that is

Caught amidst Science and Actuality

A life going to docks

It would take long

to grasp its essence

Leave all those

and get going in every sense.

5.

Come

Come and see

Even for attempting to sense it

You need ‘Punya’ immense

You have come this much

Henceforth let your night

have full-moon throughout.


1. 

நம்பி வந்த பக்த கோடிகளை

கால்கடுக்க நின்று அருள்பாலித்து விட்டு

மலையிறங்கி வரும் தெய்வத்தை

ஆற்றுப் படுத்த

ஒரு பீடியை எப்போதும் தயாராக வைத்திருக்கிறான்

அடிவாரத்தில் சுறறித் திரியும் சித்தம் கலங்கியவன்.

2. 

அதிகாலைப் பனி மூட்டமூம்

அந்தி சாயும் வேளையில் எழும்

புகை மூட்டமூம் தீட்டும் சித்திரமும் ஒன்று தான்

மனம் விரும்பிய ஒன்றை அதனில் பார்த்துக் கொள்கிறது.

3.

இவ்வளவு பேருக்கும் அடையாளம் இல்லாமல்

அன்னதானமிடும் அன்பர்களின் தாழ் பணிந்து

ஆசிர்வாதம் பெற்றுக் கொள்பவன் தெய்வமாகிறான்

4.

அஃதொரு பித்து

அறிவியலுக்கும்

யாதார்த்தத்திற்குமிடையே தட்டழியும் ஒரு வாழ்வு

அது பிடிபட காலமாகும்

அதையெல்லாம் விட்டுவிட்டு

நீ பாட்டுக்கு நட

5.

வா

வந்து பார்

உணரத் தலைப்படவே

பெரும் புண்ணியம் வேண்டும்

இம் மட்டும் வந்துவிட்டாய்

இனி உன் இரவெல்லாம் பௌர்ணமி யாக இருக்கட்டும்.


Kadanganeriyaan Ariharasuthan

  

JAYADEVAN

A POEM BY

JEYADEVAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



Does a peacock carry such a heavy plumage
Willingly
How lovely it would be to have tail squirrel-like
It might be musing.
The pigeon that eats grain
Might envy the rat that eats worms
The rose smiles of course with fear
As a princess celebrating her birthday
in the enemy’s camp.
Will the tortoises consider their shells
as veritable shields
Seeing the lilt and leap of fish
They might want to smash them. O, Yes.
Being careful on not having its antlers
Dash against the branches
the Sambur Deer(Kalai maan) might miss its prey.
Antlers can be no beauty to it in anyway.
Will the elephant feel proud
of the ivory
It is the chain round its legs
that causes it worry.
Thinking of the salty-scum
the Sea might come wailing to the shore
in search of a clean bathroom.

ஒரு மயில் இத்தனை கனமான தோகையை விரும்பியா
சுமக்கிறது
அணில் வாலைப்போல் இருந்தால்
அழகென நினைக்கலாம் மனதில்
புழுவைத் தின்னும்
எலியைப் பார்த்துப்
பொறாமை படலாம்
தானியம் தின்னும் புறா
ரோஜா பயத்தோடுதான் சிரிக்கிறது.
எதிரிகள் முகாமில் பிறந்தநாள்
கொண்டாடும்
ஒரு ராஜகுமாரியைப்போல
ஆமைகள் கவசமாகவா நினைக்கும் ஓட்டை
மீன்களின் துள்ளல் பார்த்து
உடைத்துவிட நினைக்கக்கூடும்
ஓடுகளை
கிளைகளில் கொம்பு மோதாமல்
போகவண்டுமே என்பதிலே
இரையை விட்டுவிடலாம் கலைமான்
கொம்பு அதற்கு அழகல்ல
தந்தங்களை நினைத்து
கர்வப்படவா போகிறது யானை
காலிலிட்ட விலங்குதான்
அதன் கவலை
உப்புக்கசடை நினைத்து
ஓலமிட்டபடி கரைக்கு ஓடிவரலாம்
கடல்
நல்ல குளியறை தேடி.

ஜெயதேவன்

LEENA MANIMEKALAI

A POEM BY
LEENA MANIMEKALAI
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

PREDATOR
The teeth of he who hunts are all White
The canines shine as the throne’s precious stones
The row of molars are the illustrious ones
demanding for podiums to be erected
and preys to be served
Any of the many smiles
with the tip of anterior seen
are those with promises umpteen
for setting the universe in motion.
With the wisdom teeth that gnawed me
rotting
worms keep proliferating
Some of them secreting in your mouth I notice
I turn towards scenes diverse.

வேட்டையாடுபவனுடைய பற்கள் வெண்மையானவை
கோரைகள்
சிம்மாசனத்தின் கற்களாக பளபளப்பவை
கடைவாய் வரிசை
மேடைகள் அமைத்து
இரைகளைப் பரிமாறக் கோரும் சீர்மிக்கவை
முன்முனை தெரியும் புன்னகை ஒவ்வொன்றும் பிரபஞ்சம் அசைவதற்கான ஒளியைத் தரும் வாக்குறுதி அளிப்பவை
விருதுகளுக்கான முன்பதிவு செய்யத்தகுபவை
என்னை மென்ற
ஞானப்பற்கள் அழுகி
புழுக்கள் பெருகியவண்ணமிருக்கின்றன
அவற்றில் சில
உங்கள் வாய்களில் ஊறுவதைப் பார்க்கிறேன்
வேறு காட்சிகளுக்கு திரும்புகிறேன்!
- லீனா மணிமேகலை

M.D.MUTHUKUMARASWAMY

TWO POEMS BY
M.D.MUTHUKUMARASWAMY

Rendered in English by Latha Ramakrishnan
..............................................................................................................................

(1) THE RESONANCE OF LIFE
........................................................

[TRANSLATION - 1]

During the last storm
the pigeon that which lay and incubated eggs
in my balcony then
Today I saw again.
Counted the baby pigeons it hatched
When I counted for the first time
There were four babies
Second time
there were eight
When counted them with the help of their beaks
At first there were nine
And then seventeen
Counting their feathers
They seemed to fill the entire universe
What to count with what
The bounty of a lone beak
is the harmony of Life’s resonance.

TRANSLATION - 2
.....................................................
THE SYMPHONY OF LIFE
.....................................................
I saw again today
the pigeon
that lay and incubated eggs in my balcony
last storm
I counted the nestlings it has hatched.
It was four
The first time
Then
there were eight babies
Counting them by their beaks
they became initially nine
and then seventeen
Counting them by their feathers
They seemed innumerable
Encompassing universe entire
What to count and how
A lone beak’s abundance
is Life’s resonance.

“உயிரோசை”
M D Muthukumaraswamy
போன
சூறாவளியின்போது
என் பால்கனியில் முட்டைகளிட்டு
அடைகாத்த புறாவை இன்று
மீண்டும் பார்த்தேன்
அது பொரித்த
புறாக்குஞ்சுகளை எண்ணினேன்
முதல் முறை எண்ணியபோது
நான்கு புறாக்குஞ்சுகள் இருந்தன
இரண்டாம் முறை
எட்டு புறாக்குஞ்சுகள் இருந்தன
அவற்றின் அலகுகளை
வைத்து எண்ணியபோது
ஆங்கே முதலில் ஒன்பதும்
பிறகு பதினேழும் இருந்தன
இறகுகளால் எண்ணினால்
அவை எண்ணற்று
பிரபஞ்சம் நிறைக்கும்
எனத் தோன்றியது.
எதனால் எதை எண்ண?
ஒற்றை அலகின் மிகுதி
உயிரோசையின் இனிமை

ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது குறைந்தது நான்கைந்து மொழிபெயர்ப்புகள் மனதில் தோன்றி மறையும். ஒரு வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தையைத் தேடும்போது தனித்துவமான சொல்லைப் பயன்படுத்துவதுதான் கவிதைக்கு நியாயம் சேர்க்குமா, அல்லது எல்லோருக்கும் தெரிந்த வார்த்தையைப் பயன்படுத்துவது மொழி பெயர்ப்பில் கவிதையின் பொருள் தெளிவாக இருக்க உதவுமா என்அ கேள்வி எழுந்தவாறே இருக்கும். வழக்கமான ஆங்கிலக் கவிதை வடிவில், ஆங்கில மொழியமைப்புக்கு ஏற்ப மொழிபெயர்க்கவேண்டும் என்று சிலர் சொல்வது ஞாபகம் வரும். ஆனால், நவீன கவிதையில் சொற்கள் வரிசைப்படுத்தப்படுவதே தனி அர்த்தத் தைத் தருவதாக அமையும்போது அதை முடிந்தவரையில் ஆங்கிலத் திலும் கொண்டு வருவதுதானே சரி என்று தோன்றும். ஆங்கில இலக்கணத்தின் அடிப்படை மாறாத அளவில் முடிந்தவரை தமிழின் வார்த்தையமைவு மாறாமலே மொழிபெயர்க்க வேண்டும் என்று எப்போதுமே தோன்றும்.
இறுதிவடிவமாக வரும் மொழிபெயர்ப்பு ஒருவகையில் முற்றுப்புள்ளியாக அமையாமல் மூன்று புள்ளிகளாகவே அமைவதே பெரும்பாலும் நடக்கிறது. அதனாலேயே ஒரு முறை மொழிபெயர்த்த கவிதையை மறுமுறை மொழிபெயர்க்கும் போது ஒரேவிதமாக அமைவதே யில்லை - பிரக்ஞாபூர்வமாகவும், தன்னையுமறியாமலும் புதிய சொற்கள், சொல்லமைவு இடம்பெற்று விடுகின்றன.
_ லதா ராமகிருஷ்ணன்
.............................................................

(2)

As one ring each hour
Light
swings a chain in the
great grand expanse of cosmos.
When the wind cuts across
shadows disperse.
A full circle never ever
achieves its ultimate figure.
As fragments of light broken
a day comes to a close
as golden chain
tangled in Tall Grass.
“ஒரு மணி நேரத்திற்கு
ஒரு கண்ணி என ஒளி
பெருவெளியில் சங்கிலியொன்றை வீசுகிறது
காற்று அந்தக் கண்ணிகளை
வெட்டுகையில் நிழல்கள் சிதறுகின்றன
ஒரு முழு வட்டம் என்றும் நிறைவுற்ற
வடிவத்தை எட்டுவதில்லை
உடைந்த ஒளித் துண்டுகளாக
ஒரு நாள் நிறைவடைகிறது
உயர்ந்த புற்களிடையே
சிக்கிய தங்கச் சங்கிலியாக.”

M.D.Muthukumaraswamy

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024