INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 12, 2021

A.K.MUJARATH

 A POEM BY

A.K.MUJARATH

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE SECOND HALF OF SUNDAY

The sky was dissolving its blue hues in the sea.
On its expanses I was losing minutes.
At that juncture
unexpectedly
a baby fish leapt out of me
into the sea.
As the sea is too deep
It has to be waded through
stage by stage.
There prevails the climate of
fish preying on fish .
Still the baby fish keeps moving ahead
There could be fish
devouring humans
A black fish that chanced to see the baby fish
Which had jumped out of me
comes chasing now
While escaping horror-struck
as a torrential downpour drenches me all over
I was going homeward.
Wonder what would have befallen the baby fish.
If only I go next Sunday evening
and let another baby fish leap out
the rest of the tale would be known.

ஞாயிற்றுக் கிழமை பின்னேரம்
#
வானம் தனது நீல நிறங்களை
கடலில் கரைத்து கொண்டிருந்தது
நான் அதன் வெளிகளில்
நிமிடங்களை தொலைத்துக் கொண்டிருந்தேன்
அத்தருணத்தில்
எதிர்பாராமல் எனக்குள் இருந்து
ஒரு மீன் குஞ்சு
அக்கடலில் குதிக்கிறது
கடல் மிக ஆழம் என்பதால்
அதன் ஆழத்தை
ஒவ்வொரு தரமாக கடந்து செல்ல
வேண்டி வரும்
அங்கே மீன்கள் மீன்களை
வேட்டையாடி வாழும் சூழல்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
என்றாலும் மீன் குஞ்சு முன் நகர்ந்து செல்கிறது
மனிதர்களை கூட
விழுங்கி விடும் மீன்கள் அங்கே வாழலாம்
எனக்குள் இருந்து குதித்த
அம் மீன் குஞ்சை
எதிர் பாராத நிலையில் கண்டு கொண்ட
ஒரு கருப்பு நிற மீன்
இப்பொழுது துரத்தி வர துவங்குகிறது
மிகப் பயங்கரத்தோடு மீளும் தருணம்
என்னை பெருத்த மழை ஒன்று நனைப்பதால்
நான் வீடு திரும்பி கொண்டிருந்தேன்
மீன் குஞ்சுக்கு என்ன நடந்திருக்குமோ தெரியவில்லை
இனி அடுத்த ஞாயிற்றுக் கிழமை பின்னேரம் போய்
இன்னொரு மீனை குதிக்கவிட்டால் தான்
மீதிக் கதை தெரிய வரும்.

ஏ.கே. முஜாரத்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024