THREE POEMS BY
LIBI ARANYA
(1)
AN EXTRACTED POLITICAL SENTENCE
have arrived at the Vada-shops
Beneath my ‘Ulundhu-vadai
oil oozing with both palms brought together in ‘Vanakkam’
_ Deva Anburaj
Devaraj was one who sold Narcotics
Under the friend’s ‘Vaazhaikkaai Bajji’
with absolute humility greets
Suya.Murugavel Raja.
For the whole of his life
filling boiled bliss
In car tube _
Suyambudurai
Thank God the one who boiled and sold
didn’t christen his son as
Inbaraj , I observe..
To your winning candidate
Mr.‘Suya-Inbaraj’….
So my friend reads it with
the words differently aligned
What a profound political statement
has gone into hiding
under the Bajji
Libi Aranya
பிழிந்தெடுத்த ஓர் அரசியல் வாக்கியம்
உபரியாக அடிக்கப்பட்ட
விநியோகிக்கப்படாத
துண்டுப் பிரசுரங்கள்
வடைக்கடைகளுக்கு வந்தாயிற்று
எனது உளுந்த வடைக்குக் கீழே
எண்ணெய் வழியக் கூப்புகிறார்
தேவ . இன்பராஜ்
தேவராஜ் பொட்டலம் விற்றவர்
நண்பனின் வாழைக்காய் பஜ்ஜிக்குக்கீழ்
எத்தனை பணிவுடன் வணங்குகிறார்
சுய. முருகவேல் ராஜா
ஆயுசு முழுக்கக்
கார் டியூபில்
காய்ச்சிய உற்சாகத்தை நிரப்பியவர்
சுயம்புதுரை
நல்ல வேளை
காய்ச்சி விற்றவர்
தனது மகனுக்கு
இன்பராஜ் என்று பெயரிடவில்லை
என்கிறேன்
உங்கள் வெற்றி வேட்பாளர்
சுய. இன்பராஜ் அவர்களுக்கு…
நண்பன் மாற்றி வாசித்துப் பார்க்கிறான்
எத்தனை தீர்க்கமான
தேர்தல் அரசியல் வாக்கியமொன்று
பஜ்ஜிக்கு அடியில் போய்ப்
பதுங்கியிருக்கிறது.
(2)
to my heart’s content.
This place makes none but me alone feel ill at ease
For my buddies
a cup of tea at this roadside shop
at the corner is a must; not to be missed.
Today some good signs are there to see
Under the shade of the Neem tree
both the funeral vans
resting
with none to carry.
All the six glass caskets
in which the mortal remains would be laid
getting suntanned
at the entrance of the shop opposite.
At the evening shop at the junction
from the garlands hanging always
not knowing what for _
for something good or bad
releasing a pair
he offers them to the foreign couple
for placing.
In the right hand with the shirt rolled above
the pair of leaves sprouting
rikshawalla’s heart precious.
This is a day devoid of
the shade of sorrow.
“Master, Four Tea” says he who
brought me there
“Of the four one is Masala Tea”
I declare.
Libi Aranya
•
இந்த தினத்தைச்
சப்புக்கொட்டிப் பருகுவேன்
எனக்குத்தான்
இது தொந்தரவான இடம்
என் கூட்டாளிகளுக்கு
இந்த முக்குக்கடையில்
டீ குடித்தால்தான் உண்டு
இன்று என்னவோ நல்ல சங்கேதங்கள்
அந்த வேம்பின் நிழலில்
அமரர் ஊர்தி இரண்டுமே
சவாரி இல்லாமல் ஓய்வெடுக்கின்றன
சடலம் கிடத்தும்
கண்ணாடிப் பேழைகள் ஆறும்
வாடகைக்குப் போகாமல்
எதிர்க் கடைவாசலில்
வெயில் காய்கின்றன
நாற்சந்தி மாலைக்கடையில்
நல்லதுக்கா கெட்டதுக்கா வெனத்
தெரியாத துக்கத்தில்
சதா தொங்கிக் கொண்டிருக்கும் மாலைகளில்
ஒரு சோடியை விடுவித்து
பயணம் வந்த
வெளிநாட்டுத் தம்பதிக்குச்
சூடத் தருகிறார்
சட்டையை ஏத்திச் சுருட்டிய
வலது கையில்
சோடி இலைகள் துளிர்க்கும்
ரிக் ஷாக்கார இதயக்கனி
துயரத்தின் நிழல் கவியா தினமிது
மாஸ்டர் நாலு டீ
என்கிறான் அழைத்து வந்தவன்
நாலுல ஒண்ணு
மசாலா டீ என்கிறேன்.
would delay as much as possible
and prepare the tea
who makes the great Vada mount
reduce to the ground-level in no time
At the spot where the incident took place
He who slips a piece of cloth
over the evidences found
without leaving his imprints
_ is this one a
server a Forensic Expert?
Plucking one with great care
from the pages of Dailies
properly cut into small squares
and lifting it
his fingers forming
the calyx
extends the Vada-flower
to all who come there
if it is just something to eat
can very well decline
but how to say no
to this love pristine
I accept
For sorrow
The nature of the poop of crow
It searches on its own
Too tall a crown
In the paper that came to me
Someone is smiling for his
eighth death anniversary
the oil alighting on his head
is spreading through his left cheek
Oh no _
I can no more
hold this sorrow .
Libi Aranya
•
பாதியைப் பிட்டுக் கொள்கிறீர்களா
தேநீர் வில்லைகளைப் பெற்றுக்கொண்டு
கூடியமட்டும் தாமதித்துத்
தேநீர் தயாரிக்கும் மாஸ்டர்தான்
வடைக்குவியலை
விரைந்து தரைதட்டப் பண்ணுகிறவர்
சம்பவம் நிகழ்ந்த ஸ்தலத்தில்
சிக்கும் தடயப் பொருட்கள் மீது
ஒரு துணியைப் போட்டு
ரேகை படாமல்
ஒவ்வொன்றாய் எடுக்கும்
தடயவியல் ஆளா
இந்தச் சிப்பந்தி
கத்தரித்துத் தொங்கவிடப்பட்ட
சச்சதுரத் தினசரி நறுக்குகளில்
ஒன்றைக் கொய்து
குவியலில் ஒன்றைப் பொத்திப்
பாந்தமாய்த் தூக்கி
மெல்லமாய் மலர்த்தித்
தன் விரல்களே
புல்லி வட்டமாக
வருவோரிடமெல்லாம்
வடைப் பூவை நீட்டியபடி இருக்கிறார்
வெறும் பண்டமெனில் மறுக்கலாம்
இந்த அன்பை என்னதான் செய்வது
ஏற்றுக்கொள்கிறேன்
துயரத்திற்குக்
காக்கை எச்சத்தின் குணம்
உரிய சிரங்களை அதுவேதேடியடைகிறது
எனக்கு வந்த காகிதத்தில்
எட்டாம் ஆண்டு நினைவஞ்சலிக்குச்
சிரித்தபடியிருக்கிறார்
யாரோ ஒருவர்
அவர் தலையில்
இறங்கிய எண்ணெய்
இடது கன்னத்தின் வழி
படர்ந்து கொண்டிருக்கிறது
என்னால்
ஏந்த முடியவில்லை
இந்தத் துயரத்தை.
No comments:
Post a Comment