INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 17, 2023

KANIAMUDHU AMUTHAMOZHI

 TWO POEMS BY

KANIAMUDHU AMUTHAMOZHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1) DIGITAL DIALOGUE
Kinship formed of voices umpteen
with faces unseen
greet us day-in and day-out
Wishing us to have a day joyous and carefree.
Gifting sweet dreams to our nights
With children begotten
leaving us in search of a life of their own
For the voices that sound
to fill our aloneness
Needs abound.
As Mother
Or, Sister
Or dear
Or Sweetie
Or Daddy
Or
Brother
Or
My Man
Or Hey, Darling
Calls through net
Free of cost.
In a life where
connecting People
is the Prime Motive of all Networks
Amazon
Beachmode
Milagrow
Human touch
Robotic Feel
_So on and so forth
Absolutely free
Anyone can talk with anyone
Can melt
Listening to one’s sad tale
Can console, speaking soothing words
Love they can share
Shed tears profusely
Wail and lament
Face not a must
For these voice-born kith and kin
If some relation
proves troublesome
Simple is the solution
No need to struggle hard
crushing the concerned vocal cord.
Suffice to disconnect the net
At once
the digital clan
would go beyond too long a distance
முகம் தெரியாத
குரல் வழி உறவுகள்
தினமும் நம் நாள்
இனிதாக வாழ்த்துகிறது
நம் இரவுகளுக்கு
இனிய கனவுகளை
பரிசளிக்கிறது
பெற்ற குழந்தைகள்
வாழ்க்கைத் தேடலின்
கட்டாயத்தில்
பிரிந்து போக
தனிமையை நிறைக்க
ஒலிக்கும் குரல்களுக்கு
தேவைகள் அதிகம்
அம்மா என்றோ
அக்கா என்றோ
அன்பே என்றோ
அடியே என்றோ
அப்பா என்றோ
அண்ணா என்றோ
அன்பரே என்றோ
அடேய் என்றோ
அழைப்புகள்
இணையவழி
இலவசம்
கனெக்டிங் பீப்புள்
பிரைம் மோட்டிவ் ஆஃப்
ஆல் நெட்வொர்க்ஸ்
ஆன வாழ்வில்
அமேசான்
பீச் மோட்
மிலாகுரோ ஹ்யூமன் டச்
ரோபாட்டிக் ஃபீல்....
இத்யாதிகள் இலவச இணைப்பு
யாரும் யாருடனும்
கதைக்கலாம்
கதை கேட்டு உருகலாம்
ஆறுதல் கூறி தேற்றலாம்
அன்பாய் நேசம் பகிரலாம்
கண்ணீர் விட்டு கதறலாம்
முகம் வேண்டும் என்பதில்லை
இந்த குரல் வழி உறவுகளுக்கு
உபத்திரவம் அளிக்கிறது
என்றால் வெரி சிம்பிள்
குரலை நெரிக்கும்
சிரமம் வேண்டாம்
இணையத்தை துண்டித்தால்
போதும் தூரமாகப்
போய் விடும்
டிஜிட்டல் உறவுகள்
(2)
That the fish would revel swimming crisscross
She pours water upon the paintings of fish
drawn on the floor
The fish looking pale with colours blurred
has gone deep down the sea
says she.
As I, dumbstruck,
looked at her who drew sea on the floor
‘Let’s go into the sea’
says she
sprinkling a droplet of water
and asking me to swim.
Between my daughter dear and myself
the sea where fishes swam across
rise surging uproariously.
Amuthamozhi Mozhi
மீன்கள் நீந்தி களிக்குமென்று
தரையில் வரைந்த ஓவிய மீன்களின் மீது நீரை ஊற்றுகிறாள்
கலங்கிய வண்ணங்களில் மங்கலாய் தெரியும் மீனை கடலுக்கு அடியில் போய்விட்டது என்கிறாள்
தரையில் கடலை வரைந்தவளை நான்
விக்கித்துப் பார்க்க நாமும் கடலுக்குள்
போவோம் என்று சிறு துளி நீரை தெளித்து நீந்து என்கிறாள்
எனக்கும் மகளுக்கும் இடையில் மீன்கள் நீந்திக் கடந்த ஆழி ஆர்ப்பரித்து எழுகிறது.

MOHAMED BATCHA

 A POEM BY

MOHAMED BATCHA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


TALE PERENNIAL

Getting inside a tale
Does prove difficult always.
The feeling of knocking at the adjacent door
Though illusory would turn one apprehensive.
?That’s how I also
Got into that story
As a guest uninvited.
Each one of the introductions
Eight curves erroneous.
Diologues that can’t be told
Even iun 360 degrees.
Am searching for the entrance to exit
The pages go on and on
Despite closing it and keeping it aside
the tale
with nails
keeps on waking me up
always
Mohamed Batcha
முடியாத கதை
.
ஒரு கதைக்குள்
நுழையும் போது சிரமமாகத்தான் இருக்கிறது.
அடுத்த வீட்டுக் கதவைத்
தட்டுவது போல் பிரமை சங்கடப்படுத்தும்.
அப்படித்தான் நானும்
அந்த கதைக்குள் அழையாதவனாய் நுழைந்தேன்.
அறிமுகங்கள் ஒவ்வொன்றும்
எட்டுக் கோணல்கள்.
360 பாகையிலும் முடியாத வசனங்கள்.
வெளியேற வாசலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
பக்கங்கள்
முடியாமல் தொடர்கின்றன...
மூடி வைத்தாலும்
கதை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது நகங்களுடன்.
.
முகமது பாட்சா

AHMED FAIZAL

 A POEM BY

AHMED FAIZAL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


The leaf that came floating and halting there
disrupts the solitude of the lone pebble.
The river bank brimming with the reflection of water
disturbs the leaf’s reposing.
Watching the sway of the leaf
the pebble sets forth on another solitariness
from Square Number One.

ஒற்றைக் கூழாங்கல்லின்
தனிமையை குலைக்கிறது
மிதந்து வந்து நிற்கும் ஓரிலை
இலையின் இளைப்பாறலை
சிதைக்கிறது
நீரின் பிம்பம் நிறைந்து கிடக்கும்
ஆற்றின் கரை
இலையின் ஆட்டத்தைப் பார்த்தபடி
வேறு ஓர் தனிமையை
முதலில் இருந்து தொடங்குகிறது கூழாங்கல்.
-அகமது ஃபைசல்

THARIK THASKI

 A POEM BY

THARIK THASKI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THEY
When they were conversing
They talked not
of renovating their house;
nor of attires stupendous,
not of Love
nor of War
Not of Beauty
But
they were talking about
a square meal for today
They were discussing at length
about the hunger of their
starving children.
Poor they – those men and women
Watching from inside their quarters
the Noon-Sun
could be clearly seen.
Tharik Thaski

அவர்கள்
அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது
அவர்கள் தங்களின் வீட்டைச் சரி செய்வது பற்றி பேசவில்லை
அழகான உடைகள் பற்றிப் பேசவில்லை
வீரம் பற்றிப் பேசவில்லை
காதல் பற்றிப் பேசவில்லை
போர்கள் பற்றிப் பேசவில்லை
அழகு பற்றிப் பேசவில்லை
அவர்கள் இன்றைய பொழுதிற்கான உணவு பற்றி
பேசிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகளின் பசி பற்றி நிறையவே
பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாவம்
அவர்களின்
வீட்டிற் குள்ளிருந்து பார்த்த போது
உச்சிச் சூரியன்
அப்படியே தெரிந்து கொண்டிருந்தது.
நீறோ

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

 TWO POEMS BY

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
Looking at the tree where seated she said thus:
“While rising above from the branch
the bird’s thought displaces the tree”
‘Time for parting’
I jotted down.
5.45 p.m.
Sharing the lone strand of withered feather
in Facebook
might get delayed by a few moments.
In the long stretch of passage
the cloud coins a poem as follows:
“She who was with the tree
is today with my heart”
The sky and myself
haven’t chosen our gender-stance
The tree
stands tall and erect
as the huge block for both of us
The customary readers of Poetry
_ please excuse me.
In my poem
there might surely be more than one woman.
When she concludes herself
as the breeze surging above from the branch
the winged kite of the boy
who has just got into this scene
gets entangled.
Thirugnanasampanthan Lalithakopan

அமர்ந்திருந்த மரத்தினை நோக்கி
இவ்வாறு கூறினாள்
"கிளையிலிருந்து மேலெழுகையில்
பறவையின் சிந்தனை மரத்தினை
இடம்பெயர்க்கிறது"
பிரிவதற்கான நேரமென
குறிப்பெடுத்துக்கொண்டேன்
பிற்பகல் 5.45.
உதிர்ந்து கிடக்கும்
ஒற்றை இறகினை
முகநூலில் பரிமாறிக்கொள்ள
சில கணங்கள் தாமதமாகலாம்.
நெடிய பாதையில்
மேகம் இவ்வாறு கவிதை புனைகிறது
"மரத்தோடு இருந்தவள்
இன்றென் மனதோடு"
நானும் வானமும்
எங்களுக்கான
பால்நிலையினை தேர்வு செய்யவில்லை
மரம் எங்களுக்கான
பெரும்தடையாக
நிமிர்கிறது.
கவிதையின் மரபார்ந்த
வாசகர்கள் மன்னியுங்கள்
எனது கவிதையில்
நிச்சயமாக ஒன்றுக்கு
மேற்பட்ட பெண்கள் இருக்கலாம்
கிளையிலிருந்து
மேலெழும் காற்றாக அவள்
தன்னை இறுதி செய்கையில்
சிக்கி கொள்கிறது
இந்த காட்சிக்குள் இப்போதுதான்
நுழைந்த சிறுவனின்
பறவைப்பட்டம்.
-லலித்தா-
(2)
In the page ending with
PTO’
the image of a tree was there
Searching for the third page
of the leaf dropped down
the leaves falling further
probe along the air
At the instant of closing the book
darkness hovers.
Leaving along the way she who
forgot to switch off the light _
Moves on
Tomorrow’s Morn.
I go past the
flight of fancy
about the fireflies
While losing the page that opens
the book again
from some page arrives
the mobile’s signalling light waves.
Thirugnanasampanthan Lalithakopan
"மறுபக்கம் பார்க்க"
என முடிந்த பக்கத்தில்
மரத்தின் படம் இருந்தது
கீழே விழுந்த இலையின்
மூன்றாம் பக்கம்
தேடி காற்று வெளியிடையே துழாவுகின்றன
மேலும் வீழ்கின்ற இலைகள்.
புத்தகத்தை மூடும்
தருணத்தில் இருள் கவிழ்கிறது
விளக்கை அணைக்க மறந்தவளை
வழியில் விட்டு நகர்கிறது
நாளைய காலை
மின்மினிகள் குறித்த கற்பனையை
கடந்து செல்கிறேன்
மீண்டும் புத்தகத்தை திறக்கும்
பக்கத்தை தவற விடுகையில்
ஏதோவோர் பக்கத்திலிருந்து
அலைபேசியின் ஒளிச்சமிக்ஞைகள்.
-லலித்தா-


MUNAS KALDEN

 TWO POEMS BY

MUNAS KALDEN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1) THE SMILE ACROSS



Ere our dusk decline and dry up
In water brimming with quietude
Your soft yellow would spread for your sake.
On shore on the other side
deeply restive and all shaken
the war of killing innocent people
who had done nothing wrong
is going on all along.
The never to freeze scream and wail
of the gullible ones
settle on the twilight sun slipping down.
On this side
throughout the hours
with just a few moving hither and thither
cautious of the impending arrival of the
deadly missile
as taking precaution
the heart hastens to hide its life
in the bunker at the bottom rung.
In between
The smile of the evening sun
alighting on Dnipro river
with tinkling lovely anklets
sprinkles again the solace of life
well-blended with Hope unstained
.Munas Kalden
The Dnieper or Dnipro is one of the major transboundary rivers of Europe, rising in the Valdai Hills near Smolensk, Russia, before flowing through Belarus ...

மறுபுறத்துப் புன்னகை

நம்மந்தி சாய்ந்து காயமுன்
அமைதி ததும்பி மிதக்கும் நீரில்
உன்பொருட்டு படருமுன் இளமஞ்சள்.
நிம்மதியிழந்து பதறும் மறு கரையில்,
தப்பு எதுவுமே செய்யாத சனங்களைக்கொல்லும்
யுத்தம் நடந்தேறுகிறது.
அப்பாவிகளின் உறையா ஓலம்,
சாயும் அந்திச்சூரியனில் படிகிறது.
இந்தப்பக்கம்,
சிறு நடமாட்டம் கொண்ட பொழுது முழுவதும்,
உயிர்காவ எத்தனிக்கும் ஏவுகணை
வருமுன்னதான எச்சரிக்கையோடு,
வாழ்வுயிரை கொண்டு ஒளித்து
வைக்கிறது மனம், அடித்தட்டில் உள்ள பதுங்கு குழியில்.
நடுவில், அழகு சதங்கையோடு டினிப்றோ ஓடுமாறில்
பட்டெழும் மாலைச்சூரிய புன்னகை
வாழ்க்கை இதத்தை, மீளவும் நம்பிக்கை கலந்து தூவுகிறது.
கே.முனாஸ்

(2) A HANDFUL OF THUNDER
All my metaphors
You alone construct
Sometimes as
Snow soft soothing the heart
Torrential downpour
Early morn heat pleasant
Wind vicious
Lightning Thunder _
Eventually you did just that
Converting snow
so gentle and tender
into a handful of thunder.
Munas Kalden

ஒரு பிடி இடி
.......................
என் படிமம் முழுவதையும்
நீயே உருவாக்கிறாய்
சில நேரம் இளம் பனி இதமாக
கொட்டும் மழையாக
இளம் காலை வெயிலாக
கடும் காற்றாக
மின்னலாக, இடியாக
கடைசியாக அப்படித்தான் செய்தாய்
இளம் பனியை ஒரு பிடி இடியாக...!
-கே. முனாஸ்

RAGAVAPRIYAN THEJESWI

 A POEM BY

RAGAVAPRIYAN THEJESWI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Poetry proves elusive to me
I know not how to align the droplets of water
floating upon the lotus-leaf
I know not how to build runways on the leaf
for planes to alight
I know not how to erect a fence
made of poetry-collections
around the pond
I cannot sit inside the water-drop
and write poem
Yet
A handful of butterflies hover over me
with their wings fluttering
inside the droplet of water…
I know not how to catch them, as ever
I am at a loss – Alas!
எனக்கு கவிதை வரவில்லை..
தாமரையிலையில் மிதக்கும்
தண்ணீர் உருண்டைகளை
அழகாக அடுக்கத் தெரியவில்லை..
அந்த இலை மேல்
வானூர்திகள் வந்திறங்கும்
ஓடு தளங்கள் அமைக்கத் தெரியவில்லை..
குளத்தைச் சுற்றி
கவிதைப் புத்தகங்களால்
வேலி அமைக்கவும் தெரியவில்லை..
நீர் உருண்டைக்குள் அமர்ந்து
கவிதை எழுதவும் வரவில்லை..
ஆனாலும்
என்னைச் சுற்றி
ஒரு சில பட்டாம் பூச்சிகள்
நீர் உருண்டைக்குள்
சிறகடிக்கின்றன..
அதையும் பிடிக்கத் தெரியவில்லை...
என்ன செய்யட்டும்...?
ராகவபிரியன்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS