A POEM BY
ATHMAJIV
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
THE ALMIRAHS OVERFLOWING
WITH SOUNDS
Night of the Stars.
That painting was over. Efforts proved futile. The bird couldn’t fly. The other half of the Moon disappeared in darkness. The stars were hanging in the trees. The tiny branch had broken. The bird came and sat in the painting. Fireflies began to fly all over the sky. The fireflies were in dense black hue.
Once upon a time there was a bird singing here. well past midnight in the glow of night sounds myriad were neatly kept in empty almirahs. Today I am singing. Out of those sounds-overflowing almirahs I write the lines of my song exhaustively.
Love Eternal.
Today
This very moment
On one side of my bed the painting of the bird drawn by me. In a concealed state. The tale of the sacred ‘Thaali’ tied by her man. Really, in this night, I am the shadow of the king guarding the crematorium.
Tree uprooted.
Vacant sky. Bits and pieces of broken Moon. The ocean hiding inside the stars. Feathers-turned painting brushes. The sound of the bird screeching in the sketch. Alighting off the almirahs the painting of sounds fills the room brims and overflows.
ஒலிகள் நிரம்பி வழியும் அலமாரிகள்
ஒரு பறவையின் இறகுகளால் அவன் ஒரு பறவையை வரைந்து கொண்டிருந்தான். மரத்தின் சிறு கிளை ஒன்றில் அந்த பறவை அமர்ந்திருந்தது. நிலவின் ஒருபாதி ஒளியில். சில நட்சத்திரங்கள் இறங்கி வந்தன.
நட்சத்திரங்களின் இரவு.
அந்த ஓவியம் முடிந்து விட்டது. முயற்சிகள் தோற்றுவிட்டன. பறவையால் பறக்க முடியவில்லை. நிலவின் மறுபாதி இருளில் மறைந்து விட்டது. நட்சத்திரங்கள் மரங்களில் தொங்கின. சிறு கிளை முறிந்து விட்டது. பறவை, ஓவியத்தில் வந்து அமர்ந்து கொண்டது. வானம் முழுக்க பறக்கத் துவங்கின மின்மினிகள். அடர்கருப்பு வண்ணத்தில்.
முன்பொரு காலத்தில் இங்கொரு பறவை பாடிக் கொண்டிருந்தது. நடுநிசி தாண்டிய பின்னும். இரவின் ஒளியில். ஒலிகள் எல்லாம் காலியான அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டன. இன்று நான் இசைத்துக் கொண்டிருக்கிறேன். ஒலிகள் நிரம்பி வழியும் அலமாரிகளில் இருந்து எனது பாடல் வரிகளை எழுதி தீர்க்கிறேன்.
தீராக்காதல்.
இன்றைய நாளில்
இன்றைய நொடியில்
என் படுக்கையின் ஒரு பக்கத்தில் நான் வரைந்த பறவையின் ஓவியம். மறைவாக. கட்டியவனுக்கு மட்டுமே தெரியும் தாலிச்சரடின் கதை. உண்மையாகவே. இந்த இரவில் மயானத்தில் காவலிருக்கும் அரசனின் நிழல் நான்.
முறிந்து விட்ட மரம்.
வெறுமையான வானம். உடைந்த நிலவின் சிதறல்கள். விண்மீன்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் சமுத்திரம். தூரிகையான இறகுகள். ஓவியத்தில் அலறும் பறவையின் ஒலி. அலமாரிகளிலிருந்து இறங்கி அறைமுழுக்க நிரம்பி வழிகிறது ஒலிகளின் ஓவியம்.
ஆத்மாஜீவ்
No comments:
Post a Comment