INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, September 3, 2022

RAHMATHULLAH

 A POEM BY

RAHMATHULLAH

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

One of the constructs
going strong century after century
belied.
Under a sunshade filled with dust and garbage
a woman in dirt was having food.
In this road where vehicles fly past non- stop in surreal frenzy
The couple who came along with their child
tumble down spread-eagled
None came anywhere near.
Rooted in their spots
they were busy dialing 108.
She alone
forgetting to wash her hand
came running
and with great effort brought the man
hurt and anguished, unable to rise
to a sitting posture.
On one side the child lay unconscious.
Picking it up, compassion-personified
sprinkling the residual water in the plastic bottle
she fed the child with a few drops.
The child growing a little normal
evinced an expression
somewhere between sob and bewilderment.
Poor child
In the tales it had heard
and the cartoon channel viewed
the angels were not shown thus….
Indeed yes
One of the century-old lies
thus belied
broken into smithereens.

Rahmathullah

காலங்காலமாய்த்
தொடர்ந்து கொண்டிருக்கும்
கற்பிதங்களில் ஒன்றின்று
பொய்யாக்கப்பட்டது
குப்பைகள்
நிறைந்த நிழற்கூடமொன்றில்
அழுக்கானப் பெண்ணொருத்தி
உணவருந்திக் கொண்டிருக்கிறாள்
ஓய்வின்றி வாகனங்கள்
மாயமாய்ப் பறந்துகொண்டிருக்கும்
இச்சாலையில் குழந்தையோடு வந்த
தம்பதிகள் தவறி விழுந்துச் சிதற
யாரும்
பக்கத்தில் வரவில்லை.
நின்ற இடத்திலிருந்து
நூற்றிஎட்டுக்கான அழைப்பினை
அழைத்துக் கொண்டிருந்தனர்
அவள் மட்டும்
எச்சில் கை கழுவ மறந்து
ஓடிவந்து
எழமுடியாமல் தவித்தவரை
தூக்கி அமரவைக்க
ஒருபுறம் மூர்ச்சையுற்றுக் கிடந்தது
குழந்தை
வாரித் தூக்கி
அழுக்கு மார்பில் அணைத்தபடி
நிழற்கூடம் புகுந்து
நெகிழிப் போத்தலில் மீதமிருந்தத்
தண்ணீரை தெளித்தெழுப்பி
வாயில் வைத்துப் புகட்டுகிறாள்
சற்றுத் தெளிவுற்றக் குழந்தை
அழுகைக்கும் குழப்பத்திற்கும் இடையிலான
முகபாவனையை உதிர்க்கிறது.
பாவம்
அது கேட்டக் கதைகளிலும்
அது பார்த்தக் கார்ட்டூன் சேனலிலும்
தேவதைகளை இப்படிக் காட்டியதில்லை...
ஆம்...
காலங்காலமானக் கற்பிதங்களில் ஒன்று
இது போன்றுதான்
உடைத்தெறிந்துப் பொய்யாக்கப்படுகிறது...

...கா.ரஹ்மத்துல்லாஹ்...


KARUNAKARAN SIVARASA

 A POEM BY

KARUNAKARAN SIVARASA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

On a rainy season
Losing his blanket
God requested me to search and find it
He had misplaced his umbrella also somewhere,
he said.
You have lost it, I said.
I had stolen it said god.
In a sunny season
I retrieved his blanket and gave it to him
Upon his umbrella
Pumpkin plants were widespread
Snake-gourds sprouted and hanging
Fearing snakes he had moved faraway, observed God.
Serpentines live in luscious grandeur near me said I
As birthday present God gifted his shadow
I took
and upon myself did bestow.
His never fading glow.

Karunakaran Sivarasa

ஒரு மழைக்காலம்
தன்னுடைய போர்வையைத் தவற விட்ட கடவுள்
அதைத் தேடி எடுத்துத் தருமாறு கேட்டார்
அவருடைய குடையைக் கூட கை மறதியாய்
எங்கோ வைத்து விட்டதாகச் சொன்னார்
அதை நீங்கள் பறி கொடுத்து விட்டீர்கள் என்றேன்.
அது நான் களவாடியதே என்றார் கடவுள்.
ஒரு வெயிற் காலத்தில்
அவருடைய போர்வை மீட்டுக் கொடுத்தேன்
அவருடைய குடையில்
பூசினிச் செடி படர்ந்திருந்தது
புடலங்காய்கள் காய்த்துத் தொங்கின
பாம்புகளுக்கு அஞ்சி
மிகத் தொலைவுக்குச் சென்று விட்டதாகச் சொன்னார் கடவுள்.
பாம்புகள் என்னயலில் மிகச் சிறப்பாக வாழ்கின்றன என்றேன்.
பிறந்த நாள் பரிசாக தன்னுடைய நிழலைப் பரிசளித்தார் கடவுள்
அவருடைய மங்காத ஒளியை
நான் எடுத்து வைத்திருந்தேன்.

KANNAN VISWAGANDHI

 A POEM BY

KANNAN VISWAGANDHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

REBIRTH
If pressed
In a matter of ten minutes
You would get used to
Hundred and Forty
None of the wagons once came
Ever again returned
He would grasp the problem
all too precisely
by the mere faulty sound
On an other day
With the hands of fate
throwing him apart
Injured in the head
almost on the throes of death
lying motionless in the ICU
He threw open his shop
in the fifth month itself
In the sobs flooding within
and exploding
with tears overflowing
stroking the machines one by one
and wiping them clean again and again
Alas, how to tell him at all
to go in search of a livelihood
or change the trade for good?
மறுபிறவி
அழுத்தினால்
நூற்றிநாற்பது
பத்தே நிமிடத்தில்
பழகிவிடும்
எந்த ஒரு வாகனமும்
வந்தவை திரும்பவும்
வந்ததில்லை
அவன் தவறால்
சத்தத்தை வைத்தே
பிரச்சினையைக்
கணித்திடுவான்
பிறிதொரு நாளில்
விதியின் கரங்கள்
வீசியடிக்க
தலையில் அடிபட்டு
சாகக்கிடந்தவன்
அவசர சிகிச்சைப் பிரிவில்
அசைவின்றிக் கிடந்தவன்
ஐந்தாம் மாதமே
கடைதிறந்து விட்டான்
உள்ளுக்குள் பொங்கி
வெடித்த அழுகையில்
கண்ணீர் வழிய
இயந்திரங்களை
ஒவ்வொன்றாக
மீண்டும் மீண்டும்
தொட்டுத் துடைப்பவனிடம்
எப்படிச் சொல்ல முடியும்
வேலை தேடு என்றோ,
தொழிலை மாற்று என்றோ?

RAGAVAPRIYAN THEJESWI

 A POEM BY

RAGAVAPRIYAN THEJESWI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

5


Your silences lie on the sand
as ripe Jamun fruits
Those who carefully gather
or those who peck at them like squirrels
or those who like myna approach them
with feathers down and walking
and tasting them with their beaks
can go nowhere near….
For, the hour of their fall
can well be called frozen in all...
When they ripened from thee
They called them ripening prematurely.
You did drop several tender ones too.
And of course wails and sobs.
All and more All and more
are lying with sand
stuck all over
The sand of the Tamil Land….
bereft of words
there can be baskets to go sell
those silences
applying oil or salt-powder on them.
It is in this pleasant hour
When I all alone collect your silences
and classify them
I wash a few of them in the water
and put them upon my tongue
The Taste of Life
permeates
as jamun-tinged silence.
Ragavapriyan Thejeswi

உனது மெளனங்கள்
கனிந்த நாவல் பழங்களாய்
மண்ணில் கிடக்கின்றன..
தேர்ந்து பொறுக்குபவர்களோ
அணிலாய் அதனைக் கொறிப்பவர்களோ
மைனாவாய் மெல்ல
இறகு மூடி நடந்து
கொத்திப் பார்ப்பவர்களோ
அங்கிருக்க முடியாது...
ஏனெனில் அவை விழும் நேரம்
பிரபஞ்ச அசைவற்ற பொழுதெனலாம்..
உன்னிடமிருந்து
அவை பழுத்த போது
பிஞ்சில் பழுத்ததாகக் கூறினார்கள்..
சில பிஞ்சுகளையும்
நீ உதிர்த்தாய்..
வெம்பல்களையும் விம்மல்களையும் தான்...
எல்லாமும் எல்லாமும்
மண் ஒட்டிக் கிடக்கின்றன..
தமிழ் மண் ஒட்டிக் கிடக்கின்றன...
வார்த்தைகளற்று..
அம்மெளனங்களை
எண்ணெய் தடவியோ
உப்புப் பொடி தடவியோ
விற்று வர
கூடைகள் இருக்கலாம்..
ஒற்றையாய் நான்
உன் மெளங்களை
பொறுக்கி தரம் பிரிக்கும்
இனிய இப்பொழுதில்தான்..
ஒன்றிரண்டை நீரில் அலசி
நாவிலிடுகிறேன்..
வாழ்வின் சுவை
நாவல் நிற மெளனமாய்
நாவெங்கும்...
ராகவபிரியன்

THENMOZHI DAS

 A POEM BY

THENMOZHI DAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



THE MIRROR

By breaking the mirror
You would be able to see
the cross-sectional form of water
The flying heart of the images’ heart
Eyes that are born in hunger
The riddle of the Inversion Theory
The white-blood of razor-edge sharpness
Mercurial kinship
Rain growing as creeper
The flakes of Truth genuine
The angles of impeccable directions
The sacred purity of separation
The inner turmoil of emotions
Sorrows that never die
Humans with multi-dimensional craze
The legs of sky in fear
By not breaking the mirror but turning it on the other side
You would cradle quietude
A droplet of tear – flower
By not looking at the mirror
You would love the world allover.

Thenmozhi Das
.
கண்ணாடி
கண்ணாடியை உடைப்பதன் மூலம்
தண்ணீரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை
பிம்பங்களின் பறந்த மனதை
பசித்துப் பிறக்கும் கண்களை
தலைகீழ் தத்துவத்தின் புதிரை
கூர்மைகளின் வெண்குருதிகளை
வடுக்களற்ற வார்த்தைகளை
பாதரச உறவை
மழை கொடியாய் வளர்வதை
பாசாங்கற்ற உண்மைகளின் துருவல்களை
கச்சிதமான திசைகளின் கோணங்களை
பிரிவின் பரிசுத்தத்தை
உணர்வுகளின் உள்கொதிப்பை
மரணமற்ற துயர்களை
பன்முகப் பித்துக் கொண்ட மனிதர்களை
பயப்படும் வானத்தின் கால்களை
காண்பீர்கள்
கண்ணாடியை உடைக்காமல் திருப்பி வைப்பதன் மூலம்
அமைதியை தாலாட்டுவீர்கள்
ஒரு சொட்டு கண்ணீர் - மலர்
கண்ணாடியை பார்க்காமல் இருப்பதன் மூலம்
உலகையே காதலிப்பீர்கள்.

MAYILIRAGU MANASU SHIFANA

 A POEM BY

MAYILIRAGU MANASU SHIFANA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Just as each one of us
has two sides
each one of us have two phone numbers
and two Facebook pages
One is permanent
The other, for the time being.
The one given to those
close to our heart
or believed to be that
is permanent.
The one given to those
who are not close to our heart
and those whom we consider not
essential to us till the last
is transient.
They would come,
now and then
and would vanish
in between
That’s the reason
many keep searching
for the missing too many.

ஒவ்வொரு மனிதனுக்கும்
இரண்டு பக்கங்கள்
இருப்பதைப்போலவே
இரண்டு தொலைபேசி
இலக்கங்கள்
இரண்டு முகநூல் பக்கங்கள்
இருக்கிறது
ஒன்று
நிரந்தரமானது
இன்னொன்று தற்காலிகமானது
மனதிற்கு நெருக்கமானவர்களுக்கும்
நெருக்கமானவர்கள் என நம்பப்படுகிறவர்களுக்கும் தரப்படுவதே
நிரந்தமானது
மனதிற்கு
நெருக்கமற்றவர்களுக்கும்
இறுதிவரை தேவையில்லையென
கருதுபவர்களுக்கும்
தரப்படுவதே
தற்காலிகமானது
அவ்வப்போது
திரும்ப வருவார்கள்
அவ்வப்போது காணாமல்
போய்விடுவார்கள்
அதனால்தான்
பலரைக் காணவில்லையென்று
பலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
மயிலிறகு மனசு ஷிஃபானா

ATHMAJIV

 TWO POEMS BY

ATHMAJIV


Translated into English by Latha Ramakrishnan


Indeed I am walking on the sky _ Oh yes,
See for yourself
The shadows of my legs
keep strolling in the earth
On the skyway
my footprints don’t leave a trail
Dividing the Moon into two
and holding them in both my hands
_ All for fun, you see.
If looked intently
My very own eyes – they could be
I collect a few water-fetching clouds
and carry them in my bag
to drink when I feel thirsty
From the painting brush of
the greenish blue hue-mix is
sprayed
I move a little away
It is absolutely out of place in
the yellow-colour upper-wear
I speak of the ocean only
On returning to the ground
for resting a while
hugging close the sleep
that would be waiting for me in my cot
I would sleep fast.

தரிசனம்

வானத்தின் மீதுதான்
நடந்து கொண்டிருக்கிறேன்
நன்றாக பாருங்கள்
எனது கால்களின் நிழல்கள்
பூமியில் அலைந்தபடி இருக்கிறது
வான்பாதையில்
எனது காலடித் தடங்கள் பதிவதில்லை
நிலவை இரண்டாக்கி இரண்டு கைகளிலும்
ஏந்திக் கொண்டிருப்பதும்கூட
வேடிக்கைக்காகத்தான்
உற்று நோக்கினால்
எனது கண்களாகக்கூட இருக்கக்கூடும்
நீர்சுமந்த சில மேகங்களை
எனது பையில் எடுத்துச் செல்கிறேன்
தாகமெடுக்கும்பொழுது அருந்துவதற்காக
யாரோ ஒரு ஓவியனின் தூரிகையிலிருந்து
நீலப்பச்சை வர்ணக்கலவை தெளிக்கப்படுகிறது
நான் சற்று நகர்ந்து கொள்கிறேன்.
மஞ்சள்நிற மேலாடையில்
சற்றும் பொருந்துவதில்லை அது
சமுத்திரத்தை பற்றிதான் கூறுகிறேன்
ஓய்வுக்காக மண்ணுக்கு திரும்பும்போது
என் அறைக்கட்டிலில் காத்திருக்கும்
உறக்கத்தை அணைத்தபடி
தூங்கி விடுவேன்
ஆத்மாஜீவ்

(2)
Yes it is He
Yes, of course, It is indeed He
The one who is wandering here and there
is He; He alone.
With Hope
and as thorns
He is walking along the same passage
with bare feet chilled
leaving trails with warm blood oozing
The prime-root making a u-turn
tearing open the earth and climbing up
looks at the sky
The expectation flowing out of its eyes
A hope
A throb
A fatigue
Yes
It is He
Indeed it is He

ஆமாம் அவன்தான்
அவனேதான் அது
ஆடைகளற்று நடுத்தெருவில்
அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பது
அவன் அவனேதான்.
நம்பிக்கை
மலர்களாகவும்
மழைத் துளிகளாகவும்
முட்களாகவும்
அதே சாலையில்தான் நடக்கிறான்
வெறுமையான பாதங்கள் சில்லிட
கதகதப்பாக
ரத்தம் கசியும் சுவடுகளுடன்
ஆணிவேர் திரும்பி
நிலத்தைக் கிழித்துக் கொண்டு மேலேறி
வானத்தைப் பார்க்கிறது
அதன் கண்களில் வழியும் ஆவல்
ஒரு நம்பிக்கை
ஒரு துடிப்பு
ஒரு சோர்வு
ஆமாம்
அவன்தான் அது
அவனேதான்

ஆத்மாஜீவ்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS