INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, October 5, 2021

KAVIPRIYA SIVAPALAN

 A POEM BY

KAVIPRIYA SIVAPALAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The leftovers of the sand house
Washed away by the waves
Remain there as a boon
Immerse yourself in the sea of memory
and haul all that is left behind
Let’s build a new abode!
Twining Twigs, branches
one by one.
The nest woven in the nook of a seasoned branch
in the Thokai tree
lies scattered in listless wind.
Let’s twine them all one by one
and build a house anew.
Let the storm try with all its might
and suffer defeat.
The woodland flourishing with peacocks koels
deer trees and a lot more
in large numbers
now lie all burnt
by the treachery of jackals
coming from somewhere afar.
Let’s sow real good seeds
Let’s rear real strong four-legged species.
Let’s create an all new woodland.
Come my friends!
Let’s join hands!
Kavipriya Sivapalan

அலைகள் அடித்துச்சென்ற
மணல் வீட்டின்
எச்சங்கள் ஆங்காங்கே
வரமாய் நிலைத்துள்ளது
நினைவுக்கடலில் அமிழ்ந்து
மிச்சங்களையும்
வாரியெடுத்து வாருங்கள்
புது வீடு செய்வோம்...!!
குச்சிகள் கிளைகள்
ஒவ்வொன்றாய் கோர்த்து
தோகை மரத்திடை
தேர்ந்த கிளை இடுக்கே
வேய்ந்த கூடு வெறும் காற்றில்
சிதறிக் கிடக்கிறது
ஒவ்வொன்றாய் கோர்த்து
புது வீடு செய்வோம் புயலும்
முயன்று தோற்றுப் போகட்டும்..
மயில்களும் குயில்களும்
மான்களும் மரங்களும்
என்றே குழுமியிருந்த
செழித்த கானகம்
எங்கோ இருந்து வந்த நரிகளின்
தந்திரத்தால் வெந்து கிடக்கிறது
நல்ல விதைகள் விதைப்போம்
வல்ல விலங்குகள் வளர்ப்போம் புதுக்காடு செய்வோம்
வாருங்கள்..!!


VELANAIYOOR THAS

 A POEM BY

VELANAIYOOR THAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


NOTES FOR DEBATE
(or)
POINTS FOR ‘PATTIMANDRAM’

Raman breaking the bow is wrong
It should be delicately curved.
Seetha looked at Lakshmana – remember?
The latter had given her away to his elder brother
The ring Hanuman asked Rama _
Oh why didn’t he return it?
Only because there was no Internet connection
when it was said
‘Go now and come tomorrow
Ravana couldn’t secure help from America.
That Seetha jumped into fire and
emerged alive
is but rumour and hype
created by the media-persons of those times.
Okay, but who are these people?
Are any of their relatives alive now?
Any of their cases
pending in court?
The Fourth Cross Street Ganapathi also
abducted the wife of Chidambaram – isn’t it so?
Many of you claim proudly
to be ‘loyal to the core’ husband
Then why the hell
this debate and the notes….?
Well…..
Listening to Anirudh’s music
or, at least a film of Myshkin’s…..
would’ve been better….


பட்டிமன்ற குறிப்புகள்_

_____________வேலணையூர்- தாஸ்.
ராமன் வில்முறித்ததுபிழை இலாவகமாக வளைக்க வேண்டும் ....
சீதை இலக்குவனை தானே பார்த்தாள்
அவன் தமயனுக்காக விட்டு கொடுத்தான்
அனுமன் இராமனிடம் வேண்டிய மோதிரத்தை
ஏன் திருப்பி கொடுக்கவில்லை ...
இன்ரநெற் கனக்க்ஷன் இல்லாததால்தான்
"இன்றுபோய் போர்க்கு நாளை வா ,
என்ற நேரம்,
இராவணனுக்கு அமெரிக்க உதவி கிடைக்கவில்லை
சீதை தீக்குளித்தாள் என்பது
அந்த கால ஊடகவியாளர்களால் கிளப்பி விடப்படட புரளி .
அது சரி இவர்கள் யார்
உறவினர்கள் யாராவது இப்போது இருக்கிறார்களா
இவர்களது வழக்குகள் எதாவது
நீதி மன்றத்தில் நிலுவையாய் உள்ளதா
நாலாம் குறுக்குத்தெரு
கணபதிப்பிள்ளையும் சிதம்பரத்தின்
மனைவியை கடத்தினான் தானே
உங்களில் பலரும் ஏகபத்தினி விரதர்கள்
என்று தானே சொல்லித்திரிகிறீர்கள்
பிறகேன்டா ...
இந்த பட்டிமன்றமும் குறிப்பும்
சா ---அனிருத் மீயூசிக் கேட்டிருக்கலாம்
அல்லது மிஸ்கின் படமாவது ---------...

FAIZA ALI

 A POEM BY

FAIZA ALI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE CIRCLE
The world of those which we believe to be
brimming within our own world
are in fact beyond the borders of our own self
It is only when despite seeing it getting filled
by worlds many
not perturbed nor disturbed
we go past with our usual casual smile
the woodlands that we believe to be ours
begin to sprout again.
The radiuses of the illusory circle
called World
may contract
or expand…
Though curving and zigzagging
it is inside the confines of
a fully closed line
with no crack nor break
the beauty of any circle would
become wholesome _
Alas, who to tell this to whom and
how to make them understand……

வட்டம்.
நமதுலகத்திற்குள் மட்டுமே நிறைந்திருப்பவைகளாக
நம்புகிறவைகளினுலகு
நம்மைத் தாண்டியும்..
பல்வேறுலகுகளால்
செழித்துநிறைதல் கண்டும்
பதற்றமோ..
படபடப்போ இன்றி
என்றைக்குமான
இயல்புப் புன்னகையோடு
கடந்து போகையில்தான்..
நமக்கானதாய்
நாம் நம்புகிற வனங்கள் மறுபடியுமாய்..
துளிர்க்கத் தொடங்குகின்றன.
உலகெனும்
மாயவட்டத்தின்
ஆரைகள் குறுகலாம்..
விரியலாம்...!
நெளிந்து வளைந்தென்றாலும்
விரிசலின்றி
முழுதுமாய் மூடுண்ட
கோட்டுக்குள்தான்
முழுமையடையும்
எந்தவொரு
வட்டத்தினழகுமென்பதை
யார்..
யாருக்குச்சொல்லிப் புரியவைப்பது...?
எஸ். ஃபாயிஸா அலி.

LEENA MANIMEKALAI

 A POEM BY

LEENA MANIMEKALAI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

It is just that, O, Mercy-Personified
Though a bit delayed
I uttered a Truth.
That Moment that was shamed the most _
that thorn that kept on pricking
and scratching my veins the worst _
I transmitted it into language
I did just that, O the King of Justice
For this
You ask my very life as sacrifice.
Well, I’ll give
But, I will ask just one thing from thee.
Will you give me?
You too would be having a truth to say
Along with the sand hauled and thrown into the pit
wherein I am dumped
just throw that too.
Nothing else I have to ask of thee
O Mercy- Personified.
வேறொன்றும் இல்லை பராபரமே
சற்று காலம் தாழ்ந்து விட்டிருந்தாலும்
ஒரே ஒரு உண்மையை சொன்னேன்
சிறுமைப் படுத்தப்பட்ட அந்த நொடியை
நாளங்களை சதா கீறியபடியிருந்த முள்ளை
மொழிக்கு மடைமாற்றினேன்
அவ்வளவு தான் பராபரமே
அதற்கென் வாழ்வை பலி கேட்கிறீர்கள்
சரி தருகிறேன்
ஆனால் நான் ஒன்றை கேட்பேன்
தருவீர்களா?
உங்களுக்கும் சொல்வதற்கொரு உண்மையிருக்கும்
என்னை இறக்கிய குழியில் அள்ளிப் போடும் மண்ணோடு
அதையும் போட்டு விடுங்கள்
வேறொன்றும் இல்லை பராபரமே
............................................................................................................................
//*ஒரு கவிதை கவிஞரின் சமகாலத்தவருக்குத் தரும் வாசகப்பிரதிக்கும் எதிர்காலத்தில் தரக்கூடிய வாசகப்பிரதிக்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்குமென்று தோன்றுகிறது.
ஒரு கவிதையின் கவிஞரும் கவிதைசொல்லியும் ஒருவரே என்று சொல்லமுடியாவிட்டாலும் இருவேறுபட்டவர்கள் என்றும் திட்டவட்டமாகச் சொல்லவியலாது.
மீ டூ இயக்கத்தின் பின்னணியில், பல வருடங்களுக்கு முன்பு தன்னிடம் ஒருவர் தவறாக நடந்துகொள்ள முயன்றதை இப்போது வெளியே சொன்னதற்காக மூன்று வருடங்களாக நீதிமன்றத்திற்கு இழுக்கடிக் கப்பட்டுக்கொண்டிருக்கிறார் லீனா.
வழக்கின் வழி அவர் வெளிநாடு செல்வது தடைசெய்யப் பட்டிருக்கிறது.
கவிஞர் லீனா மணிமேகலையோடு கருத்துரீதியாக நான் முரண்படும் இடங்கள் நிறையவே உண்டு. ஆனால், அவர் ஒரு சிறந்த கவி என்பதை மறுக்கவே முடியாது.
பல வருடங்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த ஓர் உண்மையைப் பேசியதற்காக அவருடைய இயக்கம் பலவகையிலும் முடக்கப்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சமகாலத்தில் இருப்பதால் இந்தக் கவிதை அந்த அலைக் கழிப்பைப் பற்றிப் பேசுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. லீனா தன்னை நாத்திகவாதி என்று அறிவித் துக்கொண்ட வர். ஆனால் கவிதைசொல்லி பராபரமே என்கிறார். (*இப்படிச் சொல்வது வழக்கமான பேச்சில் கடவுளைக் குறிக்காமல் ‘நடப்பது நடக்கட்டும்’ என்பதான சில அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவதும் உண்டு.) இதை MY LORD, OH ALMIGHTY என்று மொழி பெயர்ப்பது கவிஞருக்கு (ஏனெனில் அவரே கவிதை சொல்லியாக வும் என் வாசக மனதுக்குப் புலப்படுவதால்) நியாயம் செய்வதாகாது என்று தோன்றியது. கவிதையில் வரும் பராபரமே என்ற விளியில் ‘உன்னை கருணையே உருவானவர்’ என்று சொல்கிறார்களே’ என்ற விமர்சனம் உட் குறிப்பாக இருப்பது புரிவதால் 'O MERCY -PERSONIFIED' என்று மொழிபெயர்த்திருக்கிறேன் - latha ramakrishnan//
Emboldened by the Me too Movement impacting globally Poet Leena Manimekalai chose to speak out the traumatic experience she had undergone at the hands of a person who tried to take advantage of her many years ago when she had just then started working in the Media. And for this Poet Leena Manimekalai is being harassed by the person concerned who tries to sabotage her future prospects in many ways, citing the defamation case he has filed against her.
I have difference of opinion with Poet Leena Manimekalai on many issues but I have great respect for her as a poet. And, I strongly condemn this continued harassment of a fellow poet for speaking out what was pricking her soul all these years.
The readerly text that a poem presents will not only differ according to the reader but also according to the period in which it is being read, I feel. The ‘Readerly Text or texts’ of a poem could be different in future from what they are in present.
Though we can’t say that the poet and the one speaking in the poem are one and the same we can’t also say that they are two totally different persons.
As being part of the Present I can understand that this poem of hers speak about the way she is being hounded and the way she at times feel terribly low and lost. Leena calls herself an atheist. But, the person in the poem uses the expression ‘Paraa Parame’ an expression extolling the god as ‘The Noblest, The Highest etc( Of course, in Tamil ‘Yaamariyen Paraaparame’ is also used as a general expression of feeling resigned and implying a few other states of mind. So, if I translate it as Oh Lord, Oh, Almighty I won’t be doing justice to the poet( for the person inside the poem and the poet appear to be one and the same to me as being Here and Now. Also, the way she uses the expression ‘Paraa Parame’ appears to me as questioning his repute as ‘the kindest and most benevolent’. Hence, I used the expression O, MERCY-PERSONIFIED’ in English translation.
I thank the poet for permitting me to translate her poignant poem.
My best wishes to Poet Leena Manimekalai.

THAMARAI BHARATHI

 A POEM BY

THAMARAI BHARATHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



THE TEETH OF BEAST BEING HUNTED

We are being hunted non-stop
being deceived non-stop
We are being hunted
for the sins committed
as well as for those to be committed
We have no expertise to guess the strategies
Know not how to escape them.
Cruel words delivered
in the grip of events unfolding
tear us into shreds as the teeth of hyena
In response there sprout the teeth of wolf
in us.
As animal trapped in cage
We writhe and rage.
In life we are an error in Time
occurring in between an instant
when the good and bad not known
being ignorant of the right and wrong
And with our teeth buried deep
we keep waiting with the hope
that a time would come
for the arrival of messiahs
to redeem us.

துரத்தப்படும் விலங்கின் பற்கள்
————————————————
துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்
ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்
செய்த பாவங்களுக்கும்
செய்யப் போகும் பாவங்களுக்குமாக
சேர்த்தே விரட்டியடிக்கப் படுகிறோம்
வியூகங்களை யூகிக்கும் வல்லமையை அறியோம்
வியூகங்களில் இருந்து தப்பவும்
வழியறியோம்
நிகழ்வுகளின் பிடியில்
பிரசவமாகும் குரூர சொற்கள்
கழுதைப் புலியின் பற்களாக குதறுகின்றன
பதிலுக்கு நமக்குள்
ஓநாய்களின் பற்கள் முளைத்து விடுகின்றன.
பொறியில் சிக்கிய விலங்காய்
துடிக்கிறோம்
நெறிபிறழ் நடத்தையில்
சரியென்றும் தவறென்றும்
சம பாகத்தில்
நன்றென்றும் தீதென்றும்
பிரித்தறியா தருணத்தில்
இடைவந்து போன
காலப்பிழை நாம்
மீட்பர்கள் வந்துதவும்
காலமொன்று வருமென
காத்திருக்கிறோம்
பற்கள் ஒடுங்க ஒடுங்க.
தாமரைபாரதி

KO.NATHAN

 A POEM BY

KO.NATHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

ஈ AKA ழ’ BIRD’S ம் SONG
(EE aka ZHA BIRD’S ‘M’ SONG)
That Bird
had the tinge of red+black.
Upon that
Time wrote the hunger of Death
umpteen number of times.
The Bird
hunting for quiet
has hatched eggs
all over the jungle.
Rising in the sky
in singular voice
throwing away the wing
It wanders emitting weak cry.
That in abodes with no lamp lit
The prayer would bloom in flower
So, the bird growing up within.
Along a river-bank
A Seashore
A pond
Bird’s wet footprints.
That is made of water.
Of the Land?
or Lifeblood?
Ko. Naathan
ஈ'எனும் 'ழ' பறவையின் 'ம்'
பாடல்.
.............................................
அந்த பறவை,
சிவப்பு+ கருப்பு நிறமுடையது.
காலம்,
அதன் மேல் மரணத்தின்
பசியை எழுதி எழுதி அழித்தது.
பறவை,
மௌனத்தின் வேட்டையில்
காடு முழுவதும்
கரு முட்டைகளை இட்டிருக்கிறது.
வானெழுந்து,
ஒற்றைக் குரலில்
சிறகெறிந்து
ஈன ஓசையில் அலைந்து திரிகிறது.
தீபம் ஏறாத வீடுகளில்
பிரார்த்தனை மலரில் பூக்கும்
என,
உணர்வில் வளரும் பறவை.
ஒரு நதிக்கரையில்,
ஒரு கடற்கரையில்,
ஒரு குளக்கரையில்,
பறவை, நடந்த ஈரச் சுவடுகள்
அது
நீராலானது.
நிண நீரிலானதா?
நில நீரிலானதா?
.
ஏகத்துவன்
.......................................................................................................................
(* aka _ also known as
தலைப்பே மொழிபெயர்ப்பாளரை முழிபிதுங்கச் செய்வது! முழுக்க முழுக்க குறியீடுகளாலான கவிதை. ஒரு காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ஒரு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களுக்கு எளிதாக விளங்கிவிடலாகும் குறியீடு களும், சொல்வழக்குகளும் மற்றவர்களுக்குப் பூடகமா கவே அமையக்கூடும். கவிதையின் வரிகளிலுள்ள சொற்கள் எழுத்தால் மட்டுமானதல்லவே! கவிதையின் பொருள் சார்ந்தும் கவிதையின் பூடகத்தன்மையும், இருண்மையும் அமையும். வாழ்நிலத்திலிருந்து இடம்பெயர்வோருக்கு மனமே வாழ்நிலமாக விரிவது இயற்கை. இந்த இயற்கைநியதி மொழிபெயர்ப்பில் எந்த அளவுக்கு இலக்குமொழியில் கைகூடும் என்பது கேள்விக்குறி. இந்தக் கேள்விக்குறிக்குப் பல காரணங்களும், காரணிகளும் உண்டு - மொழி பெயர்ப்பாளரின் போதாமை அவற்றில் ஒன்று என்ற அறிதலோடு இந்தக் கவிதையை மொழிபெயர்த்திருக் கிறேன். கவி விரும்பினால் சில தெளிவுகளைத் தந்து கவிதை மொழியாக் கத்தை செம்மைப்படுத்த உதவலாம். இல்லை, நான் செய்திருப்பதே போது மெனலாம் - மனமாரவோ, மொழிபெயர்ப்பாளர்பால் மனங் கனிந்தோ! - லதா ராமகிருஷ்ணன்.

STALIN SARAVANAN

 A POEM BY

STALIN SARAVANAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE LAST TRAIN
How gifted one is to breathe his last
when asleep
They whisper
What is so great about it, alas _
Should wake him up once
and ask him to die then
An acquaintance of mine
wished to die in the railway station.
Watching the train and ceasing to be
is like the sheer bliss of catching the last train
Tolstoy and A.M. Raja
died in Railway Station only.
In the train Tolstoy got inside
standing all the way
won’t be a problem, I say
For will the dead one’s legs ache.

Stalin Saravanan •

கடைசி ரயில்
உறக்கத்தில் இறப்பதுதான்
எவ்வளவு அதிர்ஷ்டம் என்று
கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்
உறக்கத்திலே உறங்கிப் போவதில்
என்ன இருக்கிறது
ஒருமுறை அவரை எழுப்பிவிட்டு
இறந்து போக சொல்ல வேண்டும்
எனக்கு தெரிந்த ஒருவர்
ரயில்வே ஸ்டேஷனில்
இறந்து போக விரும்பினார்
ஓடும் ரயிலை பார்த்துக் கொண்டே மரணிப்பது
கடைசி ரயிலில் ஓடித் தொற்றிக்கொள்ளும் சுகம்
டால்ஸ்டாயும் ஏ.எம்.ராஜாவும்
ரயில்வே ஸ்டேஷனில்தான் இறந்துபோனார்கள்.
டால்ஸ்டாய் ஏறிய ரயிலில்
நின்றுக் கொண்டே போனாலும் பரவாயில்லை
மரணித்தவனுக்கு கால்கள் வலிக்கவாப் போகிறது?

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS