INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

VAZHIPOKKAN

 A POEM BY 

VAZHIPOKKAN



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The shallow sea hauled in the palm
The tiny glitter of the glow-worm
That the eyes swelling in joy unbound
seen once upon a time
Heart-filling Nature’s beauty
The touch of the stranger who head you
when you slipped and about to tumble
The tiny little tales with no trace of sorrow
collected from experiences
to tell and share
Children waving goodbye
a real treasure to preserve
The soft song of the solitary bird
In the wilderness
a little love to give
Awful anger for preventing from
Evil
The cane-beatings received from Time
for the very purpose of proudly displaying them
Jessica’s secret wink
sent out for eatables
A few lovely memories to recollect
At the penultimate moment of Death
Only this much my assets
are mine
Indeed yes…..
I know not how to survive
But I know the Art of Living.

VAZHIPOKKAN

உள்ளங்கையில் அள்ளிக்கொண்ட ஆழமற்றக் கடல்
கண்கள் பூரிக்க எப்போதோ
காணக் கிடைத்த
மின்மினியின் சிற்றொளி
இருதயம் நிறைந்த
இயற்கை எழில்
பாதமிடறுகையில் தாங்கிப்பிடித்த
அந்நியரின் ஸ்பரிசம்
சொல்வதற்கென்று
அனுபவங்களில் சேகரித்த
துயரமற்ற சின்னஞ்சிறிய கதைகள்
பயணங்களில்
பொக்கிஷமெனக் கிடைத்த
குழந்தைகளின் கையசைப்பு
வனாந்தரத்தில் தனித்து பாடும்
பறவையின் மெல்லிய பாடல்
கொடுக்கவென்று கொஞ்சம் அன்பு
தீமையிலிருந்து தடுக்கவென்று
நிறைய கோபம்
காட்டவென்று காலத்திடம் வாங்கிய பிரம்படித் தழும்புகள்
தின்பண்டங்களுக்கென
கசியவிடும் ஜெசிமாவின்
ரகசியக் கண் சிமிட்டல்
மரணத்திற்கு முந்தைய கணத்தில்
நினைத்துப்பார்க்க
கொஞ்சம் அழகிய நினைவுகள்
இவ்வளவுதான் என் சொத்து
ஆம்...
நீங்கள் சொல்வதுபோல்
நான் பிழைக்கத் தெரியாதவன்தான்
மறுப்பதற்கில்லை
ஆனால் வாழத் தெரிந்தவன் நான்.

வழிப்போக்கன்


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024