INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

ILANGO KRISHNAN

 TWO POEMS BY

ILANGO KRISHNAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. THE CITY
(*HAPPY CHENNAI DAY)
The very day when
carrying along a skeletal language
and some bits and pieces of hopes
when you the little soldier Ilango
set out from your place
just as the street is washed
as soon as the funeral procession commences
your hometown has washed away
its memories of thee.
So what
The city where you have arrived
has never forsaken you
Two storms
Then a flood
Added to that scorching summers
A few relatively harmless foes
So it has given me lots
But, for the valour of your small sword
It is nothing – right?
And still more
A Lion
A Hyena
A Wolf
- So all and more
you have encountered
were ever so vigorous
vying with each other.
Ilango....
This is a small desert
A small jungle
A small ocean
As befitting a small soldier
A small battlefront
Your lovely little baby donkey _
You shouldn’t have said in its ears once
That it is a horse
For as many as four times
it fell deep into the pit of
excessive self-confidence
Twice it tumbled into enmity
Once it dived into love
Still
You are not all that bad Ilango
For this city
had rain hidden between its deserts
there were brooks in the jungles
Quiet prevailed in the ocean too
Just as lions
there are deer
Just as hyenas
there are rabbits
With hope surging
like the sunlight
at dawn in the East
with dews making way
say to your own self once
Ilango
THIS IS YOUR CITY
THIS IS YOUR CITY.

Ilango Krishnan
//ஹேப்பி சென்னை டே //
நகரம்
---
ஓர் ஒடிசலான மொழியையும்
கொஞ்சம் சில்லறை நம்பிக்கைகளையும்
எடுத்துக்கொண்டு
இந்நகருக்கு வந்த குட்டி வீரன் நீ இளங்கோ
நீ ஊரைவிட்டு கிளம்பிய
தினமே
பிணம் கிளம்பியதும் வீதியை கழுவுவதைப் போல்
தன் நினைவுகளை கழுவிவிட்டது பிறந்த நகரம்
அதனாலென்ன
நீ வந்து சேர்ந்த நகரம்
உன்னைக் கைவிடவில்லை
இரண்டு புயல்களை
பின் ஒரு வெள்ளத்தை
கூடவே கடும் கோடைகளை
கொஞ்சம் எளிய பகைகளை
என நிறையவே கையளித்தது
உன் சிறிய கைவாளின் தீரத்துக்கு
அதுவெல்லாம் விஷயமே இல்லைதானே
பின்னும்
ஒரு சிங்கம்
ஒரு கழுதைப் புலி
ஒரு ஒநாய்
என நீ எதிர்கொண்ட எதுவுமே
சளைத்ததில்லை இளங்கோ
இது ஒரு குட்டிப் பாலைவனம்
இது ஒரு குட்டி வனாந்திரம்
இது ஒரு குட்டி சமுத்திரம்
ஒரு குட்டி வீரனுக்கு ஏற்ற
குட்டிப் போர்க்களம்
உன் அழகான கழுதைக் குட்டி
அதன் காதுகளில்
அதை ஒரு குதிரை என
சொல்லியிருக்கக் கூடாது நீ
அதீத தன்னம்பிக்கையில்
அது நான்கு முறை குழியில் விழுந்தது
இரண்டு முறை பகையில் விழுந்தது
ஒரு முறை காதலில் விழுந்தது
ஆனாலும்
ஒன்றும் மோசம் இல்லை இளங்கோ
இந்நகரம்
தன் பாலைவனங்களுக்கு
இடையே மழையும் வைத்திருந்தது
வனாந்தரங்களில் சுனைகள் இருந்தன
சமுத்திரத்திலும் அமைதியிருந்தது
சிங்கங்கள் போலவே
மான்களும் இருக்கின்றன
கழுதைப் புலிகளைப் போலவே
முயல்களும் இருக்கின்றன
விடிகாலையில்
பனி விலகும் கிழக்குக்கு இடையே
சூரிய ஒளி பெருகுவது போல் திரளும்
நம்பிக்கையோடு
ஒருமுறை சொல்லிக்கொள் இளங்கோ
இது உனது நகரம்
இது உனது நகரம்

2. THE MONSOON
Rain clouds have gathered
All over the land
the aroma of soil has bloomed
the chill that slowly swells in the air
has filled joy in plants’s chlorophylls
the soft darkness of the Rain
enters inside buildings
screeching the birds rush to their nests
everything is ready
My Love
Once you come
We can commence
monsoon
at once.

Ilango Krishnan

கார்காலம்

கார்மேகங்கள் திரண்டுவிட்டன
நிலமெங்கும்
பூவாய் மலர்ந்திருக்கிறது மண் வாசம்
காற்றில் மெல்ல ஏறும் சீதளம்
தாவரங்களின் பச்சையங்களில்
குதுகலத்தைக் கொண்டு வந்துவிட்டது
மழையின் மென்னிருள் மரங்களிலிருந்து
கட்டடங்களுள் நுழைகிறது
மழை மழை மழை யென
கூவிக் கூடடைகின்றன புள்ளினங்கள்
அனைத்தும் தயாராகிவிட்டன
அன்பே
நீ
வந்தால்
தொடங்கிவிடலாம்
இக் கார்காலத்தை

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024