INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, October 6, 2022

ABDUL JAMEEL

TWO POEMS BY

ABDUL JAMEEL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

Lifting with all the love in the world
the child crying out of hunger

holding it close
I gift it a kiss
Then I serve food
in the porcelain plate having
dolls painted.
At once it begins to cry all the more
“The hot food would burn my dolls”
I know not how to console the
child crying heartbroken.
There lies
in the child’s eyes
Affection unbound
matching Motherhood.
பசித்தழும் குழந்தையினை
அள்ளி அரவணைத்து
முத்தமொன்றை பரிசளிக்கிறேன்
பின்னராக பொம்மைகள் வரைந்திருக்கும் பீங்கானில்
சோறு பரிமாறுகிறேன்
உடன் என் பொம்மைகளுக்கு
சுடுமென்று சொல்லி
இன்னும் உரமாக
அழுது புலம்பும் குழந்தையை
எப்படி ஆற்றுப்படுத்துவதென்று எனக்குப் புரியவில்லை
குழந்தையின் கண்களில்
வரையப்பட்டிருக்கிறது
அம்மாவிற்கு நிகரான
எல்லையற்ற பாசம்
ஜமீல்


(2). VAGRANT WIND

The wind knows not
to travel quietly
Has none taught it
to be organized; upright?
Barging into nooks and crannies
breaking some
grazing some
It goes on and on
Ants that never go anywhere
near the school
even in rain
going in a line
Hasn’t the wind seen?
What anguish weighs heavy inside
making it swing its hands and legs
all along its course -
Who knows…..
Throughout its trail
withered leaves are strewn
with wounds still bleeding
But
Wind is brainy
It leaves not its imprints _
if there is any or many.

Abdul Jameel

ஒழுக்கமற்ற காற்று
_______________________
காற்றுக்கு அமைதியாக
பயணிக்கத் தெரியவில்லை
அதற்கு யாரும் ஒழுக்கத்தை
கற்றுக் கொடுக்கவில்லையா என்ன
சந்து பொந்தெல்லாம் பூந்து
சிலதை உடைத்துக் கொண்டும்
சிலரை உரசியவாறும் செல்கிறது
மழைக்குக் கூட பள்ளிப் பக்கம்
ஒதுங்கா எறும்புகள்
வரிசையில் செல்வதை
காற்று கவனிக்க வில்லையா
தன் கை கால்களை
சும்மா வைத்திராதபடி
அப்படி என்னதான் மன உளைச்சலோ
அது செல்லும் வழி நெடுகிலும்
உதிர்ந்து கிடக்கின்றன
காயம் ஆறாச் சருகுகள்
ஆனால் காற்று மதியுள்ளது
தன் கால் தடங்களை
ஒரு போதும் விட்டுச் செல்வதில்லை.
ஜமீல்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE